மும்பை பரபரஆர்.மீனலதா, மும்பை -மாமேதைகளின் இசைக்கருவிகள்!

சிறந்த பாரம்பரிய பிரபல சங்கீத மாமேதைகள் தாங்கள் உபயோகித்த பல்வேறு இசைக்கருவிகளை மும்பை ஸ்ரீசண்முகானந்தா சபாவிற்குப் பரிசாக அளித்துள்ளனர். இவற்றை வைக்க, கலைக்காட்சிக்கூடம் (ஞ்ச்டூடூஞுணூதூ) ஒன்று கடந்த 3 மாதங்களில் சபாவில் அமைக்கப்பட்டுள் ளது. பொதுமக்களும் இவற்றைக் காணும் வகையில், சமீபத்தில் ஸ்ரீசண்முகானந்தா சபா தலைவர் டாக்டர் வி.சங்கர் இந்தக் கலைக் காட்சிக் கூடத்தைத் திறந்து வைத்துள்ளார். இக் கலைக் காட்சிக் கூடத்தில் உஸ்தாத் பிஸ்மில்லாகான் உபயோகித்த ஷெனாய், உஸ்தாத் ஜாகீர் ஹுசேனின் தபா, யு.சீனிவாஸின் மாண்டலின், லால்குடி ஜெயராமனின் வயலின், பாலக்காடு மணி ஐயரின் மிருதங்கம், பண்டிட் ஹரிபிரஸாத் சௌராஸியாவின் புல்லாங்குழல் போன்ற பல இசைக்கருவிகளைக் காணலாம். மேலும் 100 வருட பழைமையான மிருதங்கம் ஒன்றும் உள்ளது.

மாறிய டப்பாவாலாக்கள்!

கடந்த 125 வருட காலமாக மும்பை மாநகரின் டப்பாவாலாக்கள், அலுவலகம் செல்வோரின் வீடு களில் இருந்து அவர்கள் வேலை பணியைச் செய் கின்றனர். இடங்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் தொழில், ஊரடங்கால் இப்பணி முடங்கிப் போனது. ஊரடங்கிற்கு முன்புவரை சுமார் 5000 டப்பாவாலாக்கள் தினசரி 1லி லட்சம் பேர்களுக்கு மேல் மதிய உணவு சப்ளை செய்துகொண் டிருந்தனர். தற்சமயம் 450 டப்பாவாலாக்கள் 3000 பேர்களுக்குத்

தான் சப்ளை செய்ய முடிகிறது. ஆதலால்,

நாசிக், புனேயில் உள்ள தோட்டங்

களிலிருந்து பறிக்கப் பட்ட காய்கள் மற்றும் பழங்களை மும்பைக்குக் கொண்டுவந்து விற்பனை செய்வதற்காக, டப்பா வாலாக்கள் புதியதாக ‘மொபைல் ஆப்’ ஒன்றை உருவாக்கியுள்ளனர். வாழ்வாதாரத்திற்காக இவர்கள் பழ வியாபாரிகளாக மாறி விட்டனர்.

தீனிக்கு ஃபைன்!

தீனிக்கு ஃபைன் ஆ! ஆமாங்க! பறவைகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் புறாக்கள், தெருநாய்கள் போன்றவற்றுக்கு உணவு வழங்கு வது வழக்கம். தற்போது புறாக்கள் மூலம் மனிதர் களின் நுரையீரலைப் பாதிக்கக்கூடிய நிமோனியா காய்ச்சல் பரவுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மும்பை தானே பகுதியில் பலர் புறாக்களுக்குத் தீனி போடும் சமயம், புறாக்களின் இறகுகளோ, எச்சங்களோ அவர்கள் மக்கள் மீது பட்டு நோய் பரவுகிறது. இதன் காரணம் புறாக்களுக்குத் தீனி போடுவதற்கு தடை விதித்ததோடு, ஃபைன் சூ 500/- (மீறிப் போடுபவர்கள்) கட்ட வேண்டுமென தானே மாநகராட்சி அறிவித்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

சோனு சூட்!

கொரோனா ஊரடங்கு சமயம், ஏழை விவ சாயிக்கு டிராக்டர் உதவி; ரஷ்யாவில் சிக்கியிருந்த தமிழக மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி, பொருளாதார ரீதியில் சிரமப்படும் மாணவ - மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை, மலை வாழ் கிராமத்துப் பிள்ளை கள் படிப்பிற்காக மொபைல் டவர், வெளி மாநிலங் களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் தங்களது வீடு திரும்ப போக்குவரத்து வசதிகள். இப்படிப் பல்

வேறு நலத் திட்டங்களை அருமையாகச் செயல்படுத் திய பிரபல நடிகர் சோனு சூட், இவற்றிற்காகத் தமது சொத்துக்களை அடமானம் வைத்திருக்கும் விபரம்

தற்சமயம் தெரியவந்

துள்ளது.

Post Comment

Post Comment