சிறப்புமிகு குராமலர்-திருமுருகப் பெருமான் உறையும் புகழ்பெற்ற திருத்தலமான திருவிடைக்கழி, நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் தில்லையாடியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இங்குள்ள ஐந்நூற்று விநாயகர் கோயில் எதிரில்

திருவிடைக்கழி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது.இந்தத் திருவிடைக்கழி திருத்தலத்தில் ‘குரா மரம்’ என்னும் அதிசயமான ஒரு தலவிருட்சம் உள்ளது. இந்தக் குரா மரத்தடியில் முருகன் சிவபெருமானைப் பூசித்தாராம். மாதவர்கள், முனிவர்கள், தேவர்கள் இப்படி அனைவரும் வந்து பூசித்த இந்த இடத்தில் முருகன் உலவி வந்தாராம்.

சிறக்கு மாதவர் முனிவரர் மகபதி இருக்கு வே தனும் இமையவர் பரவிய திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெரு மானே!" என்று அருணகிரிநாதர் திருப் புகழில் போற்றுகிறார்.

‘குரா’ என்னும் இரண்டெழுத்தைத் திருப்பினால் ‘ராகு’ என்று வரும். எனவே தான் ராகு கிரகத்துக்கும் குரா மரத்துக்கும் ஓர் அதிசயமான தொடர்பு உள்ளது. தமிழ்நாட் டில் தலவிருட்சம் மிக விசேஷமாக உள்ள இடங்கள் இரண்டு. ஒன்று காஞ்சி மாவடி; மற்றொன்று திருவிடைக்கழி குராவடி. இந்தக் குரா மரத்தடியில் ராகு பகவான், முருகனைப் பூசித்துப் பேறு பெற்றதால் இது ராகு தோஷம் நீங்கும் தலம். இந்த ஊரில் பாம்பு யாரையும் கடித்த தில்லை. இக்கோயிலில் நவகிரக சன்னிதியும் இல்லை.

‘குராமரம்’ திருவிடைக்கழி தலத்தில் மட்டுமே தலவிருட்ச மாகக் காணப்படும் ஓர் அபூர்வ மரமாகும். திருமுருகப் பெருமான் விரும்பி அணியும் மலர்களில் குராமலர் குறிப்பிடத்தக்கது.

குரா மலரில் முருகனது பாதம் ஒளிந்திருக்கிறது" என்கிறார் அருணகிரிநாதர். தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் தெய்வத் தன்மையுடைய மலராக, தெய்வங்களால் விரும்பப்படும் ஒப்பற்ற மலராக ‘குராமலர்’ குறிப்பிடப்படுகிறது. சிவன், பார்வதி, திருமால், லட்சுமி, முருகன், வள்ளி இப்படி அனைவரும் விரும்பி அணியும் மலர் ‘குரா’ மலராகும். சமண, புத்த இலக்கியங்களிலும் குரா மலரின் பெருமை பேசப்படுகிறது.

சிறியதாக, கொத்துக் கொத்தாகப் பூக்கும் இந்த மலர் வெண்மை நிறமுடையதாக இருக்கும். இள

வேனிற் காலத்தில் பூக்கும். பூக்கும் தருணத்தில் மிகுந்த மணம் காற்றில் கலந்து பரவும். இந்த மணத் தில் கவரப்பட்டு குயில்கள் அங்கு வந்து பாடும். பூக்கும் தருணத்தில் அதன் அரும்புகளில் மிகுதி யாகத் தேன் சுரக்கும். இந்தத் தேனைப் பருகிட பல்வேறு வண்டுகள் கூட்டமாய் வந்து குரா மரத் தைச் சுற்றி மொய்க்கும். குரா மலரின் அரும்பு மிகக் கூர்மை கொண்டுள்ளதால் பாம்பின் பல்லுக்கு உவமையாகக் குறிப்பிடுவர். குரா மரத்து இலையும் ஓர் அற்புதமான மூலிகையாகும். இது விஷத் தன்மை நீக்கும் ஆற்றல் வாய்ந்தது.

சேந்தனார் என்னும் சிவனடி யார், திருவிடைக்கழி அழகன், முருகனை தமது திருவிசைப் பாவில் பாடி இன்புற்றார். பதினொரு பாடல் களும் பக்திச் சுவைமிக்க இனிமையான பாடல்கள். செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழிற்கீழ் நின்ற எழுங்கதி ரொளியை ஏத்துவார், கேட்பார் இடர் கெடும் மாலுலா மனமே!" என்கிறது அகப்பொருள் துறையில் அமைந்த அந்தாதிப் பாடல்.

திருவிடைக்கழி முருகனையும் குரா மரத்தையும் சேர்த்து வலம்வந்து வணங்கினால் லோகமும், போகமும் கிடைக்கப் பெற்று இன்புற்று

வாழ்வார்.

இலக்கிய நூல்களிலிருந்து;

தொகுப்பு: ஆர். சந்திரிகா, சத்தியமங்கலம்

Post Comment

Post Comment