‘‘இது விவசாயத்துக்குக் கிடைத்த விருது’’


பத்மஸ்ரீ பாப்பம்மாள்
சந்திப்பு : கோவை குமரேசன் - படங்கள் : தமிழ்செல்விஇந்த வயசுல நீங்கள் விவசாயம் செவதைப் பார்த்து எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு... உங்களைப் போன்ற தாமார்கள்தான் இன்று

விவசாயத்துக்கு முதுகெலும்பா இருக்கீங்க..."

என்று பாப்பம்மாள் பாட்டியைப் பாராட்டினார்

தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின்.

பாப்பம்மாள் பாட்டி கோவை மேட்டுப் பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார்.

103 வயதில் விவசாயம் செது வரும் இவரின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் சலசலத்து ஓடி வரும் பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது தேக்கம்பட்டி கிராமம்.

ஊரைச்சுற்றி பசுமையும் வளமையும் செழித்துப் பரவியிருக்கிறது. பசுமை வயல் வெளியின் நடுவே மண்வெட்டியால் வயல்வெளியை சீர்செத

படியே பேசுகிறார் சாதனைப் பாட்டி பாப்பம்மாள்...

எனது தந்தை மருதாசலம் முதலியார்- தாயார் வேலம்மாள். இவர்களின் மகளாக 1915 ஆம் ஆண்டு நான் பிறந்தேன். என்னுடன் நஞ்சம்மாள், பழனியம் மாள் ஆகிய இரண்டு சகோதரிகளும் பிறந்தார்கள். எனது சிறுவயதிலேயே தா தந்தையை நான் இழந்து விட்டேன். அதன்பிறகு எங்களுடைய பாட்டி எங்கள் மூவரையும் தேக்கம்பட்டி அழைத்து வந்தார். இந்த ஊரில் மளிகைக் கடை வைத்து வாழ்க் கையை நடத்தி வந்தார். இந்தக் கடையை வைத்து நாங்கள் மூவரும் வாழ்க்கையை நடத்தத் தொடங் கினாலும், பாட்டி இறந்த பின் மளிகைக் கடையை நானே முழுமையாகக் கவனித்துக் கொண்டேன். இதே கிராமத்தில் ஓட்டல் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஓட்டலைத் தொடங்கி நடத்தினேன்.

1992ம் ஆண்டு எனது கணவர் ராமசாமி மரண மடைந்தார். இதையடுத்து கடைகளின் மூலம் ஈட்டிய வருமானத்தை சேமித்து வைத்து தேக்கம் பட்டியில் விவசாய நிலத்தை வாங்கி விவசாயம் செய முடிவு செதேன். தேக்கம்பட்டியில் பவானி ஆற்றின் அருகில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் அவரை, துவரை, பச்சைப் பயறு மற்றும் வாழை பயிரிட்டு வந்தேன்" - என்று விவரிக்கிறார் பாப்பம்மாள்.

நான் செயும் இந்த விவசாயப் பணிகளுக்கு எனது சகோதரிகளும் குடும்பத்தாரும் உறுதுணை யாக இருந்து உதவினார்கள். இதற்கிடையே என் உடன் பிறந்த இரண்டு சகோதரிகளும் இறந்ததால் அவர்களின் மகள்களுடன் ஒன்றாகத் தற்போது

வசித்து வருகிறேன்.

இந்த நிலத்தில் சீசனுக்கு ஏற்ப கிடைக்கும் பயிர் களைப் பயிரிட்டு வருகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தை விட விவசாயப்பணி எனக்கு திருப்தி அளிக்கிறது. என்னுடைய விவசாய நிலத்தைப் பார்வையிட கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்வார்கள். அவர்கள் நான் விவசாயம் செவதையும் விவசாயத்தில் தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் குறித்த செதிகளையும் எனக்குச் சொல்வார்கள். நான் தினமும் வயலுக்கு வந்து பணி செவதைப் பார்த்து என்னைப் பற்றிய விவரங் களை அவர்கள்தான் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னரே மத்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருதை எனக்கு வழங்கியுள்ளது.

பத்து வருஷத்துக்கு முன்பு வரை காலை உண வாக சத்து நிறைந்த கம்பு, ராகி, சோளம் ஆகியவற்றை மட்டுமே உணவாகச் சாப் பிட்டு வந்தேன். மதிய உணவாக கம்பங் களி, ராகி களி, கீரை வகைகள், இரவு நேரத்தில் கொள்ளு, அவரை உள்ளிட்ட தானிய வகைகளை உணவாக எடுத்துக் கொள்வேன். வயது அதிகரித்ததன் காரண மாக, தற்போது உணவை அளவாகவே எடுத்து வருகிறேன். குறிப்பாக வாழை யிலையில் உணவு சாப்பிட்டு வருகிறேன். அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறிக் குழம்பு, பிரியாணி போன்ற வகைகளை விரும்பிச் சாப்பிடுவது உண்டு. எனது சிறிய வயதில் எனது கிராமத்தில் பள்ளிக்கூடம் என்று எதுவுமில்லை.ஆனால், அங்கு உள்ள சத்திரம் ஒன்றில் எழுதிப் பழகினேன். வீட்டுவேலை, விவசாய வேலை செது வந்த காரணத்தினாலும் தொடர்ந்து வேலை செத காரணத்தினாலும் எந்த நோயும் என்னை அண்ட வில்லை. வயிற்றுவலி வந்தால் வெற்றிலையில் உப்பை வைத்துச் சாப்பிடுவது, தலைவலி வந்தால் நெற்றியில் கொட்டைப் பாக்கு வைத்து குணப்படுத் துவது என்று பரம்பரை வீட்டு வைத்தியத்தைச் செது கொண்டதால், பெரிய நோ எனக்கு எதுவும் வரவில்லை" என்கிறார் பாப்பம்மாள்.

பத்மஸ்ரீ விருது கிடைத்தவுடன் இந்த ஊரே அதைக் கொண்டாடியது... தேக்கம்பட்டியில் உள்ள எல்லா மக்களும் என்னைத் தேடி வந்து பாராட்டிட்டு போனாங்க... தேக்கம்பட்டில இருக்குற எல்லா வீட்டுக்கும் நான் போயிட்டு வருவேன்... இந்த ஊர் ஜனங்கள் என்னோட நல்லது கெட்டது எல்லாத்துக்கும் வருவாங்க... நானும் போட்டு வருவேன். இந்த விருது எனக்கு மட்டும் கிடைக்கலே, தேக்கம் பட்டி மக்களுக்குக் கிடைச்சதாதான் இந்த விருதைப் பார்த்தேன்... இதைப் பார்த்து மத்தவங்களும் விவசாயம் செய வரணும். குறிப்பாக பெண் களும் விவசாயம் செஞ்சு ஆரோக்கியமா இருக்கணும்... இதுதான் என்னோட ஆசை. விவசாயம் அழிஞ்சிட்டு வருது... இந்த விவசாயத்தை நாம

தான் காப்பாத்தணும்... இந்த விருது விவசாயம் செகிற எல்லாருக்கும் கிடைச்சதா பெருமைப்படுறேன்! அப்படி ஒண்ணும் நான் பெருசா

சாதிக்கல சாமி..." என்று வெள்ளந்தி யாகப் பேசுகிறார் சாதனைப் பாட்டி

பாப்பம்மாள்.

Post Comment

Post Comment