ஜனாதிபதி மாளிகையில் பத்ம விபூஷன் விருதை பெற்ற ரஜினி!


Posted by-Kalki Teamஇந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்துக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அவருடன் இயக்குனர் எஸ். ராஜமௌலி, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்மவிபூஷண் விருது வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் சகோதரருடன் கலந்துகொண்டார்.Post Comment

Post Comment