மருத்துவம்


    பப்பளபள பப்பாளி!


மகாலெட்சுமிதனக்கென்று காலம், நேரம் பார்க்காமல் காய்த்து கனி கொடுத்துக் கொண்டிருக்கும் பப்பாளி மரத்தைப் பார்ப்பதுதான் இப்பொழுது அரிதாக உள்ளது. வேண்டும் என்ற பொழுது மரத்தை அடித்துப் பப்பாளி சாப்பிட்ட நாம் இப்பொழுது கடைத்தெருவுகளில் வாங்கி சாப்பிடுகிறோம். ‘முருங்கையை நட்டவன் நோய் நொடி இல்லாமல் போவான்’ என்ற பழமொழிக்கு ஈடாக பப்பாளி மரம் நட்டவரும் எந்த நோய் பாதிப்பும் இல்லாமல் வாழ்வார்.

பப்பாளி ஒரு கலர் ஃபுல்லான பழம். மஞ்சள், சிவப்பு, மஞ்சள் கலந்த பச்சையில் கூட கிடைக்கின்றது. நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், சிம்பிள் சுகர் அதாவது குறைவான அளவு இனிப்பு இருக்கு. தாது உப்புக்கள் அதிகம் கொண்டது. விட்டமின்ஸ் அதிகம் இருப்பதால் கண்ணுக்கு அதிக நன்மையை கொடுக்கின்றது. கால்சியம், பாஸ்பரஸ் அளவு கம்மி இதனால் எனர்ஜி குறைவாகத்தான் கிடைக்கும். ஆனால் எந்த நோயையும் வரவிடாமல் தடுக்கக் கூடிய சக்தி பப்பாளிக்கு உண்டு.

பீட்டா கரோட்டீன் 666 மைக்ரோ கிராம் அளவிற்கு பப்பாளியில் உள்ளது. பீட்டா கரோட்டீன் என்பது கண்களுக்குக் கிடைக்கக்கூடிய தீனி. இது குறைவதால்தான் கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படுகின்றது. பலருக்கு கண்பார்வை மங்குவதற்கும் பீட்டா கரோட்டீன் குறைபாடே காரணம். ஆகவே இந்த பீட்டா கரோட்டீன் பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணக் காய்கள், பழங்களில் அதிகம் கிடைக்கின்றது. பப்பாளி இந்த மூன்று வண்ணத்தையும் கொண்ட சத்தான பழம் இதனால் கண் மருத்துவர்களின் முதல் ஜாய்ஸ் இதுதான்.

பப்பாளியை உட்கொள்வதால் வெளிப்புறத் தோளுக்குப் பளபளப்பைக் கொடுக்கும். தோல் சம்பந்தப்பட்ட எந்த நோயும் ரத்தத்தில் உள்ள கிருமியால் ஏற்படுவது. பப்பாளியை சாப்பிடும்பொழுது ரத்தத்தில் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது. உணவுகளில் கிடைக்கும் சத்துகளைப் பிரித்தெடுக்கும், கணையத்தைப் பாதுகாக்கிறது.

தினமும் காலை பப்பாளி சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாது. மாதவிடாய் பிரச்னை உள்ளவர்களுக்குத் தகுந்த தீர்வு அளிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளியைச் சாப்பிடக் கூடாது என்ற சம்பிரதாயமெல்லாம் கிடையாது. நல்ல பழுத்த பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளாமல் விருப்பப்படும் பொழுது சாப்பிடலாம். இதில் இரும்புச் சத்து அதிகம் ஆகவே குழந்தைக்குப் பலத்தைக் கொடுக்கக்கூடியது. வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழத்தை கொடுத்து வர உடல் மற்றும் எலும்பு வளர்ச்சியில் உறுதியைக் கொடுக்கும்.

இனிப்புச் சுவை குறைவுதான் அதனால் நீரிழிவு நோயாளிகள் 50 முதல் 60 சதவிகிதம் அளவு பப்பாளியை எடுத்துக் கொள்ளலாம், ஒதுக்க வேண்டிய அவசியமில்லை.

சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். கல்லீரல் வீக்கம் குறையும். மேலும் நரம்புகள் பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை பெருக்கவும் பப்பாளி உதவுகிறது.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் கிருமையை அகற்றி தொற்று நோய் பரவாமல் தடுக்கிறது. தினசரி சாப்பிடலாம்.

பப்பாளிக் காயைக் கூட்டாகச் செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். அதே போல் காயைக் குழம்பு வைத்து பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், மற்ற புண்கள் மீது பூச குணமடையும்.அதோடு பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்களின் மேல் தடவி வர புண்கள் ஆறும். குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களுக்கு பூசி வர சிறந்த நிவாரணம் அளிக்கும்.

பப்பாளியின் விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். பப்பாளியின் விதை, மிளைகைப் போன்று இருப்பதால், மிளகிலும் கலப்படம் வந்துவிட்டது.

அழகுக்குச் சொல்ல வேண்டியதே இல்லை பழத்தை முகம், சருமம் என எங்கு பூசினாலும் மிருதுவானத் தன்மை கிடைக்கும்.

>

Comments


Post Comment

(Press Ctrl+g        to toggle between Tamil and English)