இது மரத்தின் கதையல்ல (படித்ததில் பிடித்தது)



பொ. பாலாஜி கணேஷ், சிதம்பரம். - படங்கள் : பிள்ளை



ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டுப் போவான்.

அவனைப் பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.திடீரென்று ஒரு நாள் அந்தச் சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

சில நாட்கள் கழித்து சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனைப் பார்த்து, இத்தனை நாட்களாக ஏன் வரவில்லை? உனக்கு என்ன பிரச்னை?" என்று கேட்டது.

என் நண்பர்கள் எல்லோரும் அழகழகா பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால், என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை" என்றான்

சிறுவன்.

கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக் கொள். என்னைப் பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு" என்று மரம் கூற, அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களைப் பறித்துச் சென்றான்.

நாட்கள் சென்றன. மறுபடியும் சிறுவன் வரவேயில்லை. மரம் அவனுக் காக ஏங்கியது. சில வருடங்கள் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது. இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனைப் பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா, என்னிடம் வந்து விளையாடு. இந்தக் கிளையில் ஏறி அமர்ந்து பாட்டுப் பாடு" என்றது.அவனோ, இல்லை இப்போது எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆனால், நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை. வீடு வாங்க என்னிடம் பணமில்லை" என்றான்.

மரம் உடனே சொன்னது, பரவாயில்லை உனக்குக் கொடுக்க என்னிடம் பணம் காசில்லை. அதற்குப் பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச் செல். அதில் ஒரு வீடு கட்டிக் கொள்."

அவனும் கோடரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். இப்படி ஒரேயடியாக என்னைப் பார்க்காமல் இருக்காதே. வருடம் ஒருமுறையாவது வந்து பார்த்துச் செல்" என்றது மரம்.

வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச் சென்றான். அதற்குப் பின் பல வருடங்கள் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து மீண்டும் வந்தான். மரம் அவனைப் பார்த்து ஆனந்தக்கூத்தாடியது.

அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறா?" என்று மரம் கேட்டது. என் மீன் பிடிப் படகு உளுத்து விட்டது. படகு இல்லாததால் மீன் பிடிக்க முடியவில்லை. அதனால் வருமானம் இல்லை. நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்"

என்றான்.மரம் துடித்துப் போனது. நான் இருக்கிறேன். என்னுடைய அடிமரத்தை வெட்டி எடுத்துக்கொள். இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள்" என்றது.

அவன் அடிமரத்தை வெட்டும்போது, மறக்காதே! வருடத்திற்கு ஒருமுறை என்றில்லாமல் அடிக்கடி என்னைப் பார்க்க வா" என்றது.

ஆனால், அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.

அப்போதுதான் அவன் வந்தான். தலை யெல்லாம் நரைத்து, கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான்.

அவனைப் பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது. இப்போது உனக்குக் கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை... கிளைகள் இல்லை... அடிமரமும் இல்லை... உனக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே" என வருந்தியது.

அவன் சொன்னான். நீ பழங்கள் கொடுத்தாலும் அதைக் கடிக்க எனக்குப் பற்கள் இல்லை. வீடு கட்டவும், படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது."

அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக் கொள்" என்றது மரம். அவனும் அந்த வேர்களில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். இந்தச் சுகத்துக்குத்தான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கித் தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்தக் கண்ணீர் விட்டது.

இது மரத்தின் கதையல்ல... நிஜ வாழ்க்கை யில், நம் பெற்றோர்களின் கதை. இந்தச்

சிறுவனைப் போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம். வளர்ந்து பெரியவனானதும் நமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஆகி ஒதுங்கி விடுகின்றோம். அதன்பின் ஏதாவது தேவை அல்லது பிரச்னை என்றால்தான் அவர்களைத் தேடிப் போகின் றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் நம் பெற்றோர் கொடுத்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது. நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அதுதான்...

Post Comment

Post Comment