அருள்வாக்கு


பணிவும் பண்பும் வளர...
ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் -‘இருக்கட்டுமே, அதிலென்ன விசேஷம்?’ என்றால் - ரொம்ப விசேஷம் இருக்கிறது. இந்த மரியாதை உணர்ச்சிதான் விநயம், பணிவு என்று சோல்கிற உசந்த பண்பை வரவழைத்துத் தருகிறது. ‘அடிபணிந்து’ என்றே நமஸ்காரத்தைச் சோல்கிறோம். இந்தப் பணிவு நன்றாக மலர்ச்சி பெற்றுப் பிரகாசிப்பது, ஏனைய பக்தி பாவ பூஜை புனஸ்காரங்களை விடவும் மரியாதையுணர்ச்சியோடு பண்ணுகிற நமஸ்காரத்தில்தான். ஒரு பெரியவருக்கு முன்னாடி பூமியிலே சரீரத்தைத் தள்ளி நமஸ்கரிக்கும்போது இந்த விநயத்துக்கு நன்றாக ரூபகம் கொடுத்து அனுபவித்து சந்தோஷப்பட முடிகிறது. அந்த (விநய) மனோபாவத்திற்கு இந்த (நமஸ்கார) க்ரியை ரூபகமாக மட்டுமில்லாமல் இந்த க்ரியையே அந்த பாவம் மேலும் மேலும் விருத்தியாவ தற்கு புஷ்டியும் தருகிறது.

எத்தனையோ காலமாக, யுகங்களாக இந்த மாதிரி நமஸ்கரிப்பது என்பதை நம்முடைய பூர்வீகர்கள் செது வந்திருக்கிறார்களல்லவா? அதனால் அவர் களுடைய பணிவான எண்ணம் அந்த (நமஸ்கார) காரியத்திற்குள் ஊறி ஊறி, காரியத்திற்குள்ளேயே (பணிவு என்ற) பாவத்தை பலமாக ஊட்டியிருக்கும். அவர்கள் வழியிலே வந்த நாம் இந்தக் காரியத்தைச் செகிறபோது பஹுகால பிதிரார்ஜிதமாக அந்த பாவமும் நாமறியாமலே நமக்குக் கொஞ்சமாவது ஏற்படும். Heredity (பாரம்பரியம்) Race consciousness (ஓர் இனத்திற்கான பொது உணர்வு) என்றெல்லாம் நவீனப் படிப்பாளிகளும் ஒப்புக்கொள்கிறார்களே!

‘மற்ற பிராணி வர்க்கங்கள் அத்தனையும் குறுக்கே வளர்கிற ‘திர்யக்’ ஜந்துக்கள்; மநுஷ்யன் ஒருத்தன்தான் காலுக்கு மேலேயும் உடம்பு, சிரஸு என்று உயரவாட்டில் ‘ஊர்த்வமுக’மாக வளர்கிறவன்; ஸ்ருஷ்டி வர்க்கங்களிலேயே இவன்தான் உசந்தவன் என்பதால் இப்படி இவனைப் படைத்திருப்பது’ என்று பெருமை சோல்கிறதுண்டு. ஆனால், இந்த

உசத்தி அகம்பாவத்திலேயும் தற்பெருமையிலேயும் கொண்டுவிட்டால் இவன் மிருக ஜாதிக் கும் கீழே போக வேண்டியதுதான்! நம்முடைய சிந்தனை, வாழ்க்கை முறை எல்லாம் மற்ற பிராணிகளுடையதைப் போல இந்திரிய சௌக்யங்களோடு முடிந்து போகாமல் உசந்ததாக இருக்கவேண்டுமென்பதற்காகத்தான் பகவான் நம்மை இப்படிப் படைத்திருப்பதாகப் புரிந்து கொண்டு அதற்கான பிரயாசைகளைப் பண்ணி இன்னும் உசந்த ஸ்திதிக்குப் போகணுமே தவிர, தற்பெருமைப்பட்டுக்கொண்டு கீழே விழுந்துவிடக் கூடாது.

தற்பெருமையை என்னவென்று சோல்கிறோம்? ‘தலைக்கனம்’, ‘மண்டைக்கனம்’ என் கிறோம். குறுக்குவாட்டில் வளருகிற பிராணியாயிருந்து அப்படி மண்டைக்கனம் ஏறினால் பரவாயில்லை; ‘பாலன்ஸ்’ கெட்டுப்போகாமல் சமாளித்துக்கொண்டு விடலாம். ஆனால், உயரவாட்டில் இப்போது நாம் இருக்கிற தினுஸில் மண்டைக்கனம் ஏறினால், ‘டாப்-ஹெவி’ ஆனால் என்னவாகும்? ‘ஈக்விலிப்ரியம்’ என்கிற சமச்சீர் நிலையே கெட்டுப்போ, குலைந்து போ, தடாலென்று விழ வேண்டியதுதான்! பகவான் நாம் உயரவாட்டில் வளரும்படி வைத்து

சிரசை உச்சியில் வைத்திருக்கிறானென்றால் ஒருபோதும் தலைக்கனம் ஏறாமல், பணிவா யிருந்து நம்மை விழுவதிலிருந்து - வீழ்ச்சியிலிருந்து - காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ‘பதிதன்’, ‘பதிதை’ என்று ரொம்பவும் நிஷித்தமாகச் சோல்கிறோமே, அதற்கு நேர் அர்த்தமே விழுந்து விட்டவர்’ என்பதுதான்.

அப்படிக் கீழே விழாமலிருப்பதற்கு நமஸ்காரம் என்பதாக வினயத்தோடு கீழே விழுவதே சகாயம் பண்ணும்! நிற்கிறவன் விழுந்து அடிபட்டுக் கொள்ளலாம். உட்கார்ந்திருக்கிறவன்கூட அப்படியே சாந்து அடி, கிடி படலாம். பூமியோடு பூமியாகச் சரீரத்தைப் போட்டுக் கிடக்கிறவன் விழவோ, சாயவோ முடியுமா?

உயரம் ஜாஸ்தி ஆக ஆக, விழுந்தால் படுகிற அடியும் ஜாஸ்தி ஹானி உண்டாக்குவதாக இருக்கும். உசந்த ஸ்தானம் என்பதன் கதியும் அப்படித்தான். அங்கே இருக்கிறவன் தப்புப் பண்ணி இடறி விழுகிறபோதுதான் அப்புறம் எழுந்திருக்கவே முடியாமல் - அதாவது, அந்த உசத்தியை மறுபடி அடையவே முடியாதபடி - ஊர் உலகமெல்லாம் சிரித்து அவனை மட்டந்தட்டி வைத்துவிடுகிறது.

Post Comment

Post Comment