கேள்வி நேரம்


ஞானகுருவீட்டில் உலவும் மாய சக்திகள், தீய சக்திகள் விலகி உடல் நலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ ஒரு வழிபாடு கூறுங்களேன்?

- எல்.வில்வலட்சுமி, மணலிபுதுநகர்

தீய சக்திகள் விலகிட, வீட்டில் பசு நெய் தீபங் களை வெள்ளிக் கிழமைகளில் ஏற்றி வைக்க

வேண்டும். மஞ்சள், உப்பு கலந்த நீரை மா இலையால் வீடு முழுவதும் தெளித்து வர வேண்டும். வியாழக் கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கருடனை

தரிசித்து பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வாருக்கு முருக்கு, தேன்குழல் படைத்து கருட மந்திரம் ஜபிக்க வேண்டும். அவர் பார்வையால் துர் சக்திகள் விலகி ஓடும்.

‘ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸ்வர்ண பக்ஷாய தீமஹி

தன்னோ கருட ப்ரசோதயாத்’

எனும் கருட காயத்ரி மந்திரத்தை பூஜை அறையில் 54 முறை ஜபித்து வர, நல்லதே நடக்கும்.

திருமணச் சடங்குகளில் காசி யாத்திரை செய்வதன் தாத்பர்யம் ஏன்?

- சி.கோகிலா, உடையார்பட்டி

மங்கள நிகழ்ச்சியான திருமணம் என்பது, தொடங்கிய நேரத்திலிருந்து பூர்த்தி அடையும் வரை எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்துவதாக இருக்க

வேண்டும். எல்லோருக்கும் திருப்தியைக் கொடுப்ப தாக அமைதல் வேண்டும் என்ற நோக்கத்தில் திருமணச் சடங்குகளை பொருளோடு வைத்தனர் நமது முன்னோர்கள். ஒரு பெண்ணை இல்வாழ்க்கைத் துணையாக ஏற்கும் முன்பு, ஒரு ஆண் உடல் சுத்த மடைய விரதம் மேற்கொண்டு, சந்ததிகள் ஏற்பட பித்ருக்களாகிய அவனது முன்னோர்களைத் திருப்திப் படுத்தி, மணமேடைக்குச் செல்லும் முன்பாக காசி யாத்திரை என்னும் வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குதல் விதி.

இதில், மணமகன் தம்மால் எந்த விரதத்தையும் பொறுமையாகக் கடைபிடித்து கட்டுப்பாட்டுடன் வாழ முடியும். எந்தக் கடினமான சூழ்நிலையையும் தாங்கிக்கொள்ள முடியும் என்று பெண் வீட்டாருக்குத் தம்முடைய மனோதிடத்தை நிரூபித்துக் காட்டுகிறான். அரிசி, பருப்பு, வெல்லம் ஆகியவற்றை துணியில் கட்டியபடி யோக வஸ்திரம் அணிந்து விசிறி, குடை கையில் பிடித்தபடி செல்ல அவரைத் தடுத்து நிறுத்தும் பெண்ணின் தந்தை, ‘எனது பெண்ணைத் தருகிறேன், திருமணம் செய்து கொண்டு இல்லற தர்மத்தில் ஈடுபடுங்கள்’ என்று கூறி, திரும்ப அழைத்து வருவதாக திருமணத்தில் முக்கியச் சடங்காக இது கடைபிடிக்கப்படுகிறது.

வானவில்லைக் கண்டால் பிறருக்குக் காண்பிக்கக் கூடாது என்று சொல்கிறார்களே, இதன் சாஸ்திர விளக்கம் என்ன?

- சி.மதுமிதா, லால்குடி

இயற்கை அதிசயங்களில் ஒன்றுதான் வானவில். சூரியனும், சந்திரனும் எப்போதும் நம் கண் முன்னே தோன்றுவதால் தெய்வங்களாகப் போற்றப்படுகின்ற னர். நிரந்தரமாகத் தெரியும் இவர்களைக் காண்ப தாலும், உலகைச் சுற்றி வருவதாலும் நமக்கு யோகங்கள் அவயோகங்கள் ஏற்படுகின்றன. ஆனால், சூரியக் கதிர்கள் பிரிவதால் நிற மாலைகள் மூலமாக ஏற்படுகிற வானவில் தற்காலிகமான மாய பிம்பம். இந்த மாயத் தோற்றத்தைக் குழந்தைகளும், பெரியோர் களும் கண்டு ரசிக்கலாமே தவிர, வழிபட, நிரந்தர மாகக் காண இயலாது. வானில் தோன்றுகிற மாய பிம்பத்தை நாம் கண்டதோடு விட்டு விட வேண்டும். பிறருக்குக் காட்டுவது ஆகாத காரியம்.

இந்த உலகத்தில் நீர்க்குமிழி, சவம் எரிதல், கானல் நீர், தேயும் சந்திரன், பூரண சந்திர, சூரிய கிரஹணங்கள், வானவில் ஆகியவற்றை கை நீட்டியோ, ஜாடை

யாகவோ காட்டக் கூடாது என்பது சாஸ்திர விதி. வானவில் ஓர் இயற்கை நிகழ்வே தவிர, ஆன்மிகத்தில் ஏற்புடையது அல்ல.

முருகப்பெருமானை தரிசித்து வணங்கியவர்கள் என்று போற்றப்படும் அடியவர்களைப் பற்றி கூறுங்கள்...

- என்.கலைவாணி, திருச்சி

அகத்தியர், நக்கீரர், சிகண்டி முனிவர், நல்லியக்

கோடன், ஔவையார், முருகம்மையார் பொய்யா மொழிப்புலவர், சிதம்பர சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், வாரியார் சுவாமிகள், அழகு முத்துப் புலவர் வீரபாகு, தேவராய சுவாமிகள் ஆகியோர். இவர்களில் பாம்பன் சுவாமிகளின் மயில் சேவல் விருத்தம், அருணகிரியாரின் திருப்புகழ், தண்டபாணி சுவாமிகளின் பஞ்சாமிர்த வண்ணம்,

தேவராய சுவாமிகளின் சஷ்டி கவசம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, குமரகுருபரரின் முருகன் புகழ்ப் பாடல்கள் மனதில் நிற்பவை.

சபரி மலைக்குச் செல்ல மாலை அணியும் பக்தர் களுக்குத் தாங்கள் சொல்லும் அறிவுரைகள் என்ன?

- ஏ.சம்பத், திருவாரூர்

ஒரு மண்டல கால விரதத்தை கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள். மாலை அணிந்திருக்கும் காலகட்டத்தில் மனதை அலைபாய விடக்கூடாது. விரதம் இருப்பது, மனதில் எழுகின்ற தேவையற்ற ஆசைகளையும், உணர்வுகளையும், கட்டுப்படுத்து வதற்குதானே தவிர, பொழுது போக்குவதற்காகவோ, மற்றவர்களின் கவனத்தை தன் மீது திருப்ப வேண்டும் என்பதற்காகவோ அல்ல. மனம், மெய், வாக்கில் சுத்தமாக இருந்து ஐயப்பனை தரிசிக்கச் செல்ல

வேண்டும். மலைக்குச் சென்று வருவது ஆடம்பரப் பயணமோ, கேளிக்கைச் சுற்றுலாவோ அல்ல. பக்தி யாத்திரை என்று நினைத்துக் கட்டுப்பாடுடன் பயணம் மேற்கொண்டாலே சபரிமலை யாத்திரை முழுமை பெறும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :