ஆயர்பாடி மாளிகையில்...


நீயல்லால் தெய்வமில்லை! - 13
ஆத்மார்த்தி -இந்த இரட்டைத் தன்மையை உற்று நோக்குகிற யார்க்கும் வாழ்க்கை வேறொரு பூவாக மலரும். அப்படி மலர்ந்த எவர்க்கும் புகழ் வாழ்வு அழிவதில்லை. தன்னை உணர்வதிலிருந்து தொடங்குவதுதான் ஞானம். அப்படித் தன்னை அகழ்ந்து ஞானம் பகிர்ந்த இருவர் எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனும் என்றால் யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்திடக் கூடுமா?

‘கிருஷ்ண கானம்’ என்றொரு இசைப்பேழை. அது திரைப்படப் பாடல்களின் தோரணமல்ல. திரை காணா தெவீக கானங்களின் ஊர்வலம். எட்டு பாடல்கள். அவற்றை இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். எழுதியவர் கவிச்

சக்கரவர்த்தி கண்ணதாசன். இரண்டு பாடல்களைப் பாடியவர் பி.சுசீலா. ஒன்றைப் பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. இன்னொன்றைப் பாடியவர் எஸ்.ஜானகி. அளந்து அளந்து அளித்த கானாமிர்தம் எனக் கூறத்தக்க வகையில் ஒரு பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். எம்.எஸ்.விஸ்வநாதனே ஒன்றைப் பாடித் தந்தார். பக்தியரசு கே.வீரமணி மற்றொன்றைத் தன் உயிர்கொண்டு இழைத்தார். எஸ்.பி.பால சுப்ரமணியம் பாடியது ஓர் பாடல்.

இந்த இசைப்பேழை அடைந்த

செல்வாக்கை திரைப்படப் பாடல் களோ ஆன்மிக கானங்களோ இன்று வரை தொட்டடைந்ததில்லை என்று சோன்னால் தகும். பல நூறு தினங்களைப் புலர வைத்த பாடல்கள் இவை. இந்தப் பாடல் பேழை வெளியானபோது, அந்த எல்.பி.ரெகார்டின் பின்னே எழுதப்பட்டிருக்கும் வாசகங் கள் பாடல்களின் விபரங்களுக்கு அப்பால் ஒரு வரி இருந்தது.

‘பகவான் கீதையிலே சோன்னபடி இதை யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு சோர்க்கம் கிட்டும்.’ வெறுமனே விளம்பரத்துக்காக எழுதப் பட்ட சோற்கள் அல்லவே அல்ல. அத்தனையும் சத்தியம். இன்றும் கேட்பவர்களைக் கரைத்துத் தன்னுள் ஆழ்த்திவிடுகிற ஆன்மிக அமுதம் இந்தப் பாடல்கள். எட்டும் தேன் என்பது தகுசோல்லே.

எட்டுப் பாடல்களுமே எட்டுத் திசை யிலும் நின்றொலித்து, வெற்றியடைந்த பாடல்கள்தான். யாரைக் கேட்டாலும் கிருஷ்ண கானத்தின் ஏதாவதொரு பாடலில் தத்தமது மனதைப் பூட்டியோ, திறந்தோ வைத்திருப்பதாகச் சோல்வது அதன் வீர்யத்துக்கான சாட்சியம். எல்லாவற்றிலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல், ‘ஆயர்பாடி மாளிகையில்...’ பாடல் தான். கண்ணதாசன் தன்னை மறந்தெழுதிய தமிழ், நம்மை மறந்து அதனுள் கரைந்து இன்புறச் செவது சாகசம்.

கண்ணன் என்பது ஒரு பெயரல்ல, அது ஒரு வழிமுறை. கண்ணன் என்பது ஒரு உயிரல்ல, அது சகலத்தின் தொகுப்பு. நானும் நீங்களும் நேற்றும் நாளையும் இன்றும் இக்கணமும் எல்லாமே கண்ணன் என்ற ஒற்றைச் சோல்லுக்குள் அடக்கம். கண்ணனைக் குழந்தையாக்கிக் கண்ணதாசன் எழுதித் தந்த தாலாட்டு. எம்.எஸ்.வி. தன் மனதைக் குழந்தமைக்கே அழைத்துச் சென்று இசையமைத்த நற்பாட்டு. எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன் குரலை ஒரு கொண்டாட்டத்தின் கலயமாக மாற்றியதன் கான ரூபம். இதன் ஒவ்வொரு சோல்லும் மனம்

நீவும். கசங்கிய துணியை சூட்டுப்பெட்டி கொண்டு நீவி சுருக்கங்களை எடுத்துவிடு வது போல் மனதின் கசங்கல்களை,

கசடுகளையெல்லாம் நீக்கிவிடுகிற வல்லமை இந்தப் பாட்டுக்கு உண்டு.

‘ஆயர்பாடி மாளிகையில் தாமடியில் கன்றினைப்

போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

அவன் வாநிறைய மண்ணை உண்டு

மண்டலத்தைக் காட்டியபின்

ஓவெடுத்து தூங்குகின்றான் ஆராரோ’

(ஆயர்பாடி...)

மண்டலம் என்பதற்கு உலகம் என்றொரு அர்த்தம் உண்டென்பது தமிழின் அழகன்றி வேறென்ன...? மகாபாரதத்தை வழிநடத்திய கிருஷ்ணனின் உள்ளும் புறமுமான அம்சங்கள் அத்தனையையும் வடித்துக் குழைத்து வார்த்தெடுக்கப்பட்ட பாடல்களே, ‘கிருஷ்ண கானம்’ இசைப்பேழையில் இடம்பெற்றன. அவற்றில் கண்ணனைப் போற்றுகிற இந்தப் பாடல் தாலாட்டு.

‘பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே

கன்னமிட்டு

மன்னவன் போல் லீலை செதான் தாலேலோ

அந்த மந்திரத்தில் அவர் உறங்க

மயக்கத்திலே இவனுறங்க

மண்டலமே உறங்குதம்மா ஆராரோ’

(ஆயர்பாடி...)

‘நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்

தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ

அவன் மோக நிலை கூட

ஒரு யோக நிலை போலிருக்கும்

யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ’

(ஆயர்பாடி...)

‘அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும்’ என்பது எத்தனை எளியதோ அத்தனை அர்த்தம் பொதிந்த வரி இல்லையா? யார் அவனைத் தூங்க வைத்தார் என்று இருந்திருந்தால் அது

எளிய இயல்பான வினவுதலாக மாறியிருக்கும்.

‘யார் அவனைத் தூங்கவிட்டார்?’ எனும் போதல்லவா அது கடவுளுக்கான கானமாக மாற்றம்

பெறுகிறது.

அடுத்த வரியில், ‘கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்’ என்று சோல்வதுதான் எத்தனை வலிமையாக ஒலிக்கிறது...? கண்ணனின் முத்தம், ‘போதை முத்தம்’ என்று சோல்வது எத்தனை நிசமானது. பிறவிகளைக் கடக்கும் பாலமும் யோக போக தவப்பலனும் கொடுப்பினையும் அதுவன்றி வேறேது? இசையும் தமிழும் சேரும்போது இத்தனை இனிக்குமென்பதை அறியத் தருகிற பாடலல்லவா இது?

‘கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே

தூங்கிவிடும்

அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

அவன் பொன்னழகைப் பார்ப்பதற்கும்

போதை முத்தம் பெறுவதற்கும்

கன்னியரே கோபியரே வாரீரோ...

கன்னியரே கோபியரே வாரீரோ’

(ஆயர்பாடி)

எல்லா பாடல்களுமே மனோநிலை சார்ந்தவை. சோகப்பாடல், உற்சாகப் பாடல் என்பதெல்லாம் பொதுவான திறப்புகள். அவற்றைத் தாண்டி,

மெல்லிசைப் பாடலைக் கேட்பதற்கும் தாளக்கட்டோடு அடித்து ஒலிக்கிற பாடல்களைக் கேட்பதற்கும் வித்தியாசம் உண்டுதானே?

எந்தப் பாடலையும் அவற்றைக் கேட்பதற்கான ஒலிப்பொழுதும் மனோ நிலையும் முக்கியமானவை.

பயணத்தின்போது கேட்பதற்கும் தனிமையின் போது கேட்பதற்கும் உற்சாக நேரத்தில் லயிப்பதற்கும் மனம் சரியில்லாதபோது தவிப்பதற்குமான பாடல்கள் தனித்தனியானவை என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள்.

‘ஆராரோ’ எனும்போதும், ‘தாலேலோ’ எனும் போதும் இரங்காத மனமும் இரங்கும்... உறங்காத இதயமும் உறங்கும். அபூர்வ கானம் இது. வெகு சில பாடல்கள் மட்டும்தான் இந்த உலகில் எல்லாவற் றுக்குமானவை... எப்போதைக்குமானவை. எந்த நேரம் ஒலித்தாலும் கேட்பதற்கு உகந்தவை.

அதிகாலை தொடங்கி, நள்ளிரவு வரை ஒரு தினத்தின் எந்தக் கணமானாலும் ஒலிப்பதற்கான மனமுகம் வாத்தவை. அப்படியான வெகு சில பாடல்களுக்குள் ஒன்றுதான் இந்தப் பாடல். நறுமலர்க் காடு போல் தொலைவதற்கும் கலங்கரைவிளக்கம் போல் ஒளிர்வதற்குமான ஒரே பாடல். வாழ்க கண்ணனின் புகழ்.

(மேலும் வலம் வரலாம்)

Post Comment

Post Comment