உங்களுடன்...


வாசக நெஞ்சங்களே, வணக்கம்.
எஸ்.கல்பனா -சமீபத்தில் ‘ஜென் கோன்ஸ்’ (ஙூஞுண ஓணிச்ணண்) என்ற புத்தகத்தைப் படித்தேன். ஜென் புத்த மடாலயங்களில் சிஷ்யர்களுக்கான

பயிற்சியாக ஜென் குருமார்கள் ‘கோன்’ எனப்படும் புதிர்களைக் கொடுத்து தியானிக்கச் சோல்வார்கள். இதற்கான பதில்களை தர்க்கரீதியான மனதைக் தாண்டி, உள்ளுணர்வின் மூலம் மட்டுமே பெற முடியும்! அந்த கேள்விக்குள் முற்றிலுமாகக் கரைந்து அந்த தருணத்தில் மட்டும் லயிக்கும்போது, சட்டென்று பதில் பிடிபடும்!

இந்தவகை ஜென்கோன்களில் மிகப் பிரபலமானது, ‘ஒரு கை தட்டலின் ஓசை’ (கூடஞு ண்ணிதணஞீ ணிஞூ ணிணஞு டச்ணஞீ) என்ற புதிர்! இதை

‘ஜென் கோன்ஸ்’ புத்தகத்தில் படித்தேன்!

‘கென்னின்’ என்ற புத்தமடாலயத்தின் மிக இளைய 12 வயது பிட்சு டோயோ, தனக்கும் ஒரு டுணிச்ண-ஐ தியானிக்கத் தருமாறு குருவிடம் கேட்க, அவரோ ஒரு கை தட்டலின் ஓசை எப்படியிருக்கும் என்று சோல்?" என்கிறார். திகைத்த டோயோ தன் அறைக்குச் சென்று

யோசிக்கும்போது, தூரத்தில் கெஷா ஒருவர் பாடும் இனிய இசை கேட்கிறது. டோயோ ஓடிப்போ அந்த இனிய நாதத்தை பதிலாகச் சோல்கிறான். குருவோ உன் பதில் தவறு" என்று திருப்பி அனுப்பு கிறார். பின்னர், குழாயிலிருந்து மெல்லியதாக சோட்டும் நீரின் ஓசை, தூரத்தில் ஆந்தையின் அழுகை ஒலி, பசும்புல் தரையில் வெட்டுக் கிளியின் ஓசை என்று தான் கேட்ட அனைத்துவித ஓசைகளையும் அடுத்து வந்த நாட்களில் குருவிடம் டோயோ சோல்ல, அத்தனை பதில்களையும் நிராகரித்தார் குரு!

இப்படியே ஒரு வருடம் ஓடிவிட்டது! ‘ஒரு கை தட்டலின் ஓசை எப்படியிருக்கும்?’- இந்த ஒரே கேள்வி மட்டுமே மனதை ஆக்கிரமித் திருக்க, மற்ற வேறெந்த வெளிப்புற சப்தங்களும் டோயோவுக்கு உரைக்கவேயில்லை! சட்டென்று மனதில் மின்னலடித்தது! ஓடிச் சென்று குருவின் முன்பு மண்டியிட்டுச் சோன்னான். அத்தனை சப்தங்களையும் தாண்டிச் சென்று நிசப்தமான அந்த பதிலைக் கண்டறிந்தேன். ஒரு கை தட்டலின் ஓசை என்பது நிசப்தமான சப்தம் (ண்ணிதணஞீடூஞுண்ண் ண்ணிதணஞீ)" என்று சோல்ல, குரு எழுந்துவந்து டோயோவுக்கு தன் ஒரு கையை நீட்டினார்.

என்னவொரு அற்புதமான கதை! மனதின் பழைய முடிவுகளிலிருந்து விலகி, இந்த கேள்விக்கான வெவ்வேறு பதில்களை நீங்களும்

யோசித்துப் பாருங்களேன்!

Post Comment

Post Comment