லட்ச தீபத் திருவிழா!


வழிபாடு
-சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள

ஸ்ரீ ராமராஜ்யா ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் ஸ்ரவணம் அன்று (திருவோணம் நட்சத்திரம்)

பசு நெ கொண்டு ஏராளமான தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றனர். இது மிகவும் வியப்பூட்டுகிற,

சிறப்புக்குரிய நிகழ்வாகும்!

கடந்த 2019 டிசம்பர் மாதம் சர்வாலய தீபத்தன்று 1008 விளக்குகளுடன் சாதாரணமாகத் தொடங்கப் பட்டது இந்த வழிபாடு. பின்னர், ஸ்ரவணம் நாளில் ஒவ்வொரு மாதமும், விளக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, இந்த வருடம் நவம்பர் 21ஆம் தேதியன்று ஒரு லட்சத்து எட்டு தீபங்களை ஏற்றுவதற்கு பாதை வகுத்தது. ஆயத்தப் பணிகளான தீபங்களை வரிசையாக அடுக்கும் பணியை, ஆர்வத்துடன் தன்னார்வலர்கள் பெரும் குழுக்களாக செகின்றனர். லட்ச தீபங்கள் ஏற்றும் நிகழ்வு முடிந்ததும் மக்கள் ஒன்று கூடி, பிரதான கோயிலான பூரண ப்ரஹ்மம் சன்னிதானத்தை வலம் வந்து

பிரசாதம் அருந்தி மகிழ்கிறார்கள்.

ஸ்ரீ ராமராஜ்யத்தில் அமைதியான மற்றும் ஆனந்த மான சூழலுக்கு மத்தியில் எண்ணற்ற தீபங்கள் ஒளிர்வதை காணும் பக்தர்களுக்கு மனநிறைவும் அலாதியான அமைதியும் ஏற்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 18ம் தேதி, லோக கே்ஷமத்துக்காக லட்சத்துக்கும் மேலாக ஏற்றப்பட்ட தீபமேற்றும் வைபவத்தில், பொது மக்கள் பெருந்திரளாகப் பங்கு கொண்டு, இந்த அற்புத காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.

பிரகாசமான எதிர்காலத்துக்கும், ஆத்மா தெவீகம் மற்றும் உயர்ந்த எண்ணங்களுடன் புத்துயிர் பெறவும், இந்தத் திருவிளக்கேற்றும் வைபவம் வழிசெயும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்தடுத்து வரக்கூடிய நாட்களில் இந்த வைபவம் மென்மேலும் சிறப்புறும் என்பதிலும் ஐயமில்லை!

ஸ்ரீ ராமராஜ்யா கோயில் சார்பாக சனாதன தர்மத்தைப் பின்பற்றும் உண்மையான ஆன்மிகத்தை சார்ந்தவர்களால் நடத்தப்படுகின்ற, லாப நோக்கமில் லாத நிகழ்வு இது. பங்கேற்பு முற்றிலும் இலவசம்!

- சுனில்ராஜா

Post Comment

Post Comment