டிசம்பர் பூக்கள்கட்டுரை, படங்கள் : ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு -ஒரு டிசம்பர் மாதம். பனி மாதக் கடவுளான டிசம்பர் மாதக் கடவுளிடம் அழகிய சிறுமி ஒருத்தி, தனக்குப் பூக்கள் வேண்டுமெனக் கேட்கிறாள். கொட்டுகின்ற பனியில் நான் எப்படி புதிதாக மலர்களைப் பூக்க வைக்க முடியும்? இருந்தாலும் சிறுமி நீ வந்து கேட்கிறா. அதற்காக நான் சிறு முயற்சி செகிறேன். எப்படி இருப்பினும் வசந்த காலக் கடவுளான ஏப்ரல் மாதக் கடவுளால்தான் பூவினை மலரச் செவிக்க முடியும். உனக்காக நான் அவரிடம் உதவி கேட்கிறேன்" என்கிறார் டிசம்பர் மாதக் கடவுள். உதவி கேட்கிறார். இசைவு தெரிவிக் கிறார் ஏப்ரல் மாதக் கடவுள். உடனே டிசம்பர் பூக்கள் பூக்கின்றன. அந்தச் சிறுமி மிகவும் மகிழ்ந்து போகிறாள்.

உலகின் மலைப்பகுதிகளில் பனிக்காலங்களில் பூத்துக் குலுங்குகின்றன டிசம்பர் பூக்கள். ஊட்டி தாவரவியல் பூங்காவில் பனிக்காலங்களில் டிசம்பர் பூக்களின் வண்ண வண்ண அழகினைக் கண்டு ரசிக்க லாம். தற்போது அதுவே படிப்படியாக சமவெளிப் பகுதிகளில் வணிக நிலைப் பூக்களாக சாகுபடி செயப்பட்டு வருகின்றன. அவ்வளவு ஏன்? வீடுகளில் வாசலில் டிசம்பர் பூச்செடிகள் வைத்து வளர்ப்பவர்களும் உள்ளனர். அந்த வீட்டு வழியே அப்பூக்களைப் பார்த்தபடியே

செல்லும் சிறுமிகளிடம், உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஏ... அங்க பாருடீ... டிசம்பர் பூ." சிறுமிகளை, டீன்ஏஜ் பெண்களைக் குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளைக் கவர்ந்து இழுக்கும் டிசம்பர் பூக்களுக்கு வாசம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக யாரும் டிசம்பர் பூக்களை வெறுத்து ஒதுக்குவதில்லை என்பதே டிசம்பர் பூக்களின் தனிச்சிறப்பு. காரணம், அந்தப் பூக்களின் வர்ணங்கள்.

டிசம்பர் பூக்கள் பூத்திருக்கும் பூந்தோட்டம் ஒன்றுக்குச் சென்று வந்தோம்.

திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் டூ திருப்

பைஞ்ஞீலிக்கு இடையே உள்ளடங்கிய கிராமம் திருவரங்கப்பட்டி. அங்கு தர்மராஜ் என்பவர் இருபது முப்பது ஆண்டுகளாகவே டிசம்பர் பூக்கள் சாகுபடி செது வருகிறார். அவரது தோட்டத்தில் ரோஸ் வண்ண டிசம்பர் பூக்களும், ஊதா வண்ண டிசம்பர் பூக்களும் பூத்துக் குலுங்கி நம்மை வரவேற்கின்றன. அவரது மகள் பெரியக்காள், தோட்டத்தில் பூக்கள் பறித்துக்கொண்டிருக்கிறார். டிசம்பர் பூவுல மொத்தம் நாலைஞ்சு கலர் இருக்குங்க.

ரோஸ், ஊதா, வெள்ளை, மஞ்சள், ராமர் கலர்னு இருக்கு. இப்ப நம்ம தோட்டத்துல ரோஸ் டிசம்பர், புளு டிசம்பர் ரெண்டு மட்டும் போட்டுருக்

கோம். ராமர் கலர் டிசம்பர் இன்னும் பத்துப் பதினைஞ்சு நாளாவும். இந்தச் செடிகள்ல முள்ளு கொஞ்சம் இருக்கும். பாத்துப் பறிக்கணும். தொடர்ந்து பூப்பறிக்கிற எங்களுக்கு அதெல்லாம் சகஜம்," என்கிறார்

பெரியக்காள்.

பூ எப்பப் பறிப்பீங்க. சந்தைக்கு எப்ப கொண்டு போத் தருவீங்க?"

சாயந்திரம் நாலு மணியப் போல பூப்பறிக்கத் தொடங்கிடுவோம். எல்லாம் மொட்டு மொட்

டாத்தான் இருக்கும். தரையில வெள்ளைத் துணிய விரிச்சிப் போட்டு பரவலா மொட்டுக்களைப் போட்ருவோம். நைட்டு பூரா கொட்ற பனியில

மொட்டுகள் ரொம்ப சோகமா கொஞ்சம் கொஞ்சமா மலர ஆரம்பிக்கும். டிசம்பர் பூக்களுக்கும் பனிக்கும் அவ்வளவு நெருக்கம். விடிகாலையில எல்லா மொட்டு களும் சூப்பரா மலர்ந்து இருக்கும். அந்த நேரத்துல இங்கேர்ந்து எங்க அப்பாரு அதை எடுத்துக்கிட்டு டிவிஎஸ்ல கிளம்பிடுவாரு. ஸ்ரீரங்கம் பூச்சந்தையில ரெகுலரா போட்டுட்டு வந்துடுவாரு," எனச் சோல் கிறார் பெரியக்காள்.

ரோஸ் டிசம்பர் பூக்களுக்குத் தனியாகவும், புளு டிசம்பர் பூக்களுக்குத் தனியாகவும் தோட்டங்கள் அமைத்துள்ளனர். அதன் சாகுபடியாளரான விவசாயி தர்மராஜ் என்பவரிடம் பேசினோம்.

இந்த ஊர்ல ரெண்டு மூணு பேரு டிசம்பர் பூ சாகுபடி செஞ்சு வந்தோம். இப்ப நா ஒரு ஆளுதான் பண்ணிட்டு இருக்கேன். இதுக்கு விதை எல்லாம் தேவை இல்லே. நல்ல ஒரு பெரிய குச்சிய வெட்டிட்டுப் போயி உங்க வீட்டு வாசல்ல நட்டு வெச்சாப் போதும். சூப்பரா வளந்துடும். ஒரு செடி எப்படியும் பத்துப் பதினஞ்சு வருஷம் பலன் தந்து வரும். செடி ரொம்பக் காஞ்சு போயிடுச்சுன்னா... அதைப் புடுங்கிப் போட்டுட்டு ஒரு டிசம்பர் பூக்குச்சிய நட்டு வெச்சா போதும். அப்படி நட்டு வெச்சு வளர்த்ததுதான் இந்தத் தோட்டம்.

இதுக்கு நாம எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணி பாச்சுறமோ அந்தளவுக்குப் பலன் தரும். ரொம்ப அதிகமான மழைதான் டிசம்பர் பூச்செடிகளுக்கு ஒத்து வராது. அதிக மழை பகை. அதிகப் பனி ஆனது நெருக்கமான சிநேகிதன் போல. டிசம்பர் பூன்னு பேருதானே தவிர, மூணு நாலு மாசத்துக்கு பூ கிடைக்கும். எனக்கு இங்கிலீஸ் மாசம்லாம் தெரியாது. கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாசங்கள்ல டிசம்பர் பூக்கள் பூக்குற காலங்கள். இவைகள்ல மார்கழி, தை மாசங்கள்ல நெறையவே பூக்கும். இயற்கை உரம் போட்டு நல்லா தண்ணீர் விட்டு வந்தா போதும். நல்லா மகசூல் தரும். நா காலம் காலமா ரோஸ் டிசம்பர், புளு டிசம்பர், ராமர் கலர் டிசம்பர் பூக்கள் மகசூல் கண்டு வர்றேன்," என்கிறார் திருவரங்கப்பட்டி கிராமத்தின் பூ

விவசாயி தர்மராஜ்.

Post Comment

Post Comment