எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்!ஜெயராமன் ரகுநாதன் -சென்ற பகுதியில் இன்றைய உலக மற்றும் நாட்டு நிலைமை பற்றிப் புரிந்து கொண்டோம். இப்போது நம்மிடம் என் னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம். முக்கியமாக ஒரு வேலையில் சேருவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் மற்றும் அந்த வேலையின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதைத் தெளிவா கப் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

என்னமா டிரெஸ் பண்ணியிருக்கீங்க! இந்தாங்க வேலை!"

நமக்கு வேலை தரும் நிறுவனமோ முதலாளியோ நம் அழகிற்கோ முகலட்சணத் திற்கோ அல்லது ஏதோ போனால் போகிற தென்றோ அந்த வேலையைத் தருவதில்லை. நமக்கு இருக்கும் திறமை நிறுவனத்தின் தொழிலுக்குப் பயன்படும் என்பதால் நம்மை வேலைக்கு வைத்து நிர்ணயித்த சம்பளத்தைத் தருகிறார். ஆகவே, அந்த நிறுவனம் நம்மிட மிருந்து சில எதிர்பார்ப்புகள் வைத்திருக்கும் என்பது சரிதானே! அந்த எதிர்பார்ப்புகள் என்னவென்பதைத் தெரிந்துகொண்டால்தான் அதற்கேற்றபடி நம் செயல்பாட்டை வகுத்துக் கொள்ள முடியும். இலக்கும் வழிமுறைகளும் இல்லாத வாழ்க்கையினால் ஒரு பயனும் இல்லையே!

சரி, பொதுவாக ஒரு கம்பெனியோ அல்லது முதலாளியோ என்ன எதிர்பார்க்கக் கூடும் என்பதைக் கவனிப்போம்.

நீங்கள் நிறுவனத்தின் ஒரு முதலீடு."

ஒரு கம்பெனி நம்மை வேலைக்கு எடுத்துக் கொள்கிறது என்றால் அந்த கம்பெனி நம் மீது முதலீடு செதிருக்கிறது என்று பொருள். முதலீடு என்றால் பணம் மட்டுமில்லை, அவர் களது நேரம், முயற்சியெல்லாம் முதலீடு செதுதான் பல காலேஜுகளுக்குப் போ, பல பட்டதாரிகளை இன்டர்வ்யூ செது பேசி, பிறகு தேர்வு செகிறார்கள். வேலையில்

சேர்ந்த அன்றிலிருந்தே அந்த ஊழியர் திறமை யாக வேலை செய ஆரம்பித்துவிடமுடியுமா?

நிச்சயம் முடியாது!

இரண்டு, மூன்று மாதங்கள் அவர் வேலை பழகி புரிந்துகொண்டுதான் திறமையைக் காண்பிக்க முடியும். உங்களைத் தயார் செ யும் சில மாதங்களுக்கு கம்பெனி கொடுக்கும் சம்பளமும் உங்கள் மீது அவர்கள் செயும் முதலீடுதானே!

நாம் பத்தாயிரம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செதால் என்ன வட்டி வரும் என்று எதிர்பார்ப்பதுபோல நம் மேல் முதலீடு செயும் நிறுவனமும் நம் மூலம் கம்பெனிக்கு என்ன லாபம் வரும் எதிர்பார்ப்பது நியாயம் தானே!

நாம் எதிர்பார்க்கும் முதலீட்டின் மீதான வருவா (கீஞுணாதணூண ணிண ஐணதிஞுண்ணாட்ஞுணணா š கீˆஐ) நிறுவனமும் எதிர்பார்க்காதா?

ஆக, வேலைக்குச் சேரும்போது என் மீதான கீˆஐ என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது பணமாக எதிர்பார்க்கப்படுவதல்ல, நம் முடைய உழைப்பாகவும் திறமையான செயல் பாடாகவும் வேலையில் நாம் காட்டவேண்டிய டிஸிப்ளினாகவும்தான் எதிர்பார்க்கப்படு கிறது.

நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதுதான் வெற்றி"

ஒரு கம்பெனி லாபம் ஈட்டுவதோடு தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதையே முக்கியமாகக் கருதுகிறது. சந்தைப் பொருளா தாரத்தில் ஒரு கம்பெனி திறமையாகச் செயல் பட்டால்தான் தொடர்ந்து மார்க்கெட்டில் போட்டியாளர்களுக்கு நடுவே தாக்குப்பிடிக்க முடியும். அப்படித் தாக்குப்பிடிக்க கம்பெ னிக்கு நன்கு செயல்படும் ஊழியர்கள் மிக முக்கியம். அவர்கள் திறமையாக உழைத்து நிறுவனத்தின் பொருளையோ சேவையையோ மார்க்கெட்டில் வலிவுமிக்கதாக ஆக்கினால் தானே கம்பெனி தொடர்ந்து செயல்பட இய லும். எனவே, அடுத்த முக்கிய எதிர்பார்ப்பு ஊழியர்கள் ஒவ்வொருவரும் தம் வேலையைத் திறம்பட முடித்து கம்பெனிக்கு மார்க்கெட்டில் நிலைத்து நிற்கக்கூடிய பலத்தைப் பெருக்கும் படி இருத்தலே.

நீங்களும் செலவினங்களைக்

குறைக்க வேண்டும்."

ஒரு கம்பெனியின் லாபத்துக்கும் வெற்றிக் கும் முக்கியமானவை இரண்டு விஷயங்கள் - ஒன்று நிறுவனத்தின் பொருளோ சேவையோ மிகவும் விரும்பப்பட்டு மார்க்கெட்டில் வாங் கப்பட வேண்டும். அது பயனுள்ளதாக இருந் தால் மக்களால் விரும்பி வாங்கப்படும். ஆக, விற்பனை அதிகமாக்குதல் என்பது லாபத் துக்கு ஒரு வழி, இன்னொரு வழி, செலவினங் களைக் குறைப்பது.

விற்பனை அதிகமாக்கி, செலவும் அதிக மானால் லாபம் ஈட்டுவது எப்படி? எனவே, நிறுவனம் தன் ஊழியரிடம் எதிர்பார்க்கும் இன்னொரு முக்கிய அம்சம் செலவுகளைக் குறைத்து திறமையாகப் பணி செவதே. ஒரு ரூபா விற்பனை செது லாபம் சம்பா திப்பது போலவே ஒரு ரூபா செலவைக் குறைத்து லாபம் சேர்ப்பதும் அதிமுக்கிய மானது" என்பார்கள் மேலாண்மை விற்பன்னர் கள். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவ ரான விப்ரோ கம்பெனியின் சேர்மன் அஸிஸ் ப்ரேம்ஜி, ஒவ்வொரு நாளும் உணவு இடை வேளையின்போது ஆபீசில் காலியான அறை களில் லைட் அல்லது ஃபேன் அனாவசியமாக ஓடினால் அணைத்துவிட்டுப் போவாராம். எனவே, விப்ரோவில், சேர்மனே அப்படி இருக்கும்போது எல்லா ஊழியர்களுக்கும் அந்த மனப்பாங்கு வந்துவிட்டதாம்.

ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செயும் ஒவ்வொரு ரூபா மட்டுமல்ல, செலவைக் குறைத்துச் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயுமே லாபம் தரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தின் வளர்ச்சியில்தான் உன் வளர்ச்சி இருக்கிறது."

பிஸினஸ் மேலாண்மையில் கேள்வி கேட்க முடியாத வாக்கியம் என்னவென்றால், நீ வளரவில்லை என்றால் சுருங்குகிறா" என்னும் மொழிதான்! நன்றாகக் கவனியுங் கள், வளரவில்லை என்றால் தேங்குகிறா இல்லை, சுருங்குகிறா! இது கம்பெனிக்கு மட்டுமில்லை ஒவ்வொரு ஊழியருக்கும் பொருந்தும். நிறுவனம் வளர்ந்தால்தான் மார்க்கெட்டில் நிலைத்து நிற்க முடியும். கம்பெனி வளர்ந்தால்தான் ஊழியரும் வளர முடியும்! அதாவது திறமையான ஊழியர்கள் வளர முடியும்! எனவே, கம்பெனியின் வளர்ச் சிக்கு உழைக்க வேண்டும் என்பது இன்னொரு முக்கிய எதிர்பார்ப்பு.

திறமையாகச் செயல்படு

என்பதைச் சோல்ல வேண்டியதில்லை."

எந்த நிறுவனத்திலும், நீ திறமையாகச் செயல்படவேண்டும் என்று தினமும் சோல் லிக் கொண்டிருக்க மாட்டார்கள். அது

இன்றியமையாத எதிர்பார்ப்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு வேலை கொடுத்தால் அது பற்றிப் படித்து, கேட்டுத் தெரிந்து கொண்டு அதைத் திறம்படச் செய லாற்றி நிறுவனத்திற்கு லாபமும் வெற்றியும் தேடித் தருவது என்பது ஒரு நல்ல ஊழியரால் அடிப்படையாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதே நிறுவன முதலாளிகளின் எதிர்பார்ப்பும்கூட. ஆக, நீங்கள் வேலை செ யும் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும், வெற்றிக்கும் திறமையாக உழைக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை.

என் நிறுவனம், என் வேலை."

ஒரு சாதாரண ஊழியராக இருந்தாலும் அந்த நிறுவனம் தன்னுடையது போலவே மதித்து அக்கறையுடனும் ஒழுங்குடனும் வேலை செவதை நிச்சயம் முதலாளிகள் எதிர்பார்ப்பார்கள்.

சீரான நேரான சிந்தனைதான் வளர்ச்சி."

ஒரு நிறுவனத்தில் வேலை செயும்போது பல சிக்கல்கள் வரக்கூடும். பல தடங்கல்கள் எதிர்ப்பட்டு செயும் வேலையைப் பாழாக் கும். நேர விரயம் ஏற்படும். இந்தச் சங்கடங் களைக் கண்டு மனம் நொந்துபோ வேலை யைக் கைவிடுதலோ அல்லது எதிர்மறையாக யோசிப்பதோ கேடுவிளைவிக்கும். தம் ஊழியரிடம் நிறுவனம் எதிர்பார்ப்பது நிறைந்த நேர்மறைச் சிந்தனைகளையே. ஒரு சிக்கல் வரும்போது அதை எப்படிக் களைய லாம் என்று சிந்தித்து ஆலோசனை கூறும் ஊழியர்களையே நிறுவனம் விரும்புகிறது.

உஷ்! ரகசியம் காக்கப்பட வேண்டும்."

ஒரு வர்த்தக நிறுவனமானது சந்தையில் அதீத போட்டிகளைச் சந்தித்தாக வேண்டும். அந்தப் போட்டியில் வெற்றிபெற சில முக்கிய மான ரகசிய வழிமுறைகள், மேலாண்மைத் திட்டங்கள் என்று போட்டிக்குத் தெரியக் கூடாத பல விவரங்கள் ஊழியருக்குத் தெரிய வரும். ஆனால், அவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தக்கூடாது என்பதை நிறுவனம் எதிர்பார்க்கும். சில நிறுவனங்கள், முக்கிய மாக மென்பொருள், மருந்துகள் தயாரிப்பு கம்பெனிகள் நம்பிக்கை ஒப்பந்தங்கள் (இணிணஞூடிஞீஞுணணாடிச்டூடிணாதூ அஞ்ணூஞுஞுட்ஞுணணா) போட்டு தம் ஊழியரைக் கையெழுத்திட வைக்கும் பழக்கமும் உண்டு. நிறுவன ரகசியங்களைக் காப்பாற்றாத ஊழியர்கள் துரோகிகளுக்குச் சமமானவர்கள் என்று கூட எண்ணப்படுவது உண்டு.

நீ தீவல்ல! மற்றவருடன் ஒத்துழை."

நிறுவனம் என்பது ஒரு கூட்டுக்குடும்பம் போல. எல்லோரும் ஒருமிக்க பொது குறிக் கோளை நோக்கிச் செயல்படுவதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே, ஒவ் வொரு ஊழியரும் மற்றவருடன் மனமுவந்து ஒத்துழைத்து வேலை செதாக வேண்டும் என்பதும் நிறுவன எதிர்பார்ப்புதான். ஒத்துழைப்பு நல்காத ஊழியர் வெகு சுலபத் தில் கண்டுபிடிக்கப் பட்டு, களை எடுக்கப் பட்டு விடுவார்.

உன்னை

நம்ப வை!"

இந்த நம்பகத் தன்மை என்பது மிக முக்கியமானது. இது உள்ளுணர்வு. நிறுவன முதலாளிகளுக்கு உங்கள் பெயரைச் சோன்னால் ஒரு நிம்மதி உண்டாக வேண்டும். அந்த நிம்மதி நீங்கள் திறமைசாலி என்பதால் மட்டும் வந்துவிடாது. நீங்கள் நம்பத்தகுந்தவர் என்பதால் மட்டுமே வரும். இந்த நம்பகத்தன்மை ஒவ்வொரு ஊழியரிடமும் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான எதிர்பார்ப்பு. நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது ஒரு நாளில் நிகழ்ந்துவிடாது. பல மாதங்களோ, ஏன் சில வருஷங்களோ கூட ஆகலாம். அதே சமயம், இந்த நம்பகத் தன்மையைக் குலைப்பது ஒரு சின்ன செய லாகக்கூட இருந்துவிடக்கூடும். நீங்கள் உங் களின் நிறுவனத்தில் இந்த நம்பகத்தன்மை யைப் பெறுவது மிக அவசியமானதாகும்.

கவனம் தேவை! இங்கே வாடிக்கையாளர் சேவைதான் முக்கியம்."

ஒரு நிறுவனத்தின் ஆணிவேரே அதன் வாடிக்கையாளர்கள்தான். அந்த வாடிக்கை யாளரின் மனமகிழ்ச்சிதான் நிறுவனத்

துக்கு வெற்றி தரும். மகாத்மா காந்தி கூட,

வாடிக்கையாளர்தான் நம் முதலாளி என்னும் எண்ணத்துடன்தான் ஒவ்வொரு வியாபாரமும் நிகழ்த்தப்பட வேண்டும்" என்று சோன்னார். வாடிக்கையாளரைப் பொறுத்தவரையில்

நீங்கள்தான் நிறுவனத்தின் முகம். உங்களைக் கொண்டுதான் அவர் நிறுவனத்தின் மதிப்பை யும் பொருளின் நம்பகத்தன்மையையும் கணக் கிடுவார். எனவே. வாடிக்கையாளர் சேவை யில் ஒவ்வொரு ஊழியரும் மிகக் கவனத்துடன் செயல்பட வேண் டும் என்பது நிறுவனத்தின் அவசியமான எதிர்பார்ப்பாக இருக்கும்.

புறம் பேசாதே! நிறுவனத்தைப் பற்றிப்

புறம் பேசாதே."

நீங்கள் வேலை செயும் நிறுவனம் உங்களுக்கு வாழ்வா தாரத்தைத் தருகிறது. எனவே அந்த நிறுவனத்திற்கு உண்மையாக இருக்க வேண்டியது உங் களின் கடமை. உண்மையாக இருக்க வேண் டியது என்பது செயும் வேலையில் மட்டு மில்லை.

எங்க கம்பெனி டூத் பேஸ்டா? திராபை! நானே அதை உபயோகிப்பதில்லை!"

இப்படிச் சோல்வதுகூட துரோகமே. நிறு வனத்திலோ அல்லது அதன் பொருட்களிலோ உங்களுக்கு நம்பிக்கையோ மரியாதையோ இல்லையென்றால் அந்த நிறுவனத்தைவிட்டு விலகிவிடுவது உத்தமம். ஆனால், அங்கேயே பணிபுரிந்து கொண்டு பழித்துப் பேசுவது சரி இல்லை. நிறுவனம் நிச்சயம் தம் ஊழியர்கள் புறம் பேசாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

உனது நேரம்... நிறுவனத்தின் நேரம்..."

நிறுவனங்களில் ஆரம்ப நேரமும், முடியும் நேர மும் மற்றும் உணவு இடைவேளை நேரமும் குறிப் பிடப்பட்டிருக்கும். மற்றபடி, ஊழியர்கள் தம் நேரத்தை நிறுவனத்தின் செயல்பாட்டுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்பதும் எழுதப்படாத எதிர் பார்ப்புதான். தாமதமாக வருவதும் சீக்கிரமாக வெளி யேறுவதும் ஆபீஸ் நேரத்தில் அரட்டை அடிப்பதும் எந்த நிறுவனத்திலும் மதிக்கப்படாது.

தொண்ணூறுகளில் இந்தியாவிலிருந்து அதிகமான மென்பொருள் ஊழியர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போனார்கள். அவர்களுக்கு எதி ராக அங்கே எழுந்த மிக முக்கியமான கம்ப்ளெயின்ட், இந்திய ஊழியர்கள் நேரத்துக்கு வருவதில்லை, வந்தாலும் கேன்டீனிலும் காரிடார்களிலும் அரட்டை அடித்து நேர விரயம் செகிறார்கள்" என்பதுதான். அவர்களை இங்கிருந்து அனுப்பிய பல கம்பெனிகள் இதையெல்லாம் எடுத்துச்சோல்லி கிளாஸ் எடுத்து அங்கெல்லாம் வேலை செயும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு தனிப்பாடமாகவே சோல்லி அனுப்ப வேண்டியதாயிற்று. வேலைக்கு வந்த இடத்தில் எட்டு மணி நேரம் முழுவதுமாக நிறு வனத்திற்காக உழைக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமான எதிர்பார்ப்புதான்.

புரிந்துகொள், எதிர்பார்ப்பை நிறைவேற்ற!"

எனவே, ஒவ்வொருவரும் நான் வேலைக்குப் போகப்போகும் இந்த நாட்களில் என்னிடம் என்ன எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கம்பெனிகளோ அல்லது அரசு அலுவல கங்களோ புதிதாகப் படித்து முடித்து வருபவனிடம் எல்லா சவால்களையும் எதிர்நோக்கி முடிவுகள் எடுக் கும் திறமை வேண்டும் என்று எதிர்பார்க்காது. படிப்பு என்பது ஒரு இயலின் அடிப்படையைக் கற்றுத் தருவது. மற்றபடி வேலையின் அனுபவமே முடிவு எடுக்கும் திறமைகளை வளர்க்கும். படித்து முடித்து உடனே வேலைக்கு வரும் இளைஞனிடம் எந்த நிறுவனமும் எதிர்பார்ப்பது இந்த முடிவு எடுக் கும் திறமையோ அல்லது சவால்களைச் சந்திக்கும் ஆற்றலோ மட்டும் அல்ல, மேலே சோன்ன பல எழுதப்படாத எதிர்பார்ப்புகளையும்தான்.

இதைப் புரிந்துகொண்டு பணிபுரிந்தால் வெற்றி. ஆம்... நிச்சயம்தான்! (தொடரும்)

Post Comment

Post Comment