கலியுகத்தில் தோஷம் இல்லாத பிருகு முனிவரின் ஆஸ்ரமம் ஒன்று இருந்தது. அவரது பக்தியிலும் தவத்திலும் மனம் மகிழ்ந்த திருமால் ஸ்ரீ மாதவனாக முனிவருக்கு ஸேவை சாதித்தார். அதுவே மயிலாப்பூர் திருத்தலம்.
இது, ‘மயூரபுரி’ என்றும், ‘மாதவபுரி’ என்றும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.
மயிலை, ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத் துக்கு முன்புறம் ஸ்ரீ மாதவப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. பெரிய ராஜகோபுரம் தாண்டி உள்ளே நுழைந்தால், நெடிதுயர்ந்த துவஜஸ்தம்பம். துவாரபாலர்களின் அனுமதியோடு உள்ளே சென்றால் ஸ்ரீ மாதவப் பெருமாளை வீற்றிருந்த திருக்கோலத் தில் ஸேவிக்கலாம். பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி யோடு பிரசன்ன வதனத்துடன் அற்புதமாக ஸேவை ஸாதிக்கிறார்.
கம்பீரமான பெரிய திருமேனிகளின் எழிலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவருக்கு முன்னால் உத்ஸவ மூர்த்திகள் அத்தனை ஈர்ப்பு. அழகு, பளபளப்பு, கூர்மையான நாசியும் அழகிய
நீண்ட விழிகளும் பார்க்கப் பார்க்க திகட்டாத ஸ்வரூபம். பகவானின் தரிசனம் பெற்று தீர்த்தம், சடாரி வாங்கிய பின் வெளியே வந்தால் ஆழ்வார்கள், சேனை முதலியார், ஸ்ரீ ராமானுஜரை தரிசிக்கலாம்.
இத்திருக்கோயில் பெருமாளுக்கு கல்யாண உத்ஸவம் செய்வதாக நேர்ந்து கொண்டால், திருமண வயதாகியும் நீண்ட நாட்கள் திருமணமாகாத ஆண், பெண் பிள்ளைகளுக்கு விரைவில் கல்யாணம்
நடந்தேறுவது இக்கோயிலின் விசேஷம். இதனாலேயே இவர், ‘கல்யாண மாதவன்’ என்று பக்தர்களால் கொண்டாடப்படுகிறார். தம்மை வணங்குபவர்களின் நியாயமான விருப்பங்கள்,
சோந்தமாக வீடு, உத்தியோக உயர்வு, திருமணம், புத்திர பாக்கியம், நோய் நொடியின்றி வாழ்தல் என ஸகல கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருகிறார் இந்தப் பெருமாள்.
தனிக்கோயில் நாச்சியாராக அமிர்தவல்லித் தாயார் அமர்ந்த கோலத்தில் ஸேவை ஸாதிக்கிறார். மூலவரும், உத்ஸவரும் மணம் மிகுந்த மலர் மாலை களுடன் அதியற்புதமாக ஸேவை ஸாதிக்கின்றனர். அருள் மழை பொழியும் தாயார் குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் மிகவும்
வரப்ரசாதி.
பூவராக மூர்த்தி ஸன்னிதியில், ஸ்ரீ லக்ஷ்மி வராஹராக பெருமாள் ஸேவை ஸாதிக்கிறார். சிறிய மூர்த்தியானாலும், பெரிய பலன்களைத் தருவதில் வல்லவர் இவர். செவ்வாய்க்கிழமைகளில், நெய் விளக்குகள் ஏற்றி, 7, 9, 12 என்று பிரதட்சணம் செய்து வந்தால், வீடு, நிலம் சொந்தமாகக் கிடைக்கும் என்பது பிரத்யட்சமான உண்மை. மேலும், நிலம் சம்பந்தமான அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் வள்ளல் இவர் என்றால் அது மிகையில்லை. பட்டு வஸ்திரம் பூண்டு, பரிமளங்களுடன், பவ்யமாக
ஸேவை ஸாதிக்கும் இவரும் மிகவும் வரப்ரசாதி யாவார்.
தனிச் சன்னிதியில் கம்பீர அழகுடன் மலர் கொண்டையோடு, ஸர்வாலங்கார பூஷிதையாக
கோதை ஆண்டாள் தரிசனம் தருகிறாள். துளசி மாடத்தை வலம் வருகையில் ஒரு மண்டபத்தில்
ஸ்ரீ கோதண்டராமர், இளைய பெருமாள், சீதா பிராட்டியோடு தரிசனம் தருகின்றார். சின்னதாக ஆஞ்சனேயர் ஸன்னிதி யும் அங்கே உள்ளது. இத்தலத் தீர்த்தம் ஸந்தான புஷ்கரணி யாகும். புத்ர பாக்கியம் அளிக்கும் சக்தி பெற்ற திருக்குளம் இது.
இந்த ஆலயத்தில் பற்பல உத்ஸவங்கள், உபன்யாசங்கள் ஆண்டு
தோறும் நடைபெற்று வருகின்றன. பங்குனி மாதத்தில் திருநாராயணபுரம் ஸம்பத்குமாரனுக்கு நடப்பதுபோல் இங்கும் வைர முடி ஸேவை நடை பெறுகிறது. வெள்ளிக் கிழமைகளில் தாயார் உத்ஸவம், ஊஞ்சல் ஸேவை, தை, ஆடி வெள்ளிக் கிழமைகளில், சுமங்கலிகளுக்கு திருமாங்கல்யச் சரடு கொடுப்பது போன்றவையும் நடைபெறுகின்றன. பகவான் ஒய்யாரமாக, மேள வாத்தியங்களுடன் ஆடியாடி வரும்போது, நமது மனமும் அவனுடன் சேர்ந்து ஆடுவது போன்ற அனுபவம்
உண்டாகிறது.
மார்கழி முப்பது தினங்களும், திருப்பாவை
ஸேவிக்கப்பட்டு பெருமாளுக்கு வெண் பொங்கல் நைவேத்தி யம் விநியோகிக்கப்படு கிறது. பங்குனி உத்திரத்தில் நடை பெறும் கல்யாண உத்ஸவ ஸேவையை யும் மறுநாள் ஸேர்த்தி
ஸேவையும் தரிசித் தால் மனக்கவலைகள், துன்பங்கள் நீங்கி உன்னதமான வாழ்வு மலரும். மண வரம் தரும் மாதவப் பெருமாளைப் பணிந்து நலம் பெறுவோம். ட
Post Comment