பலன் தரும் ஸ்லோகம்-ஆபத்து, கண் திருஷ்டி அகல...

‘ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க

தேஜோமயம்

த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய

ரக்ஷாகரம்

நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த

கோலாஹலம்

வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் கே்ஷத்ரஸ்ய

பாலம் சிவம்’

பொருள் : சிவந்த முடியும் ஒளி மிகுந்த தேகத்தை யும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை ஆகியன தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, நமஸ்காரம். முக்கண்கள் கொண்ட வரே, ஆனந்த வடிவினரே, பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்துபவரே, அனைத்துப் புண்ணிய கே்ஷத்ரங்களையும் ரக்ஷிப்பவரே நமஸ்காரம்.

இந்தத் துதியை தேபிறை அஷ்டமி தினத்தன்று முடிந்த அளவு பாராயணம் செது பைரவரை வணங்கி வர, அனைத்து வகையான ஆபத்துக்களும், கண் திருஷ்டிகளும் அகலும்.

- எஸ்.சுப்ரமணியம், சேலம்

துக்கம் விலகி,

லட்சுமி கடாட்சம் பெருக...

‘நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே

சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ

ஸர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி

நமோஸ்துதே’

பொருள் : மகாலட்சுமி தேவியே நமஸ்காரம். நீயே மகா மாயையாகத் திகழ்கிறா. ஸ்ரீ பீடம் எனும் உலகின் உயர் பீடத்தில் வாசம் செபவள். தேவர் களால் பூஜிக்கப்பட்டவள். உனக்கு நமஸ்காரம்.

சங்கு, சக்கரம், கதை இவற்றைக் கரங்களில் தாங்கிப் பக்தர்களின் இன்னல் போக்கும் மகாலட்சுமி தேவியே நமஸ்காரம். எங்கும் வியாபித்திருப்பவள் நீ. எல்லோருக்கும் வரமளித்துக் காப்பவள் நீ. தீயவர்களுக்கெல்லாம் பெரும் பயத்தைக் கொடுப் பவள் நீ. எல்லா வகையான துக்கங்களையும் துடைத்து ஆறுதல் அளிப்பவள் நீ. மகாலட்சுமி தாயே நமஸ்காரம். எங்களைக் காத்தருள்வாயாக.

இந்தத் துதியை தினமும் வீட்டில் பாராயணம் செது வந்தால் திருமகள் திருவருளால் துக்கங்கள் விலகி, லட்சுமி கடாட்சம் பெருகும்.

- ஆர்.பிருந்தா இரமணி, ஐராவதநல்லூர்

வாக்கு வன்மை பெருக...

‘புத்திர் பலம் யசோ தைர்யம்

நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் ச

ஹனூமத் ஸ்மரணாத் பவேத்’

பொருள் : அறிவு, புகழ், வீரம், அஞ்சாமை, ஆரோக்கியம்,

உற்சாகம், சோல்வன்மை எல்லாம் அனுமானை நினைத்த மாத்திரத்தில் கிடைக்கும். அவனை வழிபட்டால் இவை அனைத்தும் நமது உடைமை ஆகிவிடும்.

மேற்கண்ட அனுமன் துதியை தினமும் கூறி வழிபட்டு வந்தால் வாக்கு வன்மை, மன தைரியம் ஏற்படும். அதோடு, கெட்டக் கனவு கள் வந்தாலும் அவை பலிக்காது.

- ஜலஜா பாலசுப்ரமணியம், விழுப்புரம்

Post Comment

Post Comment