ஒரு வார்த்தை!அனுஷா நடராஜன் -அன்று செய்தித்தாளைப் பிரித்ததும், நிஜமாகவே, ஒரு பெண்ணாக என்னைப் புல்லரிக்க வைத்த அந்த விஷயம் கண்ணில் பட்டது.

‘சி.ஆர்.பி.எஃப். வரலாற்றில், முதல்முறையாக கோப்ரா படையணியில்

34 பெண் கமாண்டோக்கள் இணைப்பு!’ என்ற செய்திதான் அது!

மத்திய ரசர்வ் போலிஸ் படையில் நக்சல் தடுப்புப் பிரிவில், 88வது பட்டாலியனில் முழுக்க முழுக்க மகளிர் மட்டும் இடம் பெற்றுள்ளனர் என்பது எவ்வளவு பெரு மைக்குரியது! அதுவும் உல கிலேயே முதன் முறையாக!

அஞ்சாத பெண் சிங் கங்களே! உங்கள் வீரதீரப் பண்புகள் நாட்டுக்கு முழுமையாகப் பயன்படும் வகையில் வெற்றி நடை போடுங்கள்"னு மனதாரப் பாராட்டி விட்டு அடுத்த பக்கம் புரட்டினால்... அப்படியே உல்டாவாக இன்னொரு செய்தி!

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் நவாஸ் ஷேக். அவரது மனைவி சனா. இருவரும் ஒரே பி.என்.ஆர்.இல் இரண்டு இ.டிக்கெட்டுகளைக் காட்டிவிட்டு சென்னை விமான நிலையத்துக்குள் சென்றுள்ளனர். அதோடு, பாதுகாப்பு சோதனைப் பகுதிகளுக்கும் இருவரும் அதே இ-டிக் கெட்டுகளைக் காட்டிச் சென்றுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, இளம்பெண் சனா மட்டும் தனியாக வந்து வெளியே போக முயன்றிருக் கிறார். பணியில் இருந்தவர்கள் தடுத்து விசாரிக்கவே, தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். சந்தேகப்பட்ட

போலிஸ், துருவித் துருவி விசாரிக்கவே, வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறார்.

எங்களுக்கு அண்மையில்தான் கல்யாணமாச்சு. என் கணவர்

வேலைக்காக ஷார்ஜா போறார். அவரை வழியனுப்ப நானும் கூட

வந்தேன். விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், என் கணவரின் ஒரிஜினல் டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, எனது பெயரை இணைத்து போலி இ-டிக்கெட் தயாரித்தோம். அவரது விமானம் புறப்பட்டுப் போனதும், நான் வெளியேறிவிடலாம் என

நினைத்தேன். நான் செஞ்சது தவறுதான்... மன்னிச்சுடுங்க!" என்று அழுதிருக்கிறார். சனா இப்போது கைதாகியுள்ளார்!

* * *

பெண்கள் துணிச்சலாக இருக்க வேண்டும்தான். ஆனால், எங்கே, எதற்கு, எப்படி என வரைமுறை உள்ளது. கமாண்டோ படையில் பணியாற்ற டேர் டெவிலாக இருக்கலாம். அதே துணிச்சலும் தைரியமும் தன்னம்பிக்கையும் குற்றச் செயல்களில் ஈடுபடும்போதும் இருப்பது வெட்கக்கேடு இல்லையா? அவமானச் சின்னம் ஆகிவிடாதா?

சும்மா கெத்து காட்றோம்!" என்று எதையாவது செய்வது எத்தனை பெரிய முட்டாள்தனம்!

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை இல்லையா?

Post Comment

Post Comment