ராஜாதி ராஜா


இசை மருத்துவ ஞானி!
-ஜனரஞ்சகத் தமிழ்ப் படங்களுக்கு ஒரு டூயட் பாட்டு, ஒரு குத்துப் பாட்டு, ஒரு சோகப் பாட்டு, ஒரு அம்மா சென்டிமென்ட் பாட்டு என சம்பிரதாயமாகத் தருவதுதான் இசையமைப்பாளர்களின் பணியாகும். இந்தக் கட்டுப்பாட்டுக்குள் ராகங்கள் பதினாறும், ஸ்வரங்கள் ஏழும் கொண்டுதான் மெட்டுக் கட்ட வேண்டும். ஆனால், ராக பாவம், ஸ்வர வரிசையை வேறுபடுத்தி, ரசிகர்கள் லயிக்கும் விதமாக

முயற்சித்து, வெற்றி பெறும்போதுதான் ஒரு இசையமைப்பாளருக்குப் பெருமை கிடைக்கிறது. அந்த வகையில் எம்.எஸ். விஸ்வநாதன் மெல்லிசை மன்னராகக் கொடிகட்டிச் சாதித்தாரென்றால், இளையராஜா இசைஞானியாகக்

கோட்டை கட்டினார். ராகதேவன் ஒவ்வொரு பாடலிலும் வித்தியாசம் கொடுக்க நுணுக்கமாக மெனக்கெடுவதை, ஒவ்வொரு வாத்தியத்திலும் கவனிக்கலாம்.

அதிகம் சினிமாவில் கையாளப்படாத ராகங்களைக் கொண்டு, சினிமாவை விரும்பாத கர்நாடக இசைப் பாடகர்களையும் இழுத்து வந்து அரிய முயற்சிகளைச் செய்திருக்கிறார். இதற்கொரு உதாரணம்: ‘கவிக்குயில்’ படத்தில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா பாடிய ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடல்.

ராதையை, பூங்கோதையை

அவன் மனம் கொண்ட

ரகசிய ராகத்தைப் பாடி

சின்னக் கண்ணன் அழைக்கிறான்"

அடடா... குரலில் குழைந்து, ராகத்தில் இழைந்து டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா தன் கர்நாடக இசைப் புலமையால் பாடலை மெருகேற்றுகிறார்.

ஆக, ராஜா பாடல்களில் என்னை அதிகம் ஈர்த்த பாடல் இதுவே யாகும்.

நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா!

கண்மணி ராதா

உன் புன்னகை சொல்லாத அதிசயமா!

அழகே, இளமை ரதமே!"

பஞ்சு அருணாசலம் வரிகளில் காதல் ததும்பும். கூடவே, கண்ணனுக்குரிய புல்லாங்குழல் இசை கூடுதல் சுவை கூட்டும்.

டென்ஷனோ, மன அழுத்தமோ, கோபமோ, உடனே தீர எளிய மருத்துவமாக எனக்குப் பயன்படும் பாடல். இருட்டில் இந்தப் பாடலைக் காதுகளால் காதலித்தால் தூக்க மாத்திரை இல்லா மலே சுகமான நித்திரை கிட்டும்.

முயற்சி செய்து பாருங்களேன்!

- மல்லிகா அன்பழகன், சென்னை.

எனக்குப் பிடித்தமான பாடல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்குவாசல்’ படத்தில் வரும் வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி

வேணும்; தெருக் கூத்துக்கும், பாட்டுக்கும் தாள ஜதி வேணும்" கார்த்திக் கூத்து கட்டி பாடும் இந்தப் பாடலை, இளையராஜா அவர்களே பாடியிருப்பது ரொம்பவே அற்புதம். தியேட்டரில் ஒருமுறைதான் பார்த்தேன்; ஆனால், டி.வி.யில் பலமுறை பார்த்தும் சலிக்காத அதில் வரும் பாடல்கள்.

கிராமப்புறச் சூழலைக் காட்சியாக்கி, அங்குள்ள கோயில், திருமண வைபவங்களுக்குக் கூத்து கட்டு வார்கள். அந்தக் காலத்தில் பண்ணையார்கள் வீட் டில் (முற்றம்) வீட்டுத் தோட்டத்தில் கயிறுகட்டி ஊஞ்சல் ஆடுவார்கள். அதை நினைவுகூரும் வகையில், ரேவதி ஊஞ்

சலில் அமர்ந்திருக்க, கார்த்திக் ஊஞ்சலை ஆட்டும் போது பாடும், வாலி அவர் களின் பாடலுக்கு இளைய ராஜா இசையில், மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பால சுப்ரமணியம் பாடிய ‘பச்ச மல பூவு நீ உச்சிமல தேனு’ என்ற பாடல் அதி அற்புதம்.

கிராமப்புறங்களில் திருமண நிச்சயத்திற்குக் கூத்து கட்டும் வழக்கத்தை வைத்திருந்ததை நினைவுகூர, குஷ்புவின் திருமண நிச்சயத்திற்கு, முன் விரோதம் பார்க்காமல் கார்த்திக், அவர்கள் வீட்டிற்குச் சென்று கூத்து கட்டும்போது பாடும் பாடலான ‘பாடிப் பறந்த கிளி, பாத மறந்ததடி பூமானே’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கும் இந்தப் பாடல், காதில் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கும். எப்பொழுதெல்லாம் கிழக்குவாசல் படத்தைப் பார்த்தாலும், இசையைக் கேட்டாலும், நான் வளர்ந்த கிராமத்துச் சூழ்நிலைக்கு என்னை இழுத்துச் செல்லும்.

- லக்ஷ்மி ராமச்சந்திரன், சேலம்

Post Comment

Post Comment