மனதில் அமர்ந்த மயிலே!வேதா கோபாலன் - தெய்வாகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலை ஒட்டியிருந்த தெரு ஒன்றில் அமைந்திருந்தது அந்த வீடு.

சற்றே பழைமை. கொஞ்சம் புதுமை. சிறிது நவீனம். நாற்பது பெர்சன்ட் நாகரிகம் என்று சகலமும் கலந்த மாதிரி.

அதிக வெளிச்சம் புகவிடாத கூடம் ஒன்றின் சுவரில் வரிசையாகப் பெருமாள் படங் களும் ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் உலகைவிட்டுப் பரமபதம் எட்டியவர் களின் படங்களும் பெரிது பெரிதா மாட்டியிருந்தன.

நேற்றைக்குச் சாற்றிய மலர்கள் லேசான பழுப்பு நிறத்தை எட்டி, சதா சுற்றிக்கொண் டிருக்கும் ஃபேனின் காற்றில் வாட்டம் கண்டிருந்தன.

என்ன பொண்ணோ... தாவணியைக் கழற்றி அப்படியே போட்டுட்டுப் போயிருக்கா..." அமிர்தா முணுமுணுத்துக்கொண்டே தாவணியைக் கொம்பால் எடுத்துத் தோக்கப் போட்டாள்.

போயிட்டுப் போறா போ... பாவம், அப்பாவோட ஊருக்குக் கிளம்பற அவசரம். அவனும் திடீர்னுதானே தீர்மானிச்சான். உன் ஹஸ்பெண்ட் ராஜனைச் சோல்றேன்."

சமயத்தில் மாமியார் இப்படி ஆங்கிலம் பயன்படுத்தி மிரளவைப்பது வழக்கம்தான்.

நீங்க எப்பவுமே உங்க பேத்திகளுக்கு சப்போர்ட்தான். ஊருக்குக் கிளம்பற அவசரம் இல்லைன்னா தாவணியை எடுத்துத் தோச்சு மடிச்சு வெச்சுட்டுத்தான் மறுவேலை பார்க்கும் உங்க பேத்தி."

ராஜன் போன் பண்ணினானா? போ இறங்கிட்டாளாமா?"

இல்லை என்று சோன்னால் கவலைப்படுவாள். ஆமாம் என்று சோல்ல மனசில்லை. மாமியாரிடம் பொ சோல்லிப் பழக்கம் இல்லை.

இறைவன் இந்தக் குழப்பத்துக்கு முடிவுகட்ட எண்ணி போனை ஒலிக்கச் செதான்.

எம்.எஸ்.ஸின் பஜகோவிந்தம் ஒலிக்க போனை ஆன் செதாள். அமிர்தா... அம்மாகிட்டே போனைக் கொடு" என்றார் தேவாதி ராஜன்.

இதுதான் வழக்கம். இந்த வீட்டுக்குப் புதுத் தாலி, புது மெட்டியுடன் வலது காலை எடுத்து வைத்ததிலிருந்து பழகிப்போன விஷயம்.

இவளுமே சந்தோஷமா அந்த முக்கியத் துவத்தைத் தர ஆரம்பித்ததால் பிரச்னையில் லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது குடும்பத் தேர்.

நல்லபடியா போச் சேர்ந்தியா? எப்போ வருவ? சாப்பாடெல்லாம் வசதியா இருக்கா? அங்கெல்லாம் குளிர் ஜாஸ்தியாடா? இன் னொரு ஸ்வெட்டர் எடுத்துண்டிருக்க லாமோ?" ஒரு கேள்வித்தாளே அச்சடிக்கும் அளவுக்குக் கேள்விகளை அடுக்கினார் அந்த அம்மாள்.

அமிர்தவல்லிக்குப் பொங்கிப் பொங்கிச் சிரிப்பு வந்தது.

சந்திரமண்டலத்துக்கா போயிருக்கிறார் கள்? நேற்றுப் போனார்கள். நாளை வந்து விடுவார்கள். இதற்கு எத்தனை கேள்விகள்?

அந்தப் பக்கம் தேவாதி என்ன சோன் னாரோ? சரிதாண்டா. எகிறாதே. அம்மான்னா அப்டிதான் கேட்பாங்க. அது அம்மாத்தனத்தின் இயல்பு" என்று விட்டுக் கொடுக்காமல் பேசினார்.

ஆனால் அமிர்தம் மிக விரும்பிய, கேட்க ஆசைப்பட்ட கேள்வியை மாமியார் கேட்டார். ஏண்டா, பிளேன் புடிச்சு மெட்ராஸ் வந்து தானே வருவா? உன் பெண்ணை அப்டியே ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு வாயேன்.."

.........."

போடா அரட்டை. பிளேனைப் பிடிச்

சுன்னுதான் பேச்சு வழக்கில் சோல்லுவோம். அதுக்காகப் பிடிச்சுண்டு ஓடி வருவன்னா

சோல்லிட்டாங்க இங்க.." வார்த்தைகள் கோபம் மாதிரி வந்தாலும் வா நிறைய சிரிப்புடன் சோன்னார்.

அமிர்தவல்லிக்கு மாமியாரைப் பிடிக்கும். ரொம்பவும் பிடிக்கும். இருபத்தைந்து வருடங் களுக்கு முன் கல்யாணமானபோது நிறைய பேர் பயமுறுத்தினார்கள்.

அமிர்தா... அவர் ஒரே பிள்ளை. அப்பா சின்ன வயசில் இறந்துவிட்டார். அம்மாவும் பிள்ளையும் மட்டுமே இத்தனை வருஷம் ஒன்றா இருந்திருக்காங்க. அந்தத் தேவாதி ராஜனைப் பார்த்தாலும் அம்மா கோண்டுன்னு தெரியறது. அம்மாவைப் பார்த்தாலும் அதிகார தோரணையா இருக்கு... பாவம் நீ" என்றார்கள்.

இவள் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை. இருந்துவிட்டுப் போகட்டுமே. அதிகாரம் செதால் அடங்கிவிட்டுப் போகி றேன். பிள்ளை அம்மாவை மதித்தால் சபாஷ் என்கிறேன் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அப்படி நினைத்ததாலேயோ என்னவோ, மற்றவர்களின் பயமுறுத்தல்கள் எத்தனை தவறு என்று ஒரே வாரத்தில் புரிந்தது.

இந்த அகத்தில் இளம் வயசுப் பெண்கள் இருந்து எங்களுக்குப் பழக்கம் இல்லைம்மா. ஏதாவது தப்பாயிருந்தால் வாவிட்டு, மனசு விட்டுச் சோல்லு" என்று தலையைத் தடவிச்

சோல்லும் மாமியாரை யாருக்குத்தான் பிடிக்காது?

அப்படியெல்லாம் தவறு கண்டுபிடிக்கும் படி எதுவுமே இல்லை. காலையில் எழுந் திருக்க சற்று நேரமாகிவிட்டால் தேவாதி ராஜன் இவளுக்குப் போர்த்தி விட்டுவிட்டுச் சத்தமின்றி நகர்ந்ததும், பல் தேத்துவிட்டு வந்தவுடன் காபியைக் கையில் வைத்துக்கொண்டு மாமியார் காத் திருந்ததும் அவளை மேலும் நேர் மையாக நடந்துகொள்ளச் செ தன.

காபி சூடும்.. சர்க்கரையும் திட்டமா இருக்கும்மா.." மாமி யாரின் கையை மென்மையாகப் பிடித்துப் பாராட்டுவாள்.

உங்க அம்மா ஒவ்வொரு முறை இங்கே வரும்போதும் ஒவ்வொண்ணாக் கேட்டுக் கேட்டு மனசில் குறிச்சுண்டேன்." பெருமிதத்துடன் சோன்ன மாமி யாரை அதே பெருமிதத்துடன் பார்த்தது இன்றைக்குப் போல் நினைவுக்கு வருகிறது.

இந்தா.. பேசணும்னு தோணினா பேசிட்டு போனை அணைச்சுடு" சோல்லியவாறு இவளிடம் மொபைலைக் கொடுத் தார் மாமியார்.

சரி... வேற ஒண்ணும் இல் லையே?"

ஒண்ணும் இல்லை... உன் பெண்ணைப் பார்க்க முடியாது போலிருக்கு. நேர்ல வந்து எல் லாம் சோல்றேன்" என்று சுருக்க மாக போனை அமர்த்தினார்.

மறுநாளும் போன் வந்தது. சென்னையில்தான் இருக்கோம். நேர்ல வர வேண்டாம்னு சோல்றா... பிசியாம்" என்றார்.

ஏமாற்றமா இருந்தது. என்ன பிசி வேண்டிக் கிடக்கிறது? உள்ளூருக்கு அப்பா வந்தும் சந்திக்க இயலாதபடி?

வாசலில் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

நேற்றைக்கு வந்த அந்த இளைஞன்தான் இன்றைக்கு வருகிறானோ? யோசித்தவாறு எட்டிப்பார்த்தாள்.

கண்களை நம்ப முடியவில்லை என்று ஒரு சம்பிரதாயத்துக்குச் சோல்வார்கள்.

வாசலில் நிற்பது யார்? நயனியா? என் பெண் நயனியா? இந்த வீட்டின் சீமந்தப் புத்திரி நயனியா? சந்திக்க முடியாது என்றாரே?

வா... டீ... வா... வா... உன் அப்பா பெங்களூரு போயிருக் கார்... நீ என்னடான்னா..." என்று சோல்லி முடிக்குமுன், பக்கவாட்டுச் சுவருக்கு அருகில் பல்லி மாதிரி ஒட்டியிருந்த தேவாதி ராஜனும் இவர்களின் இரண்டாவது மகள் ரங்கவல்லி யும் வெளியே வந்து கைகொட் டிச் சிரிக்க... திகைப்பு குட்டிப் போட்டுப் பல மடங்காகியது.

தெரு திரும்பிப் பார்க்கப் போகிறதே என்ற சங்கடத்துடன் இடப்புறக் கதவையும் திறக்க மூவரும் உள்ளே வர... அமர்க் களக் குரல்களின் குதூகலம் உள்ளே இருந்த பாட்டியையும் வெளியே இழுத்தது.

வாட் ஈஸ் கமிங்!" என்று பாட்டி கேட்க சிரிப்பு பல மடங் கானது. பாட்டி இவர்களிடம் ஜென்ம ஜென்மமா ஆங்கிலம் கற்று என்றைக்குமே வெற்றி யடையாமல் போனதை அவ்வப் போது வெளிப்படுத்தி சந்தோஷப் படுத்துவார்.

இப்போது போல மனம் குதூகலத்தில் மூழ்கியிருந்தால் கேட்கவே வேண்டாம்.

வாட் கம் யூ?" என்று நயனி யைப் பார்த்துக் கேட்க நயனி உருண்டு சிரிக்காத குறை.

பாட்ஸ்.. எப்டி இருக்கே பாட்ஸ்" என்று பாட்டியை அணைத்து முத்தமிட்டாள்.

எத்தனை நாளாச்சுடீ உன் னைப் பார்த்து...?" முத்துப்போல் எட்டிப் பார்க்கத் துடித்த கண் ணீரை அடக்கிக்கொண்டு சிரித் தார் பாட்டி.

மம்மீ, ரொம்ப பசிச்சிங்" என்று பொ சோன்னாள். என்ன தளிகை பண்ணி யிருக்க?" என்று கேட்டவாறு தளிகை ரூமை எட்டிப் பார்த்தாள்.

படு சுத்தம்.

இன்றைக்கு நயனி வரப்போகி றாள் என்று யார் எதிர்பார்த் தார்கள்?

வாசலில் நிந்து செல்போனில் பேசினீங்களே.." நினைத்து நினைத்து வியந்தாள்.

ஒரு வாரம் பத்து நாள் இருந் துட்டுப் போவியாடீ?" என்ன பதில் வருமோ என்ற கலக்கத் துடன்தான் அமிர்தவல்லி கேட்டாள்.

இந்தக் கேள்வி வந்துவிடப் போகிறதே என்றுதான் சங்கடப் பட்டுக்கொண்டிருந்தாள் நயனி.

என் டியர் மம்மியில்ல... கோவிச்சுக்காதே... இன்னிக்கு நைட் கிளம்ப...ணு..." சோல்லிக் கொண்டிருந்தபோதே அவளிள் மொபைல் பாடி அழைத்தது. ‘ஆயர்பாடி மாளிகையில்.’

பாட்டிக்கு மிகப் பெருமிதமா இருந்தது. ஏனெனில், அது பாட் டிக்குப் பிடித்த பாடல். அதைப் பாடித்தான் சின்னக் குழந்தையா இருந்த நயனியைத் தூங்க வைத் திருக்கிறாள்.

கனெக்ட் மீ டு கான்ஃபரன்ஸ் கால்" என்றவாறு பக்கவாட்டு அறைக்குப் போவிட்டாள். தங்கை உள்பட எல்லோருக்குமே ஏமாற்றம். காரில் வரும்போதும் அலுவலகப் பிரச்னைகளுக்குத் தான் போனில் மாற்றி மாற்றித் தீர்வு சோல்லிக்கொண்டு வந் தாள்.

இங்கு வந்தும் ஆபீஸ் அவளை விழுங்கிக் கொண்டிருக்கிறது.

பாட்டிக்கும் அம்மாவுக்கும் பொசுக்கென்றானது. இப்போது மணி பதினொன்று. இன்றைக்கு ராத்திரி கிளம்ப வேண்டும் என் கிறதே இந்தப் பெண்? அவள் தலையைப் பார்த்தவுடன் இருவர் மனதிலும் ஒரு வாரத்துக்கான மெனு தயாரானதே? அதெல்லாம் அவ்வளவுதானா?

கான்ஃபரன்ஸ் கால் முடிந்து வெளியே வருவதற்கு அரை மணி நேரத்துக்கு மேல் ஆனது. அதற் குள் அவளுக்குப் பிடித்த மிளகுக் குழம்பும் பருப்புத் துவையலும் சீரக ரசமும் அக்கார அடிசிலுமா அம்மா ஒரு பக்கம் தயார் செய... பாட்டி பாதாம் அல்வாவை விரைந்து கிளற, வீடே கலகல.

ஏண்டி பங்கஜா, ராத்திரியே கிளம்பணும்னு சோல்ற... குறைஞ்சது நாளைக்குக் கார்த் தால..."

ஒரு நிமிடம் யோசித்தாள். சரி.. நீங்க ரெண்டு பேரும் இத் தனை சோல்லும்போது மறுக்க முடியலை... நாளைக்குக் கார்த் தால ஒன்பது மணிக்கு நான் ஆபீசில் இருக்கணும். ஏழரைக்குக் கிளம்பிடுவேன். ஓகே?"

அனைவரும் எனர்ஜி ஏற்றிய பொம்மைகள் மாதிரி சந்தோஷப்பட்டார்கள். முதலி லேயே நயனி காலையில் போவ தாத்தான் மனசில் நினைத் திருந்தாள். ஆனால், அதைச்

சோன்னால் நாளைக்கு ராத்திரி போ என்பார்கள் இந்த அன்பு ராட்சஸிகள்.

சற்று நேரம் முன்பு வரை

பசிக்காமல்தான் இருந்தது.

சமையலின் மணம் அள்ளியதில் சலைவா துள்ளியது.

பங்கஜா... சாப்பிட வா..." என்று அம்மா அழைத்ததும் - அப்பா பாடினார் தன் வழக்க மான ஸ்ருதியில், வழக்கமான ராகத்தில். பங்கஜ நயனீ.." என்று ஆரம்பித்து தப்புத் தப்பா ஸ்வரமெல்லாம் பாடியதில் அவர்கள் வீட்டில் எழுந்த சிரிப் பொலியில் பக்கத்து வீடுகள் பொறாமையில் வெந்தன.

இந்தப் பாடல் நினைவு வந்து தானே வீட்டைப் பார்க்க ஏங்கினாள்.

வாழை இலையில் சாப்பிட்டு ரொம்ப நாட்களாகின்றன. அதிக பட்சம் நூறு கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருந்தாலும் நினைத்தாற்போல் ஓடிவர முடிய வில்லை. அப்படி ஒரு அலுவலக அழுத்தம்.

இந்த வேலையை, இந்த உயர்வை அடைய அவள் கொஞ்ச மாப் பாடுபடவில்லை. பாட்டி யிடமும் அப்பாவிடமும் கெஞ்சி கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்க

சென்னை ஹாஸ்டலுக்குப் போனது, சின்ன கம்பெனி ஒன்றில் கம்ப்யூட்டரில் கணக் கெழுதி பக்கவாட்டில் எம்.பி.ஏ. படித்தது, சின்னச் சின்ன இடங் களில் வேலை பார்த்து இப்போ துள்ள ஸாரா க்ளினிகல் ஒர்க்ஸில் சேர மிகவும் ஆசைப்பட்டு இலக்கை அடைந்தது என எல்லா மும் எல்லாருக்கும் தெரியும்.

ஆரம்பத்தில் இந்த வேலையை அவள் பிடித்துக் கொண்டாலும் இப்போது வேலை அவளை இறுகப் பிடித்துக்கொண்டிருப் பது நன்றாகவே தெரியும்.

இன்னும் கொஞ்சம் பாதாம் அல்வா வைக்கவா?"

பாட்டீஸ் அஃப் த வேர்ல்ட். உன்னை மாதிரி உலகத்தில் எந்த அகர்வாலும் பாதாம் அல்வா செயவே முடியாது. இருந்தா லும் அரை கிலோவுக்கு மேல்

சாப்பிட்டாச்சு. என் கதி என்னா கும்? பத்து கிலோ ஏறிடும். பேக் பண்ணிக் குடு. வெச்சு வெச்சு

சாப்பிடறேன்."

உண்மையில் அவள் சிநேகிதி களுக்காகத்தான் எடுத்துப்

போகத் திட்டமிட்டாள்.

அதிருக்கட்டும். இவளை எப்படிப் பிடிச்சு அழைச்சுண்டு வந்தேள்? பொன்னியின் செல் வன் ஈழத்து ராணி மாதிரி புய லைப் பிடிச்சு சிமிழில் அடைக்கிற கதையாச்சே?" என்று அம்மா கேட்க,

அப்பா அந்த சுவாரஸ்யக் கதையை ஆரம்பிக்க,

வாசல் கதவு தட்டும் ஒலி.

அது விதி தட்டும் ஒலி என் பதை யாரும் உணரவில்லை.

(தொடரும்)

Post Comment

Post Comment