அசுரனுக்கும் அருள்செய்த அச்சுதன்!

வழிபாடுHடு கொண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா... கோவிந்தா..." என்பது திருப்பதி மலையேறும்பொழுது கேட்கும் அற்புத கோஷம். ஸ்ரீநிவாசப் பெருமாள் வாசம் புரியும் ஏழு மலைகளில் ஒன்று ரிஷபாத்ரி மலை. இந்த மலைக்கும் ஒரு வரலாற்றுக் கதை உண்டு.

ரிஷபாசுரன் எனும் அசுரன் மக்களைக் கொடுமைப் படுத்தியதோடு, முனிவர்களின் தவத்தையும் கலைத்து இடையூறு செய்து வந்தான். இதனால் தேவர்களும் முனிவர்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். எப்படியும் தமக்கு இறைவன் மூலம் அழிவு உண்டு என்பதை உணர்ந்த ரிஷபாசுரன், நரசிம்மரைக் குறித்துத் தவம் செதான்.

பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்படும் நரசிம்ம மூர்த்தி, அசுரனின் முன்பு தோன்றி ரிஷபாசுரா, உனது தவத்தை மெச்சினோம். உனக்கு என்ன

வேண்டும் கேள்" என்றார்.

பகவானை நேரில் தரிசித்த அசுரன், தங்கள்

தரிசனத்துக்குப் பிறகு வேறு எனக்கு என்ன வேண்டும்? இதை விட பெரும்பேறு எனது வாழ்வில் வேறு என்ன இருக்கிறது" எனக் கூறினான்.

அதைத் தொடர்ந்து, ரிஷபாசுரன் அனைவரும் விரும்பும் முக்தியை இறைவனிடம் கேட்காமல், பரந்தாமா, பாற்கடல்வாசா, லட்சுமி மணாளா, கருணாமூர்த்தியே! எனக்கு ஒரேயொரு வரத்தை மட்டும் தந்தருள வேண்டும். உமக்கு எதிரியாகி, நான் உன்னோடு சண்டையிட வேண்டும்" என்ற வரத்தைக் கொடுத்தருள வேண்டும்" என்று வேண்டினான்.

இந்த வரத்தின் உள்ளார்ந்தப் பொருளை

சாதாரணமாக அனைவராலும் அனு மானிக்க முடியாது. அசுரனின் பைத்தியக்காரத்தனம் என்றே படும். ஆனால், இறைவனை எதிர்த்து சண்டையிட்டு வென்ற வர் யார் என்பதை உணர்ந் திருந்த அசுரன், போருக்குப் பிறகு தாம் இறைவனின் திருவடி நிழலில் வாழ வேண்டும் எனும் உயர்ந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த வரத்தைக் கேட்டான்.

அவன் கேட்ட வரத்தின்படியே நரசிம்மருக்கும் அசுரனுக்கும் போர் மூண்டது. சண்டையின் முடிவில் நரசிம்மரே வென்றார். நரசிம்மரின் அருளில் ஒரு பேருண்மை உண்டு. இறக்கும் சமயம் எவனொருவன் நரசிம்மரின் திருவுருவைப் பார்த்துக்கொண்டே இறக்கிறானோ, அவனுக்கு மோட்சம் நிச்சயம் என்கின்றன புராணங்கள்.

போரில் தோற்ற ரிஷபாத்ரியை பார்த்து நரசிம்மர் புன்னகை பூத்தார். கரங்களைக் கூப்பி உலகளந்த உத்தமனை வணங்கிய ரிஷபாத்ரி, நரசிம்ம மூர்த்தியே, உம்மைப் பார்த்தபடியே நான் உயிரை விடுவதால் மோட்சத்தை அடைகிறேன். எனக்கு இன்னுமொரு வரத்தைத் தாங்கள் தந்தருள

வேண்டும். தங்களுடன் நான் போரிட்ட இந்த மலை எனது பெயரால், ‘ரிஷபாத்ரி மலை’ என்று அழைக்கப் பட வேண்டும்" என்று வேண்ட நரசிம்ம மூர்த்தியும் அவ்வாறே வரம் அளித்தார்.

இந்த ரிஷபாத்ரி மலை மீது தான் பக்தர்கள் வேண்டும் வரங்களை வேண்டியபடி தந்தருளும் திருவேங்கட வனாக ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் கொண்டுள்ளார். நாளை என்பதே இல்லாத நரசிம்மப் பெருமாளிடம் வேண்டும் வரங்களைப் பெற பானகம் நைவேத்யம் செது பிரார்த்தித்துக் கொள்வது சிறந்த வழிபாடாகும்.

- லட்சுமி ராஜரத்னம், சென்னை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :