எனக்குள்ளும் கடவுள் இருக்கிறார்!ராகவ்குமார் -நடிக்க வந்த இந்தப் பத்து வருஷத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

நடிக்க வந்து பத்து வருஷம் கடந்து போனது. ஏதோ இப்ப நடிக்க வந்தது போல இருக்கு. நாம கரெக்டா வேலை செதால், பத்து வருடம் கடந்தும் இப்படி பேட்டி எடுக்க வருவாங்க என்பதைப் புரிந்துகொண்டேன்."

படப்பிடிப்பு இல்லாத இந்த கொரோனா ஆண்டு எப்படி இருந்தது?

மோசமாக இருந்தது என்று சோல்வது கூட சாதாரணம்தான். ‘ஒரு குப்பை கதை’ வெளிவந்து அடுத்த படத்திற்குத் தயாரா

னேன். வழக்கம்போல் ஜிம்மில் உடற்பயிற்சி செயும்போது எதிர்பாராமல் முதுகில் ஏற் பட்ட காயத்தில் கிட்டத்தட்ட பத்து மாதங்கள் டாக்டரின் அறிவுரைப்படி ஓவெடுக்க வேண்டியதாயிற்று. ‘அப்பாடா இனி படப் பிடிப்புக்குக் கிளம்பலாம்’ என எண்ணிய போது, கொரோனா பிரச்னையால் ஊரடங்கு ஆரம்பித்துப் படப்பிடிப்பு கேன்சல் ஆனது. பரபரப்பாக இயங்கிய எனக்கு அடி மேல் அடி கிடைத்ததால் மனஉளைச்சல் களுக்கு ஆளானேன். என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். கொரோனா வின் இருண்ட மாதங்களைக் குடும்பத்தினர் தந்த அன்பால் வெளிச்சமாக்கினேன்."

‘ஒரு குப்பை கதை’ படத்தில் உங்களுக்குக் கிடைத்த புகழ் திருஷ்டியாக மாறிவிட்டதா நினைக்கிறீர்களா?

திருஷ்டி என்று நினைக்கவில்லை. ஆனால், நம்மைச் சுற்றி நிறைய நெகடிவ் அலைகள் இருப்பதா நம்புகிறேன்."

ஓகே. புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாட என்ன ஐடியா வெச்சிருக்கீங்க...?

நாங்கள் வசிக்கும் பெங்களூருவில் இப் படிக் கொண்டாடக்கூடாது, அப்படிக் கொண் டாடக் கூடாது என டெலி ஒரு ரூல்ஸ் போடுறாங்க. எனவே, எங்கள் வீட்டுக்கு ரொம்ப நெருக்கமான உறவினர்கள், நண்பர் களை மட்டும் அழைத்து கேக் வெட்டி சிறிய அளவில் புத்தாண்டை வரவேற்கப் போறேன். கொரோனா காலகட்டத்தில் வெளியே

சென்று கொண்டாடுவது தேவையற்றது என்று நினைக்கிறேன்."

உங்களால் மறக்க முடியாத புத்தாண்டுக் கொண்டாட்டம் எது?

என் பதினான்கு வயது வரை எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அக்கம் பக்கத்தினர் உடன் சேர்ந்து கொண்டாடிய ஒவ்வொரு புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் மறக்க முடியாதவை."

இந்த புத்தாண்டிற்கான தீர்மானம் என்ன?

வாழ்க்கையைத் தீர்மானம் போட்டு வாழ முடியாது. தீர்மானம் எடுத்து இதை நிறை வேற்ற முடியாமல் போவதை விட, நம்மால் செய முடிந்தவற்றைச் செதால் போதும் என்ற தீர்மானம் எடுத்து விடுவேன்."

இன்றைய தினத்தில் ‘நெட்பிலிக்ஸ்’

‘அமேசான்’ போன்ற வலைதளங்கள் சினிமாவை மொபைலில் தருகின்றன. சினிமாவில் விசிலடித் துப் பார்த்த ஹீரோயின்களைக் கையடக்க மொபைலில் வந்து விட்டனர். இது உங்களைப் போன்ற ஹீரோயின்களின் பிம்பத்தைக் குறைக்காதா?

நான் ஒருபோதும் என்னை ஒரு ஹீரோயி னாக நினைத்ததில்லை. வெள்ளித் திரையாக இருந்தாலும், செல்போனில் என்னைப் பார்த் தாலும் நான் ஒரு நடிகைதான். இந்த எண்ணம் தான் வெப் சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங் களுக்கும் இருக்கும். ஒரு ஹீரோயினாக மட் டும் என்னை நினைத்திருந்தால் நான் கவர்ச்சி யாகச் சில படங்கள், பெரிய ஹீரோ படங்கள் என்று இருந்திருப்பேன்."

ஸோ, உங்களுக்குப் பெரிய ஹீரோ படத்தில் நடிக்க ஆர்வம் கிடையாதா?

அயய்யோ... எதையாவது எழுதி என்னை வம்பில் மாட்டி விட்டுராதீங்க. பெரிய ஹீரோ படத்தில் நடித்தால்கூட என் கேரக்டர் முக்கியம் என்று சோல்ல வந்தேன். தனுஷ், சூர்யா எனக்குப் பிடித்த ஹீரோக்கள்."

பிடித்த கடவுள்?

தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத் என மதம் தாண்டி பண்டிகை கொண்டாடுபவள் நான். கடவுளுக்கு நாம் பெயர் வைத்துள்ளோம். கடவுள் நமக்குள்ளேயே இருக்கிறார் என்பதை நம்புகிறவள் நான்."

விஜயகாந்த் முதல் குஷ்பு வரை சினிமா டூ அரசியல் பிரவேசம் தொடர்கிறது. உங்களை பி.ஜே.பி. கட்சி சார்பாக அழைத்தால் அரசியலில் என்ட்ரி தருவீர்களா?

எனக்கு அரசியல் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளது. ஆனால், நுழையும் ஆர்வம் இல்லை. புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவர்கள் வேண்டும் என எதிர்பார்க்கி றேன்."

நீங்கள் சோல்வதைப் பார்த்தால் ரஜினி, கமல் இருவரில் யாரோ ஒருவருக்கு உங்கள் ஆதரவு இருப்பதைப்போல் தெரிகிறதே...?

இவர்கள் இருவருமே சினிமாவில் நீண்ட நாளான நண்பர்கள். அரசியல், சமூகத்தில் மாற்றம் நிகழ வேண்டும் என்று நினைப்பவர் கள். மாற்றத்தை முன்னெடுப்பவர்களை எனக்குப் பிடிக்கும். நான் குறிப்பிட்டு யாரை யும் சோல்ல விரும்பவில்லை."

ஒரு பெண்ணாக, கடுமையாகப் போராடி

சினிமாவில் ஜெயிக்கறீங்க, விவரமாப் பேசுறீங்க. ஆனா, யாதவ்னு ஜாதியை உங்க பெயருக்குப் பின்னால் வைச்சிருக்கீங்களே...?

இப்படி ஒரு கேள்வியைக் கேட்டதற்கு தேங்க்ஸ். யாரும் இதைப் பற்றிக் கேட்டதில்லை. ஸ்கூலில் என் பேரில் மூன்று நபர்கள் இருந்ததால் தனியாகத் தெரிய வேண்டும் என் பதற்காக ‘யாதவ்’ என்று என் பெற்றோர் குறிப்பிட்டார்கள். இனிவரும் நாட்களில் என் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் இருக் காது. இனி, மனிஷா மட்டும்தான்."

உங்களைப் போல் அழகான டிப்ஸ்...

என்னை அழகு என்று சோன்னதற்கு நன்றி. அழகிற்காக நான் எதையும் பெரிதாகச் செவதில்லை. சிறிய அளவிலான உடற் பயிற்சி, முறையான தூக்கம், அடிக்கடி முகம் கழுவுதல். தட்ஸ் ஆல்."

Post Comment

Post Comment