சேலத்து சுவைரிப்போர்ட் : சுபா -சேலத்தில் மாம்பழம் மட்டுமல்ல, சேர்வராயன் மலைத் தொடரும், ஏற்காடு ஷேவராய்ஸ் ஹோட்டலும் மிகப் பிரசித்தம். ஏற்காடு ஒரு சுற்றுலாத்தலமாகப் பிரபலமாவதற்கு முன்பாகவே 1971ல் ராமசாமி உடையார் அவர்களால் நான்கே தங்கும் அறைகள் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஷேவராய்ஸ் ஹோட்டல், இப்போது மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது.

ஐம்பது வருடப் பயணத்தைக் கடந்து, தற்சமயம் திரு.தேவதாஸ் அவர்களின் நிர்வாகத்தில் இதன் கிளையாக சேலம் மரவனேரியில் ஃபுட் ஸ்டேஷன் ஃபேமிலி ரெஸ்டாரென்ட் துவங்கப்பட்டுள்ளது. வித்தி யாசமான, படு ருசியான உணவு வகைகளை அறிமுகப் படுத்தி சைவ, அசைவ உணவு ரசிகர்களின் ஆன் லைன் ஆர்டர்களை அன்பு கலந்த அக்கறையோடு நிறைவேற்றி வருகின்றனர். நம் வாசகிகளுக்காக அவர்கள் தந்த ஸ்பெஷாலிட்டி ரெசிபிஸ் இதோ:

கிரெஞ்சி டயட் சாலட்

தேவை:

லெட்டுஸ் இலை- 250 கிராம், வெள்ளரிக்கா- 50 கிராம், ஆப்பிள்- 2, தக்காளி - 2, அன்னாசிப்பழம்-200 கிராம், ஆலிவ் ஆயில் - 50 மில்லி, குருமிளகுப் பொடி - 10 கிராம், உப்பு - தேவைக்கேற்ப, எலுமிச்சைச் சாறு - தேவைக்கு.

செமுறை:

வெள்ளரிக்கா, லெட்டுஸ் இலைகள், தக்காளி, அன்னாசிப் பழம், ஆப்பிள், விதைகள் அகற்றிய பெங்களூர் தக்காளி ஆகியவற்றைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமான ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும். இதனுடன் ஆலிவ் ஆயில், குருமிளகுப் பொடி, எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு

உப்பு சேர்த்து நன்கு கலக்கினால் சுவையான சாலட் தயார்.

சீத்தாப்பழம் கிரீம் டிலைட்

தேவை:

சீத்தாப்பழம் - 250 கிராம், வெண்ணிலா ஐஸ்கிரீம் - 250 கிராம், ஃப்ரெஷ் கிரீம் - 100 மில்லி, வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்.

செமுறை:

மிக்சியில் வெண்ணிலா ஐஸ் கிரீம், ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு நன்கு ஓட விடவும். பின் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மீண் டும் அரைத்து, கொட்டைகள் அகற்றிய சீத்தாப் பழத்தை சேர்த்துக் கலக்கவும். இக்கலவையைக் கிளாசில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறினால் வித்தியாசமான சுவை அள்ளும்.

கார்ன் அண்ட் சீஸ் பால்ஸ் ஸ்டஃப்டு

வித் மின்ட்

தேவை:

உருளைக்கிழங்கு -1 பெரியது வேகவைத்தது, மக்காச்சோளம் - 100 கிராம், Mozzarella சீஸ் - 200 கிராம் (இது கிடைக்காதபோது சாதா சீசிலும் செயலாம்.) மல்லித்தழை - 50 கிராம், புதினா -தேவைக்கு, உப்பு - தேவைக்கேற்ப, குருமிளகுப் பொடி - 10 கிராம், கார்ன் ஃப்ளார் - 50 கிராம், பச்சைமிளகா 3, பிரட் தூள் - தேவைக்கேற்ப, எண்ணெ - தேவைக்கேற்ப.

செமுறை:

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய சீஸ், வேகவைத்த மக்காச்சோளம், உப்பு, மல்லித் தழை, பொடியாக நறுக்கிய பச்சைமிள கா, குருமிளகுப்பொடி, கார்ன் ஃப்ளார் ஆகியவற் றைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பொடியாக நறுக்கிய புதினாவை இந்தக் கலவையின் நடுவே வைத்து, சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். கார்ன் ஃப்ளாருடன் மைதாவைச் சேர்த்துச் சிறிது

நீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்து, அதில் இந்த உருண்டைகளைப் போட்டு எடுத்து ரொட்டித் தூளில் நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும். சூடான வாணலியில் எண்ணெ ஊற்றி, உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தக்காளி

சாஸுடன் சூடாகச் சாப்பிட்டால் புதினாவின் மணத்துடன் சூப்பராக இருக்கும்.

Post Comment

Post Comment