அன்பு வட்டம்


‘மாஸ்டர்’ படம் பார்க்க ஒரு தியேட்டரையே ‘புக்’ செயதுள்ளாரே ஆஷ்லினா என்ற மலேசிய ரசிகை?
அனுஷா நடராசன் -கிரிஷா ரவிஷங்கர், மதுரை

ஒரே ஒரு டிக்கெட்கூட கிடைக்காத அளவுக்கு ஹவுஸ் ஃபுல்லா இருந்ததாம்! ஆனா ஒரு ஷோவையே புக் செய்ய முடிஞ்சதாம். எங்கயோ இடிக்குதே கிரிஜா... இதுமாதிரி விஷயங்களை எல்லாம் நான் நம்பறதா இல்ல பாஸ்!

சம்பந்தப்பட்டவங்களே செஞ்சுக்குற ஒருவித

ப்ரோமோவோ?ன்னுதான் தோணுது. தலைவா,

நீ வேற லெவல்"னு பத்திக்க யாரோ கிளப்பி விடறாங்களோ? அப்படியே அது உண்மையான செய்தின்னே வெச்சுக்கிட்டாலும், அந்தப் பணத்தை ஏதாவது நல்ல காரியத்துக்குப் பயன்படுத்தியிருக்கலாமே ஆஷ்லினா! ஒருநாள் ‘லைக்’குக்கு இவ்வளவு செலவா?

அனுஷா, நீங்க கொரோனா தடுப்பூசி போட்டுக் குவீங்களா?

- அயன்புரம் த. சத்தியநாராயணன்

கண்டிப்பா! தடுப்பூசி போட்டுக்கிறது நம்ம நன்மைக்குத்தானே! இதுவரைக்கும் போட்டதுல பாதிப்புகள் எதுவுமில்லைங்கிறது பாராட்டக்

கூடியதுதான்!

அதுமட்டுமல்ல, நம்ம நாட்டுல தயாரான தடுப்பூசியை நாமளே போட்டுக்கத் தயங்கினா, அது நம்ம விஞ்ஞானிகளின் திறமையைக் குறைச்சு மதிப்பிடறதா இல்ல ஆயிடும்! அத னால நீங்களும் உங்க டர்ன் வரும்போது போட்டுக்குங்க.

இதோ... தடுப்பூசி ப்ளவுஸ்கூட ரெடி பண்ணி யாச்சு!எது நல்லது? எது கெட்டது? இதைத் தெரிந்து கொள்வது எப்படி?

- கே. கந்தரூபி, திருவேற்காடு

ரொம்ப சுலபம். நல்லது போனால் தெரியும்; கெட்டது வந்தால் புரியும்!விறகு அடுப்பு, கரி அடுப்பு, மண்ணெண்ணெ அடுப்பு, காஸ் அடுப்பு, மின்சார அடுப்பு... எது

சிறந்தது? ஏன்?

- கே. எஸ்.கோவர்தனன், ஸ்ரீரங்கம்

மின்சார அடுப்பு பிளஸ் சோலார் அடுப்புக்கே

என் வோட்டு. பாதுகாப்பு, சிக்கனம், சுற்றுப்புறச்

சூழல் காப்பு... என எப்படிப் பார்த்தாலும்

மின்சார அடுப்பு டாப். சோலார் அடுப்பு... டபுள் டாப்... (மிஸ்டர் கோவர்தனன் வீட்டுல உங்களோடதுதான் கரண்டி ராஜ்ஜியம் போல இருக்கு. ஜம் ஜமா!)

மனவலிமையும் உடல் பலமும் அதிகம் உள்ளவர்கள் நகர்ப்புறப் பெண்களா.. கிராமப்புறப்

பெண்களா? - ஆர்.. ராஜ லக்ஷ்மி, ஸ்ரீரங்கம்

வாழ்க்கையில் சின்னதும் பெரிதுமாகக் குறுக்கிடும் சோதனைகளைத் தாக்குப் பிடிக்கத் தேவையான மனோபலமும்,சாமர்த்தியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவள் உள்ளேயே உறங்கிக் கிடக்கிறது.

ஆனால், உடல் பலம் என்று வரும்போது கிராமப்புறப் பெண்கள் திறன் சற்று அதிகம்தான். உடல் உழைப்பு, சத்தான உணவுப்பழக்கம், சோர்வின்மை, சுற்றுச்சூழல்... போன்றவற்றால் தேக பலம் கூடியவர்களாக உள்ளனர். கல்லூரியிலோ வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலோ கிடைப்பதல்ல..இந்த வாழ்க்கைப் பாடம்..

ஸோ... கிராமமோ... நகரமோ... பெண்ணே... பலம் படைத்தவள்தான்!

மத்திய பட்ஜெட் உரை தயாரிப்புப் பணிகளின்போது, ஒவ்வொரு முறையும் அல்வா கிளறும் சம்பிரதாயத்துடன் ஆரம்பிக் கிறாங்களே... இது ஏன் அனுஷா?

- ச.லெட்சுமி, செங்கோட்டை

ஒருவேளை, சத்யராஜ் நடித்த ‘அமைதிப் படை’ படத்தைப் பார்த்திருப்பாங்களோ?

குன்னத்தூர் ‘ஜெ’ கோயில் - மெரினா ‘ஜெ’ நினைவு மண்டபம் - ஒப்பிடுக!

- எம். செல்லையா, சாத்தூர்

முன்னது - ஹீரோயின் வர்ஷிப்பின் அதீத வெளிப்பாடு! இதுல அரசியல் ஆதாயம் இருந்தாலும், அமைச்சரின் சொந்த ஏற்பாட்டில் கட்டியது. பின்னது - தேர்தலுக்கான அச்சாரம்! கட்டப்பட்டது மக்களின் வரிப்பணத்தில்...

கோயிலுக்குப் பூசாரிகள் கொஞ்சம் பேர்தான்! நினைவில்லப் பூசாரிகளோ எக்கச்சக்கம்!கோயில் வளாகத்துல செல்ஃபோன் பேசறவங் களைக் கண்டால் என்ன தோன்றும்?

- துர்க்கை வேந்தன், நெவேலி

அமைதியா, ஆனந்தமா சாமி கும்பிடாம, தானும் டிஸ்டர்ப் ஆகி, மத்தவங்களையும் தொல்லை செய்பவரைக் கண்டால் வர்றது ஓப்பனிங் கடுப்ஸ்! ஹோமமோ, பூஜையோ செய்விக்கிற புரோகிதரே சத்தமா ஃபோனில் பேசறதோட, செல்ஃபோனில் பதிவு செய்யப்பட்ட மந்திரங்களை ‘ஸ்வைப்’

செய்து தட்டுத் தடுமாறிப் படிப்பார் பாருங்க... அப்ப வர்றது உச்சக்கட்ட கடுப்ஸ்!அனுஷா, இது வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல்

கேள்வி! நீங்க யாரையாவது லவ் செய்ததுண்டா?

- ராகவி ப்ரியன், திருப்பத்தூர்

வொய் நாட்? ஒண்ணு இல்ல. இரண்டு இல்ல. அஞ்சு பேர்! அதுவும் பதினாறு வயசுலயே!

* முதலாமவர் நல்ல அழகு; ஆனா அவர் ஸ்கூல் படிப்புகூட ஒழுங்கா முடிக்கலை! அதனால ஒத்து வரலை!

* இரண்டாமவர் ரொம்பவே ஸ்வீட்மேன்; ஆனா கொஞ்சம் குண்டா இருப்பார். ஸோ, ப்ரபோஸ் பண்ணலை!

* மூணாவது ஆண், சூப்பரா கதை எழுதுவார்; உயரம் செட் ஆகலை!

* நாலாவது நபரோ, நல்லா ஓவியம் வரைவார். மதம், ஜாதினு பிரச்னை வரும்னு டிராப் பண்ணிட்டேன்.

* அஞ்சாவது இளைஞர், கிரிக்கெட்டெல்லாம் விளையாடுவார். ஆனா ஹிந்திக்காரர்... பாஷைத் தகராறு வருமேன்னு ‘ஸாரி’ சொல்லிட்டேன்!

அனுஷாவின் மனம் கவர்ந்த ‘அந்த அஞ்சு பேர்’ யாருன்னு தெரிஞ்சே ஆகணுமா? பக்கத்தைப் புரட்டுங்க!

Post Comment

Post Comment