முதல் குழந்தையும் கிரிக்கெட் மேட்ச்சுகளும்மீரான் -ஆஸ்திரேலியாவில்

கிரிக்கெட் விளையாடச்

சென்ற கேப்டன் விராத் கோஹ்லி, தனது முதல் குழந்தைப் பிறப்புக்காக, மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துக் காகத் தாயகம் திரும்பியுள்ளார். அவரது இந்தச் செயல், ‘இந்திய அணியை நட்டாற்றில் விட்டு விட்டு, சோந்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டதைப்’ போல் விமர்சனம் செயப்படு கிறது.

ஆனால், உலகில் தந்தை யாகும் எந்த ஆணுக்கும் இருக் கும் இயல்பான மனநிலையில்தான் கோஹ்லி யும் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூட, தனது முதல் குழந்தைப் பிறப்புக்காகப் போட்டிகளுக்கு இடையில் விடுப்பு எடுத்துச் சோந்த ஊர் சென்றார். அதனால் கோஹ்லியை விமர்சனம் செவதில் கொஞ்சமும் நியாய மில்லை என்பதும் சிலரின் பார்வையாக இருக்கிறது. மேலும், ஒருவரை மட்டுமே நம்பி ஒட்டுமொத்த அணியும் இருப்பது, இந்திய அணியின் பலவீனத்தை வெளிப்படை யாகக் காட்டுகிறது அல்லவா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் மேனாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைக்கிறார்.

‘இந்திய கிரிக்கெட்டில் வீரர்களுக்கு ஏற்ப, ஆளுக்கொரு விதி இருப்பதால் நேர்மையாக இருக்கும் அஷ்வின், நடராஜன் ஆகியோர் பாதிக்கப்படுகின்றனர்’ என்கிறார் அவர்.அவர் எழுப்பும் கேள்வி,

கோஹ்லியைப் போலவே மற்றவர் களுக்கு, வேண்டியபோது ஓவு கிடைக்குமா? அப்படித் தந்தால் மீண்டும் விளையாட அழைப்பார்களா? ‘இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதி இருக் கிறது. அஷ்வின் திறமையான சுழற்பந்து

வீச்சாளர். நேர்மையாக இருப்பதாலேயே அவர் எப்போதும் ஆடும் அணியில் இடம் பிடிக்கப் போராட வேண்டி இருக்கிறது.

அதற்குக் காரணம் அவர் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவதுதான். ஒரு ஆட்டத்தில் விக்கெட் எடுக்கவில்லை என்றால், அடுத்த ஆட்டத்தில் அவர் ஓரங்கட்டப்படுவார். ஆனால், சில பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடா விட்டாலும் தொடர்ந்து ஆடும் அணியில் இருப்பார்கள்.

அதேபோலத்தான் தமிழ்நாட்டு வீரரான டி.நடராஜன் நிலைமையும். அவருக்கு ஐ.பி.எல். போட்டி நடக்கும்போது குழந்தை பிறந்தது. போட்டி நடந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா வுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்னும் அவரது மகளைப் பார்க்கவில்லை. ஆனால், மற்ற வீரர்கள் நினைத்த நேரத்தில் அணியில் இருந்து விலகுகிறார்கள். விரும்பிய நேரத்தில் மீண்டும் அணியில் சேர்ந்து விடுகின்றனர்.

கவாஸ்கரின் இந்தக் கடுமையான விமர்

சனத்தைப் பார்த்தபோது நினைவுக்கு வந்த விஷயம், 1976-ஆம் ஆண்டு நியூசிலாந்தில்

சுற்றுப் பயணத்தில் இருந்தார். அப்போது அவருக்குக் குழந்தை பிறந்தது. அதனால் அவர் நாடு திரும்ப விரும்பினார். ஆனால், உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பய ணம் செய வேண்டி இருந்ததால் பி.சி.சி.ஐ. அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால் இரண்டரை மாதங்கள் கழித்துத்தான் தனது மகனைப் பார்த்தார்.

Post Comment

Post Comment