கேள்வி நேரம்ஞானகுரு -பூஜை அறையில் உள்ள மணியைத் தரையில் வைக்கக் கூடாது என்பது ஏன்?

- ஆர்.தீபா, கோவை

எந்தப் பொருளையுமே வெறும் தரையில்

வைக்கக் கூடாது என்று ஒரு பொதுவான சாஸ்திர விதி உண்டு. பூமிக்கு எந்தப் பொருளை வைத்தாலும், அதன் சக்தியை ஈர்த்துக்கொள்ளும் தன்மை இருக் கிறது. பூஜை சமயத்தில் பயன்படுத்துகிற பொருள் சக்தியுடன் விளங்க வேண்டும் என்பதற்காக அதை ஒரு தட்டில் வைத்து பூஜை அறையில் வைக்க

வேண்டும். மணியின் வட்டமான பாகத்தில் வாசுகி யும், அதன் நாக்கில் சரஸ்வதி தேவியும், தண்டத்தில் ருத்ரனும், மத்தியில் மகாவிஷ்ணுவும், அடிப்பாகத்தில் பிரும்ம தேவனும் வாசம் செய்கிறார்கள். மிகப்பெரிய விழாக்கள் நடைபெறும்போது மணிக்கு திக்பாலகர் கள், பிரும்ம பூஜை நடைபெற்ற பின்தான் அதை ஒலிக்கச் செய்வார்கள்.

மணி ஓசையைக் கேட்டால் பூஜை நடத்தப்படுவ தாக எண்ணி மகாலட்சுமி தேவியும், பிற தெய்வங் களும் அங்கே ஒன்று கூடுவர் என்பது சாஸ்திர விதி. இதன் ஒலியைக் கேட்ட உடனே அசுரர்கள், ராட்சசர் கள், பிசாசுகள், துர்சக்திகள் ஓடிவிடுவார்கள் என்பது நம்பிக்கை. மணியின் ஆற்றல் விலகாமல் இருக்க அதன் கீழ்பகுதி பூமியில் படாமல் இருப்பது நல்லது.

யாகம், சுப காரியம், அசுப காரியம் ஆகியவற்றில் தர்ப்பைப் புல்லை ஏன் பயன்படுத்துகின்றனர்?

- கே.வாசுகி, மருதாநல்லூர்

தர்ப்பை என்பது தெய்வத்தன்மை வாய்ந்த புல். கோரை வகைப் புற்கள் பல வகை இருந்தாலும் தர்ப்பைக்கு ஈடு இணை கிடையாது. காந்த சக்தியும் தெய்வத் தன்மையும் அதிகமாக உடையது என்பதால் இது தெய்வங்களின் ஆயுதம் போன்றது என்பர். கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற ஏழு வகை நதி களும் இதில் வாசம் செய்வதாகவும், தீர்த்தங்கள் யாவும் அதில் இருப்பதாக வேதங்கள் சொல்கின்றன. ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது என்னதான் மலர் அலங்காரங்கள் செய்து வைத்தாலும் தர்ப்பையால் செய்யப்பட்ட கூர்ச்சம் இல்லாவிட்டால் மந்திரங்களை அதில் சேரச் செய்ய முடியாது. இந்தப் புல்லை நீரில் இட்டு வைத்தால் தண்ணீரைத் தெளி வடையச் செய்யும் ஆற்றல் அதற்கு உண்டு.

யாகத்தை நடத்தும் இடத்தில் வெளியிலிருந்து வரும் துர்சக்தியை அகற்றவும் சுப காரியங்களில் தெய்வ ஆற்றலை நிலைபெறச் செய்யவும், அசுப காரியங்களில் பித்ருக்களைத் திருப்திப்படுத்தவும் அந்த நேரத்தில் தீர்த்தங்களைக் கொண்டு வந்து அவர்களை ப்ரீதி, சந்தோஷம் அடையச் செய்யவும் உதவுகிறது. வலது கை மோதிர விரலில் கப நாடி ஓடுகிறது. இதில் தர்ப்பை மோதிரம் அணிந்து பூஜை செய்வதால் நூறு பங்கு பலனும், கபம் தொடர்பான நோய்கள் அகலவும் வழி ஏற்படும். தர்ப்பையால்

சிவலிங்கம் செய்து பூஜை செய்பவர்களுக்கு அதிர்ஷ்ட யோகங்கள் உண்டாகும் என்பார்.

சித்தர்கள் கூறிய குளிகைகளின் பயன்கள் என்ன?

- சி.தேவநாதன், மயிலாடுதுறை

திருமூலர் எட்டு வகை ரசக் குளிகைகள் பற்றிக் கூறியுள்ளார். வள்ளலார் ரசமணிகளில் ஒன்பது வகைகளை வெளிப்படுத்தினார். திருமூலருடைய சொரூப குளிகை, சூட்சும மணி, கமலினி, காமினி, சித்தி மணி, யோகினி, விண்ணோகி, பரிச மணி ஆகியன! வள்ளலார் கூறியவை ஒன்பது வகை ரச மணிகள்: 1. பரமீபரன் - அண்டம் பொருளைக் காட்டுகிறது. 2. பராபரமணி - உடலையும் அதன் பயனையும் காட்டுவது. 3. அரும்பெறல் மணி - நினைத்ததை நினைத்தபடி அருள்வது. 4. ககன மாமணி - விண்ணுலகப் பொருட்களை ஆட்டி வைப்பது. 5. சர ஒளிமணி - மண்ணுலகப் பொருட் களை ஆட்டி வைப்பது. 6. கலைநிறை மணி - அனைத்து உலகத்திலும் உள்ளதை அறியச்செய்து உலா வரச்செய்வது. 7. வித்தகமணி - சராசரப் பொருட்களை விளக்குவது. 8. சித்துசெய் மணி - மகா சித்திகளை அருளவல்லது. 9. வளர் ஒளி மணி - அழியா வாழ்வு அளிப்பது. ரச மணிகளைக் கொண்டு சிறு சிலைகள் செய்து பூஜை அறையில் வைத்து வணங்குவதே இல்லற தர்மத்தில் இருப்போர் செய்ய வேண்டியது.

திருமணம் செய்து கொள்ளாவிட்டால் மோட்சம் கிடைக்காது என்று சிலர் கூறுவது சரிதானா?

- கே.இளவரசி, பட்டாம்பாக்கம்

‘இல்லறம் அல்லது நல்லறமன்று’ என்று ஔவைப் பிராட்டி சொன்ன வரிகளில் இருந்து பார்த்தால் உலக அறங்களில் ஒன்றான இல்லறத்தை கடைப்பிடித்துதான் ஆகவேண்டும். பிறந்த ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது. இல்லறம் ஏற்று அதில் ஆணோ,

பெண்ணோ மகவைப் பெற்று இந்த உலகத்தார்க்கு நன்மைகள் செய்ய நம் மூலமாக ஒரு ஜீவனைக் கொடுக்க வேண்டும்.

கணவன், மனைவி இருவரும் தெய்வ நெறி, விருந்து நெறி, உறவினர்களிடம் நடந்து கொள்ளும் நெறி, தான் நடக்கின்ற நெறி, அன்பு நெறி ஆகிய ஐந்து வகை நெறிகளைக் கடைப்பிடித்து உலகில் வாழ்வதால் இறையருள் சித்திக்கிறது. இதனால் பிறவிப் பயன் என்ற மோட்சம் கிடைக்கிறது. பூமியில் வளரும் செடி, கொடிகளும், விலங்குகளும் இந்த உலகம் பயனுற உயிர்களை விருத்தி செய்து விட்டுச் செல்கின்றன.

முத்திரைகளால் இறைவனைக் காணலாம் என்று மகான்கள் கூறி இருப்பது பற்றி...?

- எல்.செல்வராணி, பெருந்துறை

மகரிஷிகளும், தபஸ்விகளும் தவம் செய்கிறபோது ஐந்து வகை முத்திரைகளைப் பயன்படுத்துவது வழக்கம். பஞ்ச முத்திரைகள் எனப்படும் இவற்றை ஒருவர் மனம் ஒருமைப்பட்டாலே செய்ய இயலும். விழிகளை மத்தியில் நிறுத்தி மேல் நோக்கி

சிதாகாசத்தை-ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டி ருப்பது கேசரீ.

கண்களை அசைக்காமல் மூக்கு நுனியில் விழியை நிறுத்திக் காண்பது பூஜரீ. அரைப் பார்வையோடு மூக்கின் மத்தியில் பார்வையை நிறுத்துவது மத்ய லட்சணம். செவி, கண்கள், மூக்கு, வாய் இவற்றை விரல்களால் மூடியபடி, வெளிப் பார்வையையும் மனதையும் உள்முகமாகத் திருப்பி, கண் விழிகளை மத்தியில் நிறுத்தி மனம், புத்தி, வாக்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்திருப்பது சன்முகீ.

கண்களை மூடித் திறக்காமல் இமைக்காமல் திறந்து வானம் நோக்கியபடி அங்குள்ள வித்தியாச மான மண்டலங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது சாம்பவீ. விழிகளால் செய்யப்படும் முத்திரைகளுக்குப் போதிய பயிற்சியும் முயற்சியும் தேவைப்படும். உடற்கட்டுப்பாடு, உணவில் எளிமை அவசியம்.

Post Comment

Post Comment