கிராமிய (பல) ஆகாரங்கள்டி.ஜெயலெஷ்மி, சென்னை -சுவியம் உருண்டை

தேவை: துருவிய வெல்லம், தேங்காய் - தலா 1 கப், ஏலத்தூள் - 2 டீஸ்பூன், கெட்டியாக அரைத்த உளுந்த மாவு - 2 கப், எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை: வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்ச

வேண்டும். இளம் பாகுநிலையில் தேங்காய்த் துருவல், ஏலத்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்க வேண்டும். உளுந்த மாவில் சற்று நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு, எண்ணெயைக் காய வைத்து இனிப்பு உருண்டைகளை உளுந்த மாவில் முழுவதும் நனைத்து எடுத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்து சற்று சிவந்தவுடன் எடுக்க

வேண்டும். நாவில் நனையும் சுவியம் ரெடி.

சீடைக்காய்

தேவை: புழுங்கலரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1/4 கப், உப்பு - சிறிது, தேங்காய்ப்பால் - 2 கப், பொரிக்க - தேவையான எண்ணெய்.

செய்முறை: புழுங்கலரிசியைச் சுத்தமான துணியால் துடைத்துக்கொள்ளவும். பின் வெறும் வாண1/4யில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுத்து ஆறவிடவும். இதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து மாவாக அரைக்கவும். இந்த மாவுடன், உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்துப் பிசைந்து வட்டமாகவோ (அ) நீளமாகவோ உருட்டிக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து எடுக்கவும்.

முந்திரிக் கொத்து

தேவை: பாசிப்பயறு, வெல்லம் - தலா 1/2 கிலோ, உடைத்த கடலை - 100 கிராம், அரிசி மாவு - 1 கப், ஏலத்தூள், சுக்குத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், தேங்காய்த்

துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - சிறிது, எண்ணெய் - பொரிக்க.

செய்முறை: வெறும் வாண1/4யில் பயறை வாசனை வரும்வரை வறுக்கவும். தேங்காய்த் துருவலையும் வறுத்துக்கொள்ளவும். வறுத்த பயறுடன் உடைத்த கடலையைக் கலந்து மாவாக்கிக்கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, இளம் பாகாக வைத்து ஏலம், சுக்கு, வறுத்த தேங்காய் கலந்து மாவைக் கொட்டி நன்கு கிளறி உருண்டைகள் செய்யவும். அரிசி மாவை சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொண்டு, எண்ணெயைக் காயவைத்து, உருண்டைகளை மூன்று மூன்றாகச் சேர்த்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும். இது சத்தான முத்தான முந்திரிக் கொத்து!

போனகம்

தேவை: பச்சரிசி - 2 கப், கடலைப் பருப்பு - 1/4 கப், சீனி - 1/4 கப்,

நெய் - 1/4 கப், எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: அரிசியைக் களைந்து ஊறவைத்து, ஊறிய பின் நீரை வடித்து,

அரிசியை மாவாக்கவும். மாவு உலர்ந்து போகாமல் இருக்க. ஒரு ஈரத் துணியால் வாய் ஒடுங்கிய பாத்திரத்தில் போட்டு மூடவும். கடலைப் பருப்பை லேசாக வறுத்து

¾ வேக்காடு வேகவைத்து, நீரை வடித்து, கரகரப்பாகப் பொடித்துக்கொண்டு,

அரிசி மாவில் 5 கைப்பிடியும், கடலைப் பருப்புப்பொடி 1 கைப்பிடியும் போட்டு நெய்விட்டுக் கலந்து சிறு உருண்டைகள் செய்யவும். ஒரு தட்டைக் கவிழ்த்துப் போட்டு அதன்மேல் வெள்ளைத் துணியை நனைத்துப்போட்டு உருட்டிய மாவுக்கலவையை வைத்துத் தட்டவும். அதன்மேல் ஒரு 1/2 ஸ்பூன் சீனியை வைத்து அழுத்தமாக மூடி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதுவே போனகம் ஆகும்.

குறிப்பு: மாவின் ஈரம் உலரும் முன்பு செய்துவிட வேண்டும்.

வெள்ளைக் காராமணி குணுக்கு

தேவை: வெள்ளைக் காராமணி - 1 கப், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு,

பச்சரிசி - தலா 1 டேபிள்ஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், வற்றல் மிளகாய் - 4, பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - பொரிக்க (தேவைக்கு).

செய்முறை: காராமணியுடன், பருப்பு வகைகள், அரிசி மிளகாய் வற்றல் எல்லாம் சேர்த்து, நீரில் களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு, நீரை வடித்துவிட்டு, இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் கரபகரப்பாக அரைத்து எடுத்து

கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கலந்து எண்ணெயைக் காயவைத்து, கையால் கிள்ளி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கரகர, மொறுமொறு வெள்ளைக் காரா மணி குணுக்கு தயார்!

கலகல சங்குப் பணியாரம்

தேவை: மைதா மாவு - 2 கப், நெய் - 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள், உப்பு - அளவாக, பேக்கிங் பவுடர் - துளி, பெருங்காயம் - சிறிது, எண்ணெய் - பொரிக்க தேவைக்கு.

செய்முறை: மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள், நெய், உப்பு, பெருங்காயத் தூள்

சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து, அடித்துப் பிசைந்து 10 நிமிடம் ஊறவிடவும். பிசைந்த மாவை சுண்டைக்காய் அளவு உருட்டி, புதிய சீப்பு ஒன்றில் (அலம்பித் துடைத்து) வைத்துத் தேய்த்து சுருட்டினால் சங்கு போல வரும். காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்தால் சங்குப் பணியாரம் ரெடி! இதிலேயே இனிப்பு வேண்டும் என்றால் உப்பு, மிளகாய் தவிர்த்து, பிசைந்து சங்குகள் செய்து பொரித்துக் கொள்ளவும். சர்க்கரையில் கம்பிப் பதம் வைத்து, பொரித்த சங்குகளைப் போட்டுப் புரட்டி எடுத்தால் இனிப்பான சங்குப் பணியாரம் ரெடி.

கமர்கட்

தேவை: புதிய தேங்காய்த் துருவல், வெல்லத்தூள் - 2 கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலத்தூள் - சிறிது.

செய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி, லேசாக பாகு வரும்போது, தேங்காய்த் துருவலைப் போட்டு, நன்கு சுருள வரும்போது நெய் சேர்த்துக் கிளறி இறக்கி ஆறி இறுகுவதற்குள் வேகமாக சிறுசிறு கோ1/4கள் போல உருட்டவும். சூடு பொறுக்கவில்லை என்றால், முத1/4ல் கைக்கு வருவதுபோல், நெய் தொட்டு உருட்டிவிட்டு, பிறகு அழுத்தி உருட்டிப் போடவும். தேங்காய், வெல்லம், நெய் மணத்துடன் ருசியாக இருக்கும் இந்தக் கிராமத்து கமர்கட். கிராமத்தில் குழந்தைகள் ‘காக்கா கடி’ கடித்து மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்து மகிழ்வர்.

நவதானிய சுக்கிடியா

தேவை: வெள்ளைச் சோள மாவு, கேப்பை மாவு, சம்பா கோதுமை மாவு,

பொட்டுக்கடலை மாவு, நிலக்கடலை மாவு - தலா 100 கிராம், ஏலத்தூள், சுக்குத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை - தேவைக்கேற்ப, நெய் - 150 கிராம்.

செய்முறை: மாவை தனித்தனியாக வறுத்து தட்டில் கொட்டி ஆறவிட்டு சுக்குத்தூள், ஏலத்தூள் சேர்க்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து வடிகட்டி

ஒரு கம்பிப் பாகு பதம் வரும்வரை காய்ச்சி, அதனுடன் வறுத்த மாவு கலவையைக் கட்டி தட்டாமல் கிளறி அடுப்பை நிறுத்தி நெய்விட்டு சுருள் வரும்போது

தட்டில் கொட்டி, துண்டுகள் போடவும். வித்தியாசமான ருசியுடன் சத்துள்ள சுக்கிடியா ரெடி!

Post Comment

Post Comment