விஜய் - சிம்பு - கொரோனாமுகநூல் பக்கம் - மகேஷ் -கடந்த ஜனவரியிலிருந்து கொரோனா வார்டில் பணியிலிருக்கும் ஒவ்வொரு மருத்துவப் பணியாளரிடமும், சுகாதாரப் பணியாளரிடமும், காவல்துறை அதிகாரிகளிடமும் சோல்லி ஆற்றிக்கொள்ள முடியாத ஆயிரம் கதைகள் இருக்கின்றன. ராணுவத்தினர்கூட தம்மைப் பணயம் வைத்துத்தான் நமக்காகப் பணி செ கின்றனர். கடந்த ஒன்பது மாதங்களாக, ஒவ் வொரு மருத்துவ, சுகாதாரப் பணியாளரும், தங்கள் ஒட்டுமொத்தக் குடும்பத்தைப் பணயம் வைத்து நம்மை மீட்டெடுத்திருக்கிறார்கள்.

ரட்சிப்பாளர்கள் எல்லாம் நிமிட நேர ஓவில் லாமல் ஓடிக்கொண்டிருக்க, ராஜபார்ட்டுகளுக்கு முதுகு சோறிய விசிறி மட்டை இல்லாமல், பாவம் புழுக்கம் அதிகரித்திருக்கிறது. கடற்கரை யில் கூட்டம் கூடுவதை இன்னமும் தவிர்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இறுக மூடிய தியேட்டர்களுக்குள் 100 சதவிகிதம் பார்வை யாளர்களை அனுமதிக்கக் கேட்டிருக்கும் விஜ மற்றும் சிம்புவின் நிஜமுகம் தன் சுயநலப் பற் களைத் துருத்தி, அகோரமாயிருக்கிறது. கட்டும் சேலைக்கு மேட்சாக தினம் ஒரு கட்சி மாறும் ‘மேனாள் கடவுள்’ குஷ்பு, ‘உங்களை யாரும் தியேட்டர்களுக்கு வரச்சோல்லி வற்புறுத்த வில்லை, உங்கள் பாதுகாப்பு முக்கியமென்றால் வீட்டிலே இருந்துகொள்ளுங்கள்’ என்று திருவா மலர்ந்திருக்கிறார்.

கோயில் கட்டி பாலாபிஷேகம் செயும் போதே இந்தத் தெனாவெட்டெல்லாம் காட்டி யிருந்தால், இந்த அரசியல் வேஷத்தைப் பார்க் கும் கொடுமையில் இருந்தாவது விடுதலை கிடைத்திருக்கும்.

மார்ச், ஏப்ரலில் பரீட்சை எழுதப்போகும் பிள்ளைகள் தங்கள் நிலை என்னவென்றே புரி யாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், நடிகர்களின் கோரிக்கையைப் போர்க்கால அவ

சரத்தோடு சிரமேற்கொண்டு நிறைவேற்றிய அரசின் அக்கறை அருவருப்பாயிருக்கிறது. படம் பார்க்க வரும் தன் ரசிகர் களின் குறைந்தபட்சப் பாதுகாப் பைக்கூடக் கணக்கில் கொள் ளாத இந்த தலைவாக்களுக்காகத் தான், பல்லக்குத் தூக்கிகள் தம் இளமையைத் தொலைக்

கிறார்கள்.

Post Comment

Post Comment