உயிர்பொன்.மூர்த்தி - தமிழ்வயல்கள் காந்து கருகி விட்டன என்பதைக் கேள்விப் பட்டதில் இருந்து தேவநாதன் வருத்தமாகவும் கோப மாகவும் இருந்தார். நல்ல விவசாய நிலம்னு சோல்லி வாங்கிக் கொடுத்துட்டு இப்ப எந்தப் பயிரும் விளையமாட்டேங்குதுன்னு சோன்னா எப்படி? மனதுக்குள் சோல்லிக் கொண்டார்.

காலையில் மாடித் தோட்டத்தில் காற்று வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்த அவரிடம் மனைவி சாரதாம்மாள் வந்து காபியைக் கொடுத்துவிட்டு நின்றார்.

ஏங்க, மாடித்தோட்டத்தை இன்னும் பெரிசா செய நாளைக்கு ஒரு விவ

சாயி வர்றேன்னு சோல்லியிருக்காரு. நீங்க அவர்கிட்ட பேசறீங்களா?"

சரி, வரட்டும் பேசிப் பார்ப்போம்" என்ற வர் காபியைப் பருகிக்கொண்டே சிந்தனை யில் ஆழ்ந்தார்.

சென்னையில் மிகப் பெரிய தொழிலதிபர் தேவநாதன். ஆறு மாதத்துக்கு முன்பு ஓச்சேரி கிராமத்துக்கு ஒரு வேலை விஷயமாக வந்த வர், அந்த நிலத்தைப் பார்த்துப் பிரமித்து அப்படியே காரை நிறுத்திவிட்டு கொஞ்சநேரம் நின்றுவிட்டார். அந்த நிலத்தின் ஓரங்களில் விளைந்த தென்னை, வாழை, கொயா மரங் களும், அதற்கு அடுத்த ஓரங்களில் வெண்டை, கத்தரி, தக்காளி, பச்சைமிளகா போன்ற

செடிகளும், நடுவில் நெற்பயிரும் விளைந்து பச்சைப் பசேல் என்றிருந்தது. காற்று மண் ணின் மணம் சேர்ந்து சுகந்தமாக வீசியது. அது அவருக்கு ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. குருவிகள், பறவைகள்

சிறகடித்துப் பறந்தன. குயில்கள் கூவியது, ஆடு, மாடுகள் புற் களை மேந்து கொண் டிருந்தன. அந்தக் காட்சியைக் கண்டு அவரை அறியாமல் காரைவிட்டு இறங்கி அந்த நிலத்தை நோக்கி காலார நடந்தார்.

அப்போது அங்கு வானொலியில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

நீங்களெல்லாம்

சோப்பனந்தானோ? பல தோற்ற

மயக்கங்களோ?

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே

நீங்களெல்லாம்

அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த

பொருளில்லையோ?

...காண்பதுவே உறுதிகண்டோம்

காண்பதல்லால் உறுதியில்லை

காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி

நித்தியமாம்.’

அந்த வழியாக வந்த ஊர்க்காரர் முனிய

சாமிப் பிள்ளை, யாரையா நீங்கள்? உங் களுக்கு என்ன வேணும்? யாரையாவது பார்க் கணுமா?" என்றார்.

இல்லப்பா, இந்தப் பக்கமா பலமுறை போயிருக்கிறேன். ஆனா இன்னிக்கு இங்க வீசுற காத்தும் செடி கொடிகளின் பச்சை வாச மும் மண்ணின் மணமும் ரொம்ப நல்லாருக் குயா? என்ன காரணம்னு யோசிச்சுக்கிட் டிருக்கும்போதே என் கால்கள் தானா காரை விட்டு இறங்கிட்டுடுச்சு. எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும் இந்தச் சுகம் வராதுயா?"

ஐயா, இந்தக் கிராமமே காலகாலமா விவ

சாய பூமிங்க. தலைமுறை தலைமுறையா

விவசாயம்தான் இங்கிருக்கிற மக்களின் வாழ்வாதாரம். நாள்தோறும் நீரை உள்வாங்கி குளிர்ந்த மணமும், வளத்தோடு வளர்ந்தோங் கிய செடிகளின் பச்சையும் காற்றில் கலந் திருக்குமுங்க. பெரும்பாலும் இந்தப் பகுதி மக்கள் இயற்கை விவசாயம்தான் செயி றாங்க. இந்த நிலத்தில விளையிற கா, கனிகளைச் சாப்பிட்டா உடம்புக்கு எந்த நோயும் வராதுங்கயா. உழைப்பின் வேர்வை நிலத்தில் சிந்தி உரமேறிய நிலமுங்க இது" என்றார் ஊர்ப் பெரியவர் முனியசாமிப் பிள்ளை.

அப்படியா!" சிறிது நேரம் யோசித்தவர், சரி, இந்தக் கிராமத்திலேயே ஒரு நல்ல நிலம் இருந்தா சோல்லுங்க. நாம வாங்கி விவசாயம் பார்த்துக்கலாம். நகர வாழ்க்கையில் பிஸினஸ் பிஸினஸ்னு உழன்று உழன்று மனசு ரொம்ப

சோர்வா இருக்கு. அப்பப்ப இங்க வந்து தங்கிக்கலாம்னு இருக்கேன். என்னயா,

சோல்றீங்களா?"

அதுக்கென்னங்கயா... பார்த்துச் சோல் லிட்டா போச்சுங்க."

சரி, அப்ப நான் கௌம்பறேன், முனிய

சாமிப் பிள்ளை" என்றவர் கிளம்பினார்.

இதை எப்படியோ மோப்பம் பிடித்த தரகர் ராமசாமி நிலம் விற்கும் ஒரு நபரைப் பிடித்து விட்டு சென்னையில் உள்ள தேவநாதனைச் சந்திக்க அவர் வீட்டில் காத்திருந்தார்.

ஆஜானுபாகுவான தேவநாதன் நெற்றியில்

நீறும் பொட்டும் வைத்து கதராடையில் பளிச்

சிட்டார். தீர்க்கமான கண்கள் கண்ணாடியைத் தாண்டி மின்னின. அவரைப் பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் தோற்றம்.

என்னப்பா தரகர், என்ன விஷயம்? இவ்வளவு நேரத்துல வந்திருக்கிறே? ஏதாவது விசேஷமா?" என்று சோபாவில் கம்பீரமாக

அமர்ந்திருந்த தேவநாதன் கேட்டார்.

அவர் எதிரே வளைந்து நின்றிருந்த ராம

சாமி, ஐயா, ஒரு நல்ல விஷயம். நீங்க ஓச்சேரில ஒரு நிலத்தை வாங்க விருப்பப் படறதா கேள்விப்பட்டேனுங்க. அங்க ஒரு நல்ல விவசாய நிலம் விலைக்கு வருதுங்க. ஐயா சம்மதிச்சா முடிச்சுடலாங்க."

சரிப்பா, வில்லங்கம் எதுவும் இல்லைல. பார்த்துக்கோ. எல்லாம் பேசி முடிச்சுட்டு சம் பந்தப்பட்ட ஆள வரச்சோல்லு. பார்த்துப் பேசிடலாம்" என்றவர் கைசெலவுக்குப் பணம் கொடுத்து அனுப்பினார்.

ஆழ்ந்த நினைவிலிருந்து மீண்டவராக தேவநாதன் குளிக்கச் சென்றார்.

தேவநாதன் சுதந்திரப் போராட்ட வீரர் சண்முகநாதனின் மகன். தேசப்பற்றும் இயற்கை விவசாயமும் இரு கண்களாகக் கொண்டவர். அதே கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்துவருபவர் தேவநாதன். தந்தை இறந்த பிறகு அவர் நடத்திய தொழில்களையும் கல்லூரி, பள்ளிகளையும் இவர்தான் கவனித்து வந்தார். வறுமையில் படிக்க முடியாத மாணவர்களுக்கும் தன் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளை களையும் இலவசமாகப் படிக்க வைத்து வரு கிறார். தன் தந்தை சோல்லிச் சென்ற கல்வி போதித்தல், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத் தல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் போன்றவற்றை இன்றும் கடைப்பிடித்து வரு கிறார். ஆனால் இயற்கை விவசாயத்தை மட்டும் இவரால் முழுமையாகச் செய முடிய வில்லை.

ஓடிவிட்டது 80 ஆண்டு காலம். மகன்கள் தொழிலைப் பார்த்துக் கொள்கிறார்கள். அத னால் இவருக்கு நிறைய ஓவு நேரங்கள் கிடைத்தது. இந்தத் தருணத்தில்தான் ஒரு விவசாய நிலத்தை வாங்கிக் கூட்டுப்பண்ணை இயற்கை விவசாயம் செயலாம் என்று எண்ணம் கொண்டிருந்தார்.

நல்ல நிலம் என்று தரகர் சோன்னதன் பேரில் ஒரு விவசாய நிலத்தை வாங்கினார். ஆனால், அவர் வாங்கிய சில மாதங்களிலேயே பச்சைப் பசேலென்று செழித்து வளர்ந்த மரம், செடி, கொடிகள் எல்லாம் காந்து போனது. பல மாதங்கள் அந்தக் கிராமத்தின் பக்கமே போகாமல் இருந்தார் தேவநாதன்.

இப்போது அந்த நினைவு மீண்டும் வந்தது. உடனே கிளம்பி காரை எடுத்துக்கொண்டு ஓச்சேரி கிராமத்துக்குப் போனவர், அங்குள்ள ஊர் பெரியவர்களிடம் நிலைமையை விசாரித் தார்.

முதலில் முனியப்பிள்ளைதான் வந்தார். ஐயா, என்னயா திடீர்னு இந்தப் பக்கம் வந்திருக்கீங்க? என்ன விஷயமயா?"

மேக்கால நமக்கு ஒரு இடம் வாங்கி னோமே. அது நல்ல நிலம்னுதானே தரகர் வாங்கித் தந்தார். அங்க இருந்த மரஞ்செடி எல்லாம் கருகி விட்டது. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நாம வாங்கும்போது பச்சைப் பசேல்னு இருந்துச்சு. இப்பப் பார்க்க ரொம்ப வருத்தமா இருக்கு. இங்க வந்து என் மீதிக் காலத்தை நிம்மதியா கழிக்கலாம்னு இருந்தேன். இப்படி ஆகிடுச்சேப்பா. நீங்கள் லாம் இந்த ஊர்க்காரங்கதானே என்ன காரணம்னு உங்களுக்குத் தெரியுமா?" என்றார் தேவநாதன்.

ஐயா, அந்தத் தரகர் உங்களை ஏமாத்திப் புட்டானுங்க. அந்த நிலத்தை வாங்கின கையோட அவனுக்குத் தெரிஞ்சவன்கிட்ட குத்தகைக்கு விட்டானுங்க. அவன் பணத்தை வட்டிக்கு விடுற கொடுமைக்காரனுங்க. நல்லா விளைஞ்சிக்கிட்டிருந்த நிலத்துல கொஞ்சம் கொஞ்சமா பூச்சிக்கொல்லி மருந்து களைத் தெளிச்சானுங்க. மருந்தையே பார்க் காத அந்த நிலம் அந்தக் கொடுமைக்காரன்கிட்ட போனதும் மலடாகிடுச்சுங்க. இங்க ஏற் கெனவே விவசாயம் பார்த்த நல்லகண்ணு நல்ல மனுஷங்க. பயிருங்க மேல உயிரா இருந் தாருங்க. மருந்தே போடாம இயற்கை விவசா யம் செதாருங்க. புழு, பூச்சி, வண்டு, குரு விங்க, காக்காங்க, ஆடு மாடுங்க எல்லாம் அவரு போட்ட தழைகளைத் தின்று பசியாறி சந்தோஷமா இருந்துதுங்க. பயிர்களை அழிக் கிற புழு, பூச்சி, வண்டுகளுக்கு மட்டும் இயற்கை மருந்துகளைத்தான் அடிப்பாருங்க. நல்ல விவசாயின்னு பஞ்சாயத்துல விருது வாங்கியிருக்காருங்க. அவன் மக மெட்ராஸ்ல படிச்சுட்டிருந்தானுக. அந்தப் படிப்புச் செலவுக்காகத்தாங்க உயிருக்கு உயிரா காத்து வந்த நிலத்தையே வித்துட்டாருங்க. இரக்க மனம் படைச்சவன்கிட்ட நிலம் போனதால பயிர்களெல்லாம் வாடிருச்சுங்க. ஐந்தறிவுன் னாலும் பயிருக்கும் உயிருன்னு ஒண்ணு இருக்கில்லீங்களா?" ராமு வாத்தியார் மனதில் பட்டதைப் போட்டுடைத்தார்.

அதிர்ச்சியடைந்த தேவநாதன் கொஞ்ச நேரம் வெறிக்கப் பார்த்துவிட்டு, அந்த விவ சாயி இப்ப எங்க இருக்காருன்னு தெரியுமா உங்களுக்கு?" என்றார்.

தெரியாதுங்க. நிலத்தை வித்த கையோட மெட்ராஸுக்குப் போனவருதாங்க. எந்தத் தகவலும் இல்லை. இங்கக்கூட அவங்க

சோந்தக்காரங்க யாரும் இல்லை." முனியப்பப் பிள்ளை சோன்னார்.

சரி, ஏதாவது தகவல் கிடைச்சா சோல் லுங்க" என்று சோல்லிவிட்டுக் கிளம்பினார் தேவநாதன்.

காலையில் வழக் கம்போல சாரதாம் மாள் காபியுடன் மாடிக்கு வந்தவர், அந்த மாடித் தோட்ட விவசாயி வந்திருக் கிறாருங்க. இங்க வரச்சோல்லட்டுங்களா?" என்றார்.

சரி, வரச்சோல்" என்றார்.

மேலே வந்த விவசாயி நல்லகண்ணு, தேவ நாதனைப் பார்த்ததும், ஐயா, நீங்களா?" என்று அதிர்ச்சியில் உரைந்தார்.

ஆ... வாங்க வாங்க... உங்களைத்தான் தேடிக்கிட்டிருந்தேன். நீங்களே வந்துட்டீங்க... எல்லாம் தெவ சங்கல்பம்தான்..." என்றார் தேவநாதன்.

என்னயா... என்னை ஏன் தேடிக்கிட் டிருந்தீங்க? நிலத்துல விவசாயம் நல்லாதானே நடந்துக்கிட்டிருக்கு. இப்ப அறுப்பு நடந் திருக்கணுமே?" என்றார் நல்லகண்ணு.

இல்லப்பா. எதுவுமே நடக்கலை. நான் தான் ஏமாந்துட்டேன். அந்தத் தரகர் கொஞ்ச நாளைக்கு யாருகிட்டயாவது குத்தகைக்குக் கொடுத்துட்டு அப்புறமா நமக்கு வேண்டிய வங்கள வைச்சு விவசாயம் பார்த்துக்கலாம்னு சோன்னான். எனக்குக் கொஞ்சம் வேலை இருந்ததால சரின்னு சோல்லிட்டேன். அதுக் குள்ள அவன் நிலத்தை வீணாக்கிட்டான். சரி, நீங்க ஏன் நல்லா விளைஞ்ச நிலத்தை வித்தீங்க?"

ஐயா, என் மவன சென்னையில படிக்க வச்சேங்க. டாக்டர் ஆகணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தானுங்க. நீட் எழுதறேன்னு சோல்லி இரண்டு தடவ எழுதியும் எதிர்பார்த்த மார்க் கிடைக்கலிங்க. அதனால பிரைவேட் காலேஜ்ல பல் டாக்டருக்குப் படிக்க வைச்

சேங்க. இந்த விவசாயம் பண்ணி என்னால அவ்ளோ பணம் கட்டமுடியலீங்க. அதனால தாங்க தலைமுறை தலைமுறையா விவசாயம் செஞ்சுவந்த நிலத்த வித்து அவன் ஆசைய நிறைவேத்தினேங்க. இப்ப நான் மாடித் தோட்டம் அமைச்சுக் கொடுத்துட்டு, வர்ற வருமானத்தில் காலத்தைத் தள்ளுறேனுங்க."

உங்கள பார்க்காத ஏக்கத்துல பயிருங்க எல்லாம் வாடி வதங்கி இருக்குது. நிலம் பாழா போயிட்டுது. நீங்க வந்து அந்தப் பயிருங்களுக்கு உயிரு கொடுங்க. உங்களுக்கே அந்த நிலத்தைக் கொடுத்துடுறேன். உங்க கிட்டயிருந்து பயிரைப் பிரிச்ச பாவம் என்னை வந்து சேராது பாருங்க. நான் விருப்பப்பட்டா அங்க வந்து கொஞ்ச நாள் தங்கிக்கிறேன். உங்க பையன் படிப்புச் செலவையும் நானே பார்த்துக்குறேன். இது ஆன்றோர் போற்றி வளர்த்த தேசம். இங்க படிப்பும் விவசாயமும் பாதிக்கப்படக்கூடாது. இதைத்தான் காந்தி யின் தொண்டரான எங்கப்பா எனக்குச்

சோல்லிக்கொடுத்தார். எனக்காக நீங்க இதை ஒத்துக்கொள்ள வேண்டும்" என்றார் தேவ நாதன் தயவாக.

ஐயா, உங்க பெரிய மனசுக்கு ரொம்ப நன்றிங்க. விவசாயிங்கதான் மற்றவங்களுக்குக் கொடுத்து வாழ்றவங்க. அதை நான் மீறக் கூடாது. விவசாயிங்க கையேந்துற காலம் வந்தா நாடு சுடுகாடா மாறிடுங்க. விவசா யிங்க மற்றவங்ககிட்ட கையேந்தாம எங்க தாத்தா காலத்துல இருந்து வாழ்ந்துட்டேங்க. அதனால நீங்க அந்த நிலத்தை எனக்கு குத்தகைக்கே கொடுங்க. அதுல நான் விவ

சாயம் செஞ்சி என் பயிரைக் காப்பாத்தி உயிர் கொடுக்கிறேன். அதனால் உங்கள மறுக் கிறேன்னு நினைக்காதீங்க. உங்க விரும்பப்படி உதவி செயிறதுல எனக்கு எந்தத் தடையும் இல்லீங்க. சம்மதம்ங்ளா?"

ரொம்பப் பெருமையா இருக்கு நல்ல கண்ணு. எங்கள மாதிரி பெரிய மனிதர்களை விட உங்களை மாதிரி, மக்களுக்குப் பசியாற உழைக்கிற விவசாயிங்கதான் பெரிய மனிதர் கள்னு நிரூபிச்சிட்டீங்க. நீங்க சோல்றபடியே நான் கேட்கறேன்" தேவநாதன் தலையாட்டி சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார்.

சரிங்க ஐயா... உத்தரவு வாங்கிக்கிறேன். இப்பவே என் குழந்தைங்கள பார்க்கப் போறேங்க..." கூறிய மறுகணமே, விறுவிறு வென்று கீழே கிளம்பிப் போனவர், அதே வேகத்தில் ஓச்சேரி கிராமத்துக்குச் சென்று தன் நிலத்தில் வாடி நின்ற மரம், செடி, கொடி களைத் தொட்டுத் தடவிப் பார்த்தார். அவர் காலடியில் காலியான பூச்சிக்கொல்லி

மருந்து பாட்டில்கள் தென்பட்டன. அதை ஆக்ரோஷமாக எட்டி உதைத்தார். அது விவ சாய நிலத்தைத் தாண்டி, குப்பையில் போ விழுந்தது.

அப்போது வீசிய காற்றில் செடி, கொடிகள் தலையசைத்து ஆனந்தத்தில் ஆமோதித்தன.

Post Comment

Post Comment