நமக்கு நாமே!படங்கள் : பிரபு ராம் -உடல், உயிர்,மனம் இந்த மூன்று சமாச்சாரங்கள் நம் வாழ்க்கையின் அடிப்படை.

இந்த மூன்றையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் எத்தகைய துன்ப சூழலும் நம்மை நெருங்காது. இந்த மூன்றையும் சரிசெய ஏகப்பட்ட அகம் மற்றும் புறம் சீரமைக்கும் குருமார்களும்

பயிற்சி மன்றங்களும் பயிற்சி வகுப்புகளும் வந்துவிட்டன. ஆனால், ‘இங்கெல்லாம் போக எனக்கு விருப்பமில்லை. வீட்டில் இருந்தே என்னை நான் சரிசெதுகொள்வேன்’ என்பவர்களுக்கு இதோ....

நமக்கு நாமே அளித்துக்கொள்ளக்கூடிய பாசிடிவ் பயிற்சிகள்:

டூ உடற்பயிற்சி : ‘எக்கு போல் உடம்பை உறுதியாக்கு’ என்கிறார் விவேகானந்தர். ஜிம்

முக்குச் சென்று வியர்வை சிந்தவேண்டும் என்பதோ, காலையில் ஐந்து கிலோ மீட்டர் ஓட வேண்டும் என்பதோ கட்டாயமில்லை. உங்களுக்குப் பிடித்த

சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை எளிமையாக மெதுவாக ஒரு அரை மணிநேரம் செயுங்கள். எண்ணம், செயல், சிந்தனை மூன்றும் உடலின் மீதே இருக்கவேண்டும். அப்பொழுதுதான் உடற்பயிற்சி முழு பலன் தரும்.

டூ மனப்பயிற்சி : மனப்பயிற்சிக்கு தியானம் பெஸ்ட் சாஸ். தியானம் என்பது மிகவும் எளிமையானது. அமைதியான ஓர் இடத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மூச்சை இயல் பாகக் கவனிக்கலாம். இதனால் மூச்சு சீர்படும். தொடர்ந்து பலவித எண்ணங்கள் மனதில் எழும். அதில் தேவையற்ற எண்ணங்களை அப்படியே

நீக்கி விட்டால் மனம் பளிச்!

டூ மூளைக்கு வேலைகொடு : பெரும்பாலும் பணி சார்ந்த உத்தரவுகளையே மூளைக்குக் கொடுத்துகொண்டிருக்கிறோம். காலை முதல் மாலை வரை செயும் தொழில் சார்ந்த உத்தரவுகள். மீதி நேரத்தில் வீட்டின் சூழ்நிலை குறித்த சிந்தனைகள். இப்படி மூளை மிக குறுகிய வட்டத்திலேயே சிந்தித்துக்கொண்டிருக்கிறது. நமது மூளை மேலும் சுறுசுறுப்பாக இயங்க புதுப்புது நூல்களை வாசிப்பது, புதிய இடங்களுக்கு ஒரு குட்டி விசிட் செய்வது, நல்ல இசை கேட்பது... இப்படி அதற்கான தீனி ஆரோக்கியமானதாக இருந்தால் *. மூளைக்கு ஊட்டம் தரும் எளிய கீரைகள், காகறிகளை எடுத்துக்கொண்டால் **.

டூ குடும்பத்திற்குள் ஒரு கலைக்குழு : எப்பொழுது எல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது எல்லாம் குடும்பத்துடன் விளையாட ஆரம்பித்துவிடுங்கள். பெரிய குடும்பங்களில் திருவிழா காலங்களில் மக்கள் ஒன்றுகூடி வீட்டிலேயே டிராமா, பாட்டு, ஸ்டாண்ட் ஆப் காமெடி என்று அசத்துவார்கள். இப்படி ஒரு கலைக்குழுவை உருவாக்கிக்கொள்ளுங்கள். உறவுகள் மேம்படும். புதிய யோசனைகள் இங்குதான் தோன்றுகின்றன.

டூ தொலைத்தொடர்பு சாதனங்களை தூர

வையுங்கள் : இன்றைய தேதிக்கு நம்மை அதிகம் ஆட்கொண்டு இருப்பது தொலைக்காட்சி, கைபேசி, லேப்டாப் மற்றும் டேப்ளெட்டுகள். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை, ஏன் பலருக்கு நள்ளிரவில் கூட விழிப்பு வந்தால் உடனே ஃபேஸ்புக் ஸ்டேடஸ் பார்க்கவேண்டும் என்ற உந்துதல் இருப்பதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் வாழ்க்கையில் ஒரு பதற்றத்தை உருவாக்கும் காரணிகள். தூக்கத்தைக் கெடுத்து துக்கத்தை அதிகரிக்கும் துஷ்டங்கள். இவற்றைத் தூக்கி தூரம்வைத்தால் வெற்றியும் மகிழ்ச்சியும் மனநிம்மதியும் உங்களை நோக்கி வரும்.

டூ சின்னச் சின்ன விஷயங்களை நினைவில் வைக்கப் பழகுங்கள் : நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளும் நிலையில் இருந்து விலகி வெகுதூரம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இதுவே, பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமைகிறது. அறிவியல் தொழில்நுட்பம் அவசியம். ஆனால், அறிவை மங்கச்செயும் எதையும் நாம் அனு

மதிக்கக் கூடாது. கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். நண்பர்களின் செல்பேசி எண்களை நினைவில் நிறுத்த முயலுங்கள். குட்டிக் குட்டி ஸ்லோகங்களை மனப்பாடம் செய்யுங்கள். கால்குலேட்டரைத் தேடாமல் மனதில் கணக்குப் போடுங்கள். இப்படி எத்தனையோ சின்னச்சின்னப் பயிற்சிகளை நமக்கு நாமே அளித்துக்கொள்ளலாம்.

டூ ரசித்து ருசித்து உண்ணுங்கள் : உணவு என்பது உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்குமானது. நண்பர்கள் சிலர் அவரவர் வீட்டில் சமைத்த உணவுடன் ஒரு பிக்னிக்கில் ஒன்றுகூடினார்கள். அங்கு ஒரு சின்னப் போட்டி நிகழ்ந்து. அவரவர் கொண்டு வந்த உணவு வகைகளைக் கலைத்து வைத்துவிட்டு, ஒவ்வொன்றிலும் கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டுப் பார்த்து அதில் தன் மனைவி செத உணவு எது என்பதைத் துல்லியமாகச் சோல்ல வேண்டும். பல பேர் திணறிவிட்டார்கள். மனைவி மார்களுக்கு பெரும் வருத்தம். இத்தனை வருடங்கள் ஒரு இயந்திரம் போன்றா உணவை சாப்பிட்டு வந்தோம் என்று கணவன்மார்கள் வெட்

கத்தில் தலைகுனிந்தனர். உணவு ஆன்மாவோடு தொடர்பு கொண்டது. உறவுகளை மேம்படுத்த உதவுகிறது. அன்பும் அக்கறையும் கொண்டு சமைப்பதும், ஆனந்

தமும், ஆவலும் கொண்டு பாராட்டுவதும்

எளிய பயிற்சிகள்தானே? நம்மால் முடியும்

தானே?

டூ கற்றல் கற்பித்தல் : நாம் கற்பதையும் கற்பிப் பதையும் ஏதாவது ஒரு நிலையில் நிறுத்தி விடுகிறோம். ஒவுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர். பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்கின்றனர். உங்கள் ஆரோக்கிய ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்டபோது. காலை முதல் மாலை வரை ரொம்ப பிசி என்றார். அப்படி என்ன செவீர்கள் என்றபோது, கார்டனிங்கில் ஆரம்

பித்து சமையல் கலை வரை பட்டியலிட்டார்.

‘நீங்கள் ரொம்ப பிஸியான அதிகாரியாக இருந்தவராச்சே ? எப்படி இத்தனை திறமைகள்?’ என்றபோது ‘அப்போது ஓவு நேரத்தில் கற்றுக்கொண்டது இப்பொழுது ஓவுபெற்ற பின்னர் உதவுகிறது’ என்றார். கற்றல் கற்பித்தல் இரண்டும் உடலையும் மனதையும் ஆரோக்கிய மாக்கும். கற்றலுக்கும் சரி, கற்பிப்பதற்கும் சரி, வயதுவரம்பு கிடையாது.

டூ நன்றி பாராட்டுங்கள் : எத்தனை பேர் உங்கள் மனைவி காப்பி கொடுக்கும்போது தாங்க்ஸ்

சோல்லி வாங்குகிறீர்கள்? எத்தனை பேர் உங்கள் பிள்ளை ஷூவை எடுத்துத் தரும்போது நன்றி சோல்லுகிறீர்கள்? இதெல்லாம்

ஒரு ஃபார்மாலிட்டியா என்று கேட்கலாம். நன்றி பாராட்டுதலைப் பற்றி மேற்கத்திய நாடுகள் பெரிய ஆவுகள் செது அதன் பலன்களை வெளியிட்டு இருக்கிறார்கள். நன்றி பாராட்டுதலை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை ஈடுபாட்டுடன் மனதார நன்றி பாராட்டுகிறீர்களோ அத்தனையும் பல மடங்கு பலனை உங்களுக்குத் திருப்பித் தரும். நன்றி !

டூ மௌனம் தரும் மேம்பாடு : மௌனத்தை மிஞ்சிய மொழி இல்லை. பெரும் மனிதர்களைக் கூர்ந்து கவனித்தால் திடீரென்று புலன்கள் எல்லாம் ஒடுங்கி ஒருவித அமைதி நிலையில் அமர்ந்து விடுவார்கள். தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் செயும் இந்தச் செயல் அவர்களின் சக்திக்கு உதவு கிறது. மௌனம் மேற்கொள்வது பிற புலன்களுக்கு ஓவு தருகிறது. ஐம்புலன்களால் ஏற்பட்ட தேவையற்ற பதிவுகளை மௌனம் நீக்குகிறது என்கின்றனர் ஆன்மிகச் சான்றோர்கள். மௌனத்தின் வாயிலாக மனதின் உச்சக்கட்ட எழுச்சியை

உணர முடியும். முடிந்தால் வாரம் ஒரு நாளாவது மௌனம் இருங்கள். தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் உற்சாகம் மிஞ்சுவதை உணர

முடியும்.

இந்தப் பத்து வழிமுறைகள் மிகவும் எளிமை யானவை. நமக்கு நாமே பின்பற்றினால் வெற்றி நிச்சயம்!

Post Comment

Post Comment