சின்ன கணக்கன்


பட்ஜெட்
-ஒரு பக்கம்

முதன்முறையாக அச்சுக் காகிதங்களே பயன் படுத்தாமல் முழுக்க முழுக்க டிஜிட்டல் பட்ஜெட்டாக நிதியாண்டு 2021-2022க்கான நிதி நிலை யறிக்கையை வெளியிட்டிருக்கிறார் நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த பட்ஜெட்டில் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அம்சங்களும் சிறப்பு அறிவிப்புகளும் வெளியாகியிருந்தன. பல்வேறு துறைகளில் சென்ற ஆண்டு

பட்ஜெட்டை விட அதிகளவு நிதி ஒதுக்கீடும் இருந்தது. வருமானவரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் செயப்படவில்லை. பலர் அச்சத்துடன் எதிர்பார்த்திருந்த கொரோனா கட்டுப்பாட்டுக்கான மேல் வரி எதுவும் விதிக்கப்படவில்லை.

சரிந்து விட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தொலைநோக்குடன் அடுத்த 10 ஆண்டுகளில் பலன் கொடுக்கக்கூடிய பெரும் கட்டுமானப் பணி களுக்கான கட்டமைப்புத் திட்டங்கள், மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில் பாதை களின் விரிவாக்கம் போன்றவை அறிவிக்கப்பட் டிருக்கின்றன. இந்த மெகா திட்டங்களுக்கான நிதி ஆதாரங்களைப் பெருக்க அன்னிய முதலீடுகளை வரவேற்க வழிவகைகள் செயப்பட்டிருக்கின்றன. காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், எல்ஐசி நிறுவனப் பங்குகள் 2022ல் விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 3,500 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ் சாலைப் பணிகளுக்காக 1.03 லட்சம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலைத் திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை பட்ஜெட் அறிவிக்கப்படும் போதும் இதைத் தவிர்த்திருக்கலாம், இதைச்

சேர்த்திருக்கலாம் என்று எதிர்க்கட்சிகளும் வல்லு நர்களும் சொல்லுவது வாடிக்கை.

ஆனால், இம்முறை ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு பெரும் நோத்தொற்று கொள்ளை கொண்ட சூழலில் நலிந்துவிட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு அரசு, இதை விடச் சிறந்த பட்ஜெட்டை அளிக்க முடியாது என்ற விமர்சனமே பரவலாக எழும்பியுள்ளது.மறுபக்கம்

2021 மத்திய பட்ஜெட்டில் மத்திய தர மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை.

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து நாட்டு மக்

களுக்குக் கடுமையான நிதி நெருக்கடியும் வேலை யின்மைப் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச்சலுகை ஏதேனும் அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எவ் வித சலுகை அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சலுகை மட்டுமே இடம் பெற்றிருந்தது. அதைக்கூட வரிச் சலுகை எனச் சொல்ல முடியாது. குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ள சிலருக்கு வரிசெலுத்துவதற்கான படிவங்களைச் சமர்ப் பிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது அவ்வளவே.

கொரோனா மீட்புப்பணிகளுக்காகப் புதிய வரிகள் இல்லை என்று சொல்லப்பட்டாலும் பெட்ரோல் - டீசல் மீது வேளாண் உள்கட்டுமான மேம்பாட்டு வரியாக

2.5 சதவீதத்தை நிர்ணயித்திருப்பது சாமானியனை நேரடி யாகத் தாக்கும் விஷயம். இந்த அறிவிப்பால் பெட்ரோல் - டீசல் விலை கடுமையாக உயரும். அதன் விளைவாக எல்லாம் விலையுயரும் அபாயம் எழுந்திருக்கிறது.

அடுத்தபடியாக இன்று எல்லாத் தரப்பு மக்களின் வாழ்வில் ஒர் அங்கமாகிவிட்ட மொபைல் போன் பாகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தியதால், இதனால் வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல் போன்கள் போன்றவற்றின் விலை உயரும்.

கிராமப்புறப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான

சிறப்பு அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. மாறாக 100 நாள் வேலைத் திட்டம், விதவைப் பெண் களுக்குப் பென்ஷன் போன்ற திட்டங்களில் மத்திய அரசு தனது நிதி ஒதுக்கீட்டை 10 சதவீதம் குறைத்திருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் எதுவுமில்லை. மிகப்பெரிய எண்களுடன் அறிவிக்கப்பட்டிருக்கும் பிரம் மாண்டமான கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்தும்

நீண்ட காலத் திட்டங்கள். மேலும், கூடுதல் திட்ட நிதி ஒதுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலைப் பார்க்கும் போது, இது ஒரு தேர்தல் பட்ஜெட் என்பது தெள்ளத்

தெளிவாகிறது.

Post Comment

Post Comment