‘தூரம்!’சிறுகதை : ஹனி பாபுச்சந்திரன் - ஓவியம் : சேகர்அடிவயிறும் இடுப்பும் ஒருசேர வலித்தபோது, மூளை அனிச்சையாக இன்று என்ன தேதி என யோசித்தது. 20நாள்தானே ஆகிறது. போனதடவை 50 நாளில் வந்த ஞாபகம். வாழ்க்கையில் எனக்குப் பிரச்னை கொடுக்காமல் இருந்தது. மாதந்தவறாமல் வரும் மாதவிலக்குதான். வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. ஆனால், கடந்த ஐந்து மாதங் களாக முறையற்ற மாதவிலக்கு... முதல் இரண்டு நாட்களுக்கு அதிக படபடப்பு. உடல் சூடாகி, நனைந்து போகுமளவு வியர்த்துக் கொட்டுவது அல்லது நடுக்குமளவு குளிர்வது என என்னை ஒரு வழி பண்ணுகிறது.

போன மாதம் எங்கள் திருமண நாளில், பக்கத்திலுள்ள கோயிலுக்கு அர்ச்சனை, அபிஷேகம் என ஏற்பாடு செய்து, எல்லோருமாகக் கிளம்பிய நேரம் தூரமாகிவிட்டேன். மிகவும் சங்கடமாகிவிட்டது. என்னைத் தவிர மற்றவர்கள் சென்றார்கள். அதற்கும் போனமுறை ஊருக்குப் போய்க்கொண்டிருந்த போது தூரமானேன். டிரெயின் என்பதால் பிரச்னை இல்லை. பஸ்ஸாக இருந்திருந்தால் அதோகதிதான்!

இந்த முறை இப்படி... எந்தவொரு முன்னேற் பாடுமில்லாமல் வந்துவிட்டேனே... ! கடவுளே!! பஸ் உடனே வந்தாலும் லு மணி நேரம் ஆகிவிடும் வீடு போய்ச் சேர. அலு வலகத்திலிருந்தபோது வந்திருந் தால்கூடச் சமாளித்திருக்கலாம். இப்படி பஸ் ஸ்டாப்பிலா ஆக வேண்டும். இந்தத் தொல்லை இன்னும் எத்தனை மாதங் களுக்கோ வருடங்களுக்கோ தெரியவில்லையே...

மனது அலைபாய்ந்து கொண்டிருந்தபோது, வந்த பஸ்ஸில் அவசரமாக ஏறினேன். நான் அவசர மாக ஏறினால் மட்டும் பஸ் பறந்தா போகிறது? ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் நின்று நின்று சாவ காசமாக அல்லவா போகும்! உட்கார இடமிருந் தாலும் உட்கார முடியாது. இன்று புடைவை கட்டியிருப்பதால் கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்கும்.

மாமியாரிடம் காலையில்தான் சொல்ல

வேண்டும். இப்போது சொன்னால் தலைகுளிக்க வேண்டும். இடுப்பை யாரோ சம்மட்டியால் அடிப்பது போன்றும், காலை டிரில்லிங் மெஷினை வைத்துக் குடைவது மாதிரியும் இருந்தது. வீட்டில் போய் பொத்தென படுக்கையில் விழ வேண்டும் போல் தோன்றியது. ஆனால், அதற்கெல்லாம் என்னைப் போன்ற வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு எப்படிச் சாத்தியம். இது போன்ற நாட்களில் யாராவது உட்கார வைத்து தட்டில் சோறு போட மாட்டார்களா? என்றிருக்கும்... பேராசைதான்!

இதோ வியர்க்க ஆரம் பித்துவிட்டது. இதைப் பற்றி டாக்டரான தூரத்துச் சொந்தத்திடம் கேட்டதற்கு, இது மெனோபாசின் அறி குறி என்றும், எதற்கும் மருத்துவமனைக்கு வந்து ஒரு ஸ்கேன் பண்ணிக் கொள் ளவும் சொன்னாள். அதற்குச் செலவழிக்க மனமின்றி ஒத்திப்போட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஒரு நாள் வீட்டுக்கு வந்த அம்மா விடம் கேட்டபோது, நாப்பது வயசு தாண்டி னாலே இதே பிரச்னைதான்... உனக்கு என்ன பண்ணப் போகுதோ..."

அலுவலகத்தைக் கூட்டும் கமலாவிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில், அத ஏம் பாப்பா கேக் கற... ஒரே பாடாப் படுத்தித்தான் நின்னுச்சு.

நீங்களும் ஹேண்ட்பேக்குல அட்டய வச்சிக்கிட்டு வந்துடுவீங்க... நாங்கல்லாம் துணி உபயோகப் படுத்துவோம். என்ன பண்ணறது சொல்லு. நாலு எடத்துல வேலை பாத்தாலும் பாத்ரூம் போறதுக்கே படாதபாடு படணும். அதல இது வேற. உங்கூட இருக்குமே ராகினி பாப்பா, இந்தத் தொல்லைக்குப் பயந்துதான் நாப்பத்தஞ்சு வயசுக்குள்ளேயே கர்ப் பப்பையை எடுத்துருச்சி! வேணா அதயே

கேளேன்" என நீண்ட பிரசங்கமே ஆற்றிவிட்டார்.

இதையேதான் ராகினி சொன்னாள். எனக்கு பொதுவாகவே இர்ரெகுலர் பீரியட்ஸ்தான். ரெண்டு டெலிவரி முடிஞ்சிட்டு. இது எதுக்குத் தேவை யில்லாத லக்கேஜ்னு, எங்க டாக்டர்கிட்ட சொல்லி வாலண்டிரியா ரிமூவ் பண்ணிக்கிட்டேன். நீயும் அப்படியே பண்ணிடு!"

அவளது பேச்சு எனக்கு எரிச்சல் மூட்டியது. கர்ப் பப்பை என்ன பேப்பர் கப்பா? உபயோகித்தவுடன் தூக்கி எறிவதற்கு? கொஞ்ச நாள் கஷ்டப்பட்டுத் தான் ஆக வேண்டும்.

என் ஸ்டாப்பிங் வந்துவிட்டது. வேகமாக நடை போட முடியாததால் மெதுவாக நடந்தேன். இரவு உணவுக்கு மகன் சப்பாத்தி கேட்டிருந்தான். இருக் கும் அசதியில் எல்லாருக்கும் சப்பாத்தி போட முடி யாது. இட்லி மாவும் கொஞ்சமாக உள்ளதால் ஒரு பாக்கெட் இட்லி மாவும், அதற்கு மிளகாய்ப் பொடி பாக்கெட்டும் வாங்கிக்கொண்டேன். காய்கறி வாங்கினால் நேரமாகிவிடும். சமாளிக்க முடியாது.

வீட்டை அடைந்ததும் முதலில் கண்ணில் பட்டது, வாசலில் கிடந்த இரண்டு

ஜோடி புதுச்செருப்பு. யோசித் துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். நினைத்தது மாதிரியே உள்ளூரிலேயே இருக்கும் நாத்தனாரும் அவள் கணவரும். அவர்களை வரவேற்றுக்கொண்டிருந்த போதே, என் மாமியார், அவங் களுக்கு நான் காப்பி போட்டுக் கொடுத்துட்டேன். ராத்திரி அவங்க சாப்பிடறதுக்கு ஏதாவது போய் சீக்கிரமா செய்... சாப்பிட்டு அவங்க கிளம்பணும்."

எப்போதும் கட்டளைதான்! மகள், மருமகனுக்கு முன் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்!

என் கையிலிருந்த பொருட்களைப் பார்த்தபடியே நாத்தனார், வேலைக்குப் போறவங்களுக்கு இதெல்லாம் எத்தனை சௌகரியம். இஷ்டத்துக்கு இந்த மாதிரி ரெடி டு ஈட் வாங்கிக்கலாம். யாரும் கேள்வியே கேக்க மாட்டாங்க. தனிக்குடித்தனம் இருக்குற என் ஓர்ப்படி இப்படித்தான் நிறைய நாள் சட்னி, சாம்பாரே வெளியதான் வாங்கிப்பா! அவள என் மாமியார் ஒண்ணு சொல்ல மாட்டாங்க. ஏன்னா நா வேலைக்குப் போகலைங்கற எகத்தாளம்... ம்ம்ம்..." என்றாள் பெருமூச்ச விட்டபடியே.

அவளுக்குப் பதிலேதும் சொல்லாமல் இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என யோசித்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

Post Comment

Post Comment