இது பெண்களின் பிரச்னை- ராஜி ரகுநாதன், ஹைதராபாத் -இருமினாலும் தும்மினாலும் சிறுநீர் சொட்டு கிறது என்று முறையிடும் பெண்கள் அதிகம் பேர் உள்ளார்கள். புல் தடுக்கினாலும் பெண்களுக்கு முதலில் பாதிக்கப்படுவது இடுப்பும் சிறுநீர்ப்பை யும்தான்.

நான்கு தோழிகள் அரிதாக எங்காவது திரு

மணத்திலோ விழாவிலோ சந்திக்கும்போது பல சுவையான செதிகளைப் பகிர்ந்து கொள்வது இயல்பு. சிரிக்கச் சிரிக்க வயிறு வலிக்கப் பேசு வோரைப் பார்க்கிறோம். ஆனால், அவர்களுள் சிலர் சிரித்துக்கொண்டே பாத்ரூமைத் தேடி ஓடு வதையும் காணமுடியும். சிரித்து சிரித்து ஒண்ணுக்கு வந்து விட்டது" என்று கூறிக் கொண்டே ஓடுவார்கள். ஆனால், இது நகைச்சுவைக்கான விஷயம் அல்ல. சீரியசான பிரச்னை.

கைகால்களில் தண்ணீர்பட்டாலோ... சிலருக்குத் தண்ணீ ரைப் பார்த்தாலோ... குழாயில் நீர் சொட்டும் சத்தம் கேட்டாலோ கூட பல பெண் களுக்கு சிறுநீர் வந்துவிடு கிறது. பெண்கள் இயல்பான அடக்க குணத்தால் இவற்றை வெளியில் சொல்வதில்லையே தவிர நிறைய பெண்கள் இத் தகைய சிரமங்களை அனு

பவித்து வருகிறார்கள் என்பது உண்மை. அதுவும், மெனோ பாஸுக்குப் பிறகு பெண் களுக்கு இந்த அவதி அதிக மிருப்பதைப் பார்க்கமுடிகிறது.

இதற்கான காரணங்களை அறிவதோடு அணுகுமுறையும் தீர்வும் என்ன என்பதையும் அறிந்தால், பெண்கள் இத்தகைய இக்கட்டிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

காரணங்கள்:-

1.வயிறு நிறைய உணவு உண்டபின் இரப்பை கீழுள்ள சிறுநீரகப் பைக்கு அழுத்தம் கொடுப்பது.

2.நீரிழிவு நோ கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பது.

3.அடிக்கடி டீ காபி அருந்துவது.

4.முதுமையில் தளர்வு வருவது.

5.நார்மல் பிரசவத்தின்போது (குழந்தையை இழுப்பதால்) தளர்ந்து போன கர்ப்பப்பை, கீழே சிறுநீரகப் பையை அழுத்துவது.

6.மலச்சிக்கல் காரணமாக முக்கி மலம் கழிப்பது.

7.பேதி மருந்து அதிகம் உட்கொள்வது.

அணுகுமுறை:-

1.வீட்டை விட்டுக் கிளம்பும் முன் டீயோ, காபியோ அருந்தாமல் கிளம்பினால் சில மணி நேரங்களாவது பாத்ரூமைத் தேடாமல் இருக்க முடியும்.

2. உள்ளாடை பேடுகள், லைனர்கள் கிடைக் கின்றன. இருமல் தும்மல் காரணமாக சொட்டும் சிறுநீரை இவை உறிஞ்சிக் கொள்ளும்.

3. இதற்கென்று ‘டிபெண்ட்’ போன்ற பாதுகாப்பு நாப்கின்கள் விற்பனைக்கு வந்துள்ளபோதும் இன்னும் நம் நாட்டில் இவற்றை உப யோகிப்பவர்கள் அரிதே! நடமாட்டமின்றிப் படுக்கையில் இருப் பவர்களே இவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

4.மருத்துவர்கள் அறு வைச் சிகிச்சை மூலம்

சிறுநீர்ப்பையை மேலே தூக்கி வலை வைத்து தையல் போடு வார்கள். ஆனால் இது தாற்காலிக மானது, கியாரண்டி கிடையாது என்று மருத்துவர்களே தெரிவிக் கிறார்கள்.

தீர்வு:-

தசைகளை உள்ளிழுத்தும் வெளிவிட்டும் செயக்கூடிய எக்செர்சைஸ் மூலம் தளர்ந்து போன யூரினரி பிளாடர் தசைகள் பலமடைய வாப்புண்டு.

அதேபோல் சிறுநீர் கழிக்கும்போது சற்று அடக்கி மீண்டும் வெளிவிட்டு... இதுபோல் சில முறை செவதால் பிளாடர் தசைகள் வலுவடையும். சிறுநீரை அடக்குவதும் விடுவிப்பதுமான இந்தப் பயிற்சியையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஓவு நேரங்களில் பெண்கள் தாமாகவே மனதை ஒருநிலைப்படுத்தி சிறுநீர்ப்பையை உள்ளிழுப்பதும் விடுவிப்பதுமான உடற்பயிற்சியை செது தசைகளை பலப்படுத்திக் கொள்வதுதான் இதற்கான ஒரே தீர்வு.

பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியும் சில யோகாசனங்களும் உரியவர்களிடம் கற்று இந்த உபாதையிலிருந்து பெண்கள் தம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.

Post Comment

Post Comment