கந்த சஷ்டி விரதம் தொடங்கிய திருக்கோயில்!


ஆலயம் கண்டேன்
பொ.பாலாஜி கணேஷ் -பின்னத்தூர் கிராமத்தில் ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஸ்ரீ ராமநாதேஸ்வரர் மற்றும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருக்கோயில் உள்ளது. இந்த ஆலயம் சிதிலமடைந்து இருந்ததைக் கண்ட பாம்பன் சுவாமிகள், தனது பெருமுயற்சியால் அதை நூதன

சிவாலயமாக மாற்றினார். ஆலயத்தின் முன்பு வள்ளி, தெவானை சமேத சுப்ரமணியருக்கு தனிச் சன்னிதி அமைத்தார். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் மறைவுக்குப் பிறகு ஸ்ரீ சுப்ரமணியருக்கு முன்பு அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

பாம்பன் சுவாமிகள் 1912ஆம் ஆண்டு பின்னத்தூர் வந்து, அங்கு ஏழரை ஆண்டு காலம் தங்கி இருந்தார். அப்போது அங்கிருந்த வேப்ப மரத் திட்டு ஒன்றின் கீழே அமர்ந்து கந்தப்பெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். பாம்பன் சுவாமிகள் தவம் புரிய அமர்ந்த அந்த வேப்ப மரம் அன்றிலிருந்து இன்றுவரை வளர்ச்சி அடையாமல் அதே நிலையில் உள்ளது ஆச்சரியம். மிகப்பெரிய இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதுகூட இந்த மரத்திலிருந்து ஒரு கிளை கூட முறியவில்லை என்பது அதிசயமே. இந்த

வேப்ப மரத்தைச் சுற்றிலும் வேறு மரங்கள் ஏதும் கிடையாது.

சுவாமிகள் முருகனின் அருள் வேண்டி தவம் செத வலிமையால், அந்த வேப்ப மரமும் வலிமை பெற்று விட்டதாக பக்தர்கள் நம்புகிறார்கள். சுற்றிலும் வயல்வெளிகள் மற்றும் மரம் வளரக்கூடிய அளவுக்கு நீரோட்டம் இருந்தும் அந்த மரம் துளிக்கூட வளர வில்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியம்.

வேப்ப மரத்தின் கீழ் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தவம் செதபோது, நாட்டார்மங்கலத்திலிருந்து அவரை நோக்கி ஒரு ஏவல் வர, அதை முருகப் பெருமானின் அருளோடு தடுத்துத் திருப்பி அனுப்பிய தாகக் கூறப்படுகிறது.

இத்தலத்தில் அருளும் வள்ளி, தெவானை சமேத முருகப்பெருமானோடு, ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளை யும் வணங்கினால் கிரகக் கோளாறுகளால் தடை பட்டுள்ள திருமணத் தடைகள் நீங்கி, மண வாழ்வு சிறப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூன்யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வணங்கினால் கைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் பரவசத்துடன் கூறுகிறார்கள். கோயிலில் மாதம் தோறும் பௌர்ணமி, கார்த்திகை, சஷ்டி ஆகிய மூன்று நாட்களிலும் சிறப்பு பூஜைகள் செயப்படுகின்றன.

சஷ்டி விரதத்தை முதன்முதலாக ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் இந்தத் திருத்தலத்தில்தான் தொடங்கியதாகக் கூறுகின்றனர். அதனாலேயே முதன் முதலில் சஷ்டி விரதத்தை மேற்கொள் வோர் இக்கோயிலில் அருளும் வள்ளி, தெவானை சமேத முருகப் பெருமானை யும் பாம்பன் சுவாமிகளையும் வணங்கி விரதத்தைத் தொடங்குகிறார்கள். அப்படித் தொடங்கி னால் சஷ்டி விரதம் முழு பலனையும் தரும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்தக் கோயில் அமைதியான சூழ்நிலையில் அமைந்திருப்பதால் இங்கே மன அமைதி வேண்டி கண் மூடி தியானம் செதால் அரை மணி நேரத்தில் மனதில் இருக்கும் அத்தனை கவலை களும் மறந்து உடலும் மனமும் புத்துணர்ச்சியோடு திகழ்வதை உணரலாம்.

இந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பர்வத வர்தினி சமேத ஸ்ரீ ராம நாதேஸ்வரரை வணங்கினால் ராமேஸ் வரத்தில் அருள்பாலிக்கும் சிவபெரு மானை வணங்கியதற்குச் சமம் என்று இப்பகுதி மக்கள் கருதுகிறார்கள்.

ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும்

சுவாமியை வணங்கிச் செல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சூரிய ஒளி ராமநாதேஸ்வரர் மீது படும் அற்புதக் காட்சியை மெசிலிர்ப்போடு பக்தர்கள் தரிசித்து வணங்கிச் செல்கின்றனர்.

அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தும் இக்கோயில் இறைவனை தரிசிக்கவும் பாம்பன் சுவாமிகள் தவமியற்றிய அதிசய வேப்ப மரத்தையும் கண்டு அருள் பெற நீங்களும் ஒருமுறை இந்தக் கோயிலுக்கு வந்து அருள்பெறலாமே!

அமைவிடம் :

சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை நகர் வழியாக பிச்சாவரம் செல்லும் சாலையில் உள்ளது பின்னத்தூர் கிராமம்.

தரிசன நேரம் :

காலை 7 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 8 மணி வரை.

Post Comment

Post Comment