உற்சாக டானிக்உலக சினிமாக்கள் -தன்னம்பிக்கை தரும் திரைப்படங்களை வரிசைப்படுத்தினால் அதன் பட்டியல் நீளமானது. உலக மக்களை உற்சாக வெளியில் மிதக்க வைக்கும் சில படங்களின் பட்டியல் இது. உங்களுக்கு எனர்ஜி தேவைப்படும்போது, இந்தத் திரைப்படங்களைப் பாருங்கள். தன்னம்பிக்கை டானிக் நிச்சயம்!

The Pursuit of Happiness

அப்பா வில் ஸ்மித்தும் மகன் ஜேடன் ஸ்மித்தும் இணைந்து கலக்கிய திரைப்படம். பொருளாதார நலிவில் இருக்கும் அப்பா குடும்பத்தைக் காப்பாற்ற ஏதேதோ செது போராடுகிறார். மனைவியுடன் விரிசல் ஏற் பட்டு பத்து வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறும் நிலைமை. தங்கக் கூட இட மின்றித் தவிக்கின்றனர். அதே நேரம் மகனுக்குக் கஷ்டம் தெரியக்கூடாது என்று அப்பா செயும் முயற்சிகள் ஒருபுறம்; அப்பா தனக்காகத் தான் இத்தனை கஷ்டப்படுகிறார் என்பதை அந்தப் பத்து வயதுப் பிஞ்சு உணர்ந்து அப்பாவுக்குக் கஷ்டம் தராமல் இருக்கச் செயும் முயற்சிகள் ஒருபுறம் என, உணர்ச்சிபொங்கும் கதை. எல்லாவற்றையும்விட மேலானது பேரன்பு. அதுவே வாழ்க்கைக்கான மகிழ்ச்சி என்பதை உரக்கப் பேசுகிறது ஆஸ்கர் விருது வென்ற இந்தத் திரைப்படம்.

The Beautiful Mind

அமெரிக்கக் கணிதமேதை ஜான் போர்பஸ் நாஷ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம். நோபல் பரிசு பெற்ற அறிஞரான நாஷ் சிரமமான கணித சூத்திரங்களை உடைப்பதில் வல்லவர். ஆனால், நிஜவாழ்க்கையில் அவருக்கு ஆழமான உளவியல் சிக்கல்கள். இந்தக் குறை பாட்டை மீறி நாஷ் எப்படி வென் றார் என்பதைச் சோல்கிறது, இந்தத் திரைப்படம். ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்ற நற் சோல்லுக்கு உதாரணமான இப்படம், 2001 ஆம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதை வென்றது.

127 Hours

Slum Dog Millionaire படத்திற்குப் பிறகு நம்ம ஊரு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, மலையேறும்

சாகச வீரர் ஆரோன் ரால்சனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் 127 Hours. உட்டா மலைப்பகுதியில் பயிற்சியில் இருந்தபோது ஒரு சிறு கல் இடறிவிழ, ரால்சனின் கால் பாறை களின் இடுக்கில் சிக்கிக் கொள்கிறது. ஐந்து நாட்கள் இரவு பகல் எனப் போராடி அதிலிருந்து விடுபட முடிய வில்லை. இறுதியில் ஒரே ஒரு வாப்பு மட்டும் அவர் உயிர்பிழைக்க முன் நிற்கிறது. மிகவும் அதிர்ச்சி யூட்டும் அந்த வாப்பை அவர் எப்படிக் கையாண்டு உயிர்பிழைக்கிறார் என்பதைச் சோல்கிறது

127 Hours. டானி பாயல் இயக்கிய இப்படம், ‘உறுதிகொண்ட நெஞ்சினா வா! வா!’

A boy who harnessed the wind

கிழக்கு ஆப்ரிக்காவின் குக்கிராமம். பருவமழை பொப்பதால் வறட்சி வறுமை. படிக்க விரும் பினாலும் அப்பா கல்விக்கட்டணம் செலுத்தாததால் பள்ளியில் இருந்து நிறுத்தப்படுகிறான் 13 வயது

சிறுவன். வறட்சியில் ஊரே காலி செதுகொண்டு செல் கிறது. சில வீடுகளில் மிச்சமிருக்கும் சிறிதளவு தானி யத்தைப் பறிக்க ஊருக்குள் ளேயே ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கின்றனர். திருட்டுத்தனமாக பள்ளிக்குச் செல்லும் சிறுவன் அங்கு லைப்ரரியில் கிடைத்த புத்தகத்தின் தகவல் மற்றும் தூக்கி வீசப்பட்ட பொருட்களைக் கொண்டு ஒன்றை உருவாக்கி அதன்மூலம் நீர் இறைத்து, பசுமைப் புரட்சிக்கு உதவுகிறான்.

பிரிட்டிஷ் தயாரிப்பாக இருந்தாலும் கிழக்கு ஆப்பிரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவம் இளை ஞர்களுக்கு சிறுவர்களுக்கு உத்வேகமூட்டும் கதை. பிச்சைப் புகினும் கற்கை நன்றே !

Rocky

50 வயது அங்கிள் முதல் நானோ கிட்ஸ் வரை அனைவரையும் கவரும் ராக்கி. ஒரு கந்துவட்டி கும்பலுக்கு கடன் வசூலித்துத் தரும் பணியாள ரான சில்வர் ஸ்டாலோன் எப்படி அமெரிக்காவின் புகழ்பெற்ற வெயிட் லிப்ட் சாம்பியன்ஷிப்பை வெல் கிறார் என்பதைச் சோல் லும் கதை இது. எண்ணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அடித் தட்டு மக்களுக்கு அழகாக எடுத்துச் சோல்லும் திரைப்படம் ராக்கி. சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு!

The World`s Fastest Indian

நியூசிலாந்து மோட்டார் சைக்கிள் சாகசக்கார பர்ட் முன்றோவின் கதை இது. பலவித மோட்டார் சைக்கிள்களை ஓட்டி

சாதனை புரிந்த பர்ட், இந் தியாவில் வடிவமைக்கப் பட்ட 1920 மாடல் மோட்டார் சைக்கிள் ஒன்றை உரு வாக்கி அதை விரைவாக ஓட்டி சாதனை புரிய முயற் சிக்கும் நிகழ்வுகள்தான் கதை. விளையாட்டுப் பிரியர்களுக்கும் மோட்டார் வாகன சாகசப் பிரியர்களுக்கும் இந்தப் படம் நிச்ச யம் பிடிக்கும். 11க்கும் மேற்பட்ட உலக விருதுகளை வென்ற திரைப்படம் இது. புதியன முயற்சி செ!

Miracle in Cell No : 7

ஒரு குட்டிப் பாப்பா, கொஞ்சம் மனநிலை பிழன்ற அப்பா, அன்பைப் பொழியும் பாட்டி என பாசமிகு குடும்பம். மனநிலை பிழன்ற அப்பா, செயாத ஒரு குற்றத்திற்காக மரண தண்டனை பெற்று செல் நம்பர் 7ல் அடைக்கப்படுகிறார்.

அப்பாவை மீட்க குட்டிப் பாப்பாவும், பாப்பாவின் பாட்டியும் செயும் போராட்டமே கதை. மகள் எனப்படுபவள் எப்பொழு தும் தந்தைக்கு ஒரு தா என்பதை உணர்த்தும் திரைப்படம். மரணதண் டனைத் தேதி நெருங்க நெருங்க எப்படியாவது அந்த மனநிலை குன்றிய தந்தை தப்பிவிட மாட்டாரா, ஏதாவது அற்புதங்கள் நடந்து விடாதா என்ற ஆடியன்ஸின் இதயத்துடிப்பை நெகிழச் செயும் அந்த கிளைமாக்ஸ் காட்சி அசத்தல். நல்லதை நினை நல்லது நடக்கும்!

The Karathe Kid

ஜாக்கி சானும், வில் ஸ்மித் மகன் ஜேடன் ஸ்மித்தும் இணைந்து கலக்கும் படம். ஒரு சுட்டிப் பையனுக்கும் ஒரு முரட்டு கராத்தே பயிற்சியாளருக்கும் இடையேயான அன்பு - பாசம் - லட்சியம்... இதுதான் கதை. தமிழ் டப்பிங்கில் பல முறை சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு இன்றும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் படம், குட்டீஸ்க்கு ஏற்ற சாகசம், நகைச்சுவை, ரொமான்ஸ் என எல்லா அம்சங்களும் நிறைந்த திரைப்படம். தடைக்கற்களே படிக்கற்கள் என்பதைச் சோல்லும் கதை!

Life of Pie

சர்க்கஸ் நிறுவனத்தில் வேலை செயும் சிறு வன் ஒரு நாட்டில் இருந்து இடம் பெயரும்போது கப்பல் உடைந்து சிறு படகில் ஒரு புலியுடன் தப்புகிறான். திசை தெரியாத கடலில் தனி யொருவனாகப் பயணிக்கும் அவனுடன், பசியுடன் காத்திருக்கிறது ஒரு புலி. மனித வாழ்க்கையின் எதார்த்த நிலையைத் தத்துவமுடன்

சோல்கிற ‘லைஃப் ஆஃப் பை’ வெறும் சாகசக் கதையல்ல, ஆழமான ஞானத்தின் வெளிப்பாடு. வாழ்க்கை எனும் ஓடம்!

Life is beautiful

நாஜிகளின் வதை முகாமில் சிக்கிக்கொண்ட ஒரு தந்தை . எப்படியும் கொல்லப்படப் போகிறோம் என்ற சூழ்நிலையில், தனது பிள் ளைக்கு மன அளவில் எந்த ஒரு துன்பமும் வந்துவிடக்கூடாது என மகனைத் தன்னம்பிக்கை யுடன் வைத்துக்கொள்ள முயற்சி செயும் தந்தையின் கதை. உலகை உலுக்கிய கதையம்சத் துடன் மிளிரும் படங்களில் முதன்மையானது ஃடிஞூஞு டிண் ஞஞுச்தணாடிஞூதடூ. அன்பே பிரதானம் என்பதை வலியுறுத்திச் சோல்லும் கதை இது.

Post Comment

Post Comment