சினிமா


    வால்டர் நட்ராஜ்


raghavkumar



வால்டர் : இந்திய தேசமே திரும்பிப் பார்க்கும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் என்ற நட்டி. ஆனாலும் நம் தமிழ் ரசிகர்கள் இவரை ’சதுரங்க வேட்டை’ நட்டியாகத்தான் அவரைப் பார்த்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு மிக சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பர் நம் நட்டி.

’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் வித்தியாசமான நடிப்பைத் தந்திருப்பார். தற்போது சிபிராஜ் நடிக்கும் வால்டர் படத்தில் வில்லனும் இல்லாத நல்லவனும் இல்லாத காவலன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் கெளதம் மேனன் தான் நடிப்பதாக இருந்தது. மேனன் இயக்கத்தில் பிஸியாக இருப்பதால் அவரது கதாபாத்திரத்தை ஏற்க நட்டிக்கு வாய்ப்பு வந்துள்ளது. விடுவாரா நம் நட்டி, வால்டர் படத்தில் கலக்கி விட்டார்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் வால்டரில் நட்டி நடிப்புற்கு தியேட்டரில் விசில் பறக்கும் என்கிறது கோடம்பாக்க வட்டாரம். நம்ம பங்குக்கு நாமும் வெயிட் பண்ணுவோம்.

-ராகவ்குமார்

>

Comments


Post Comment

(Press Ctrl+g        to toggle between Tamil and English)