வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... மகுடி உள்பட 8 படங்கள் ரிலீஸ்!


Posted by-Kalki Teamஇந்த ஆண்டில் அதிகப் படங்கள் வெளியாவது அநேகமாக இந்த வெள்ளிக்கிழமையாகத்தான் இருக்கும்.

இன்று ஓய், கிடா பூசாரி மகுடி, ஜித்தன் 2, அவன் அவள், ஆதி கோட்டை, ஆய்வுக் கூடம், முதல் தகவல் அறிக்கை, டீ கடை ராஜா படங்கள் வெளியாகின்றன. இவற்றோடு ஜங்கிள் புக், வல்கனோ ரிட்டர்ன்ஸ் மற்றும் தெலுங்குப் படமான சர்தார் கப்பர் சிங் ஆகிய படங்களும் வெளியாகின்றன.

ஓய்

ப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை திருச்சி ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார். கீதன் பிரிட்டோ, ஈஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

கிடா பூசாரி மகுடி

நீண்ட நாளைக்குப் பிறகு நல்ல படம் பார்த்தோம் என விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ள படம் இந்த மகுடி. தமிழ் திரை விருட்சகம் சார்பாக தமிழ்மணி தயாரித்துள்ள இப்படத்தில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம் தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த நட்சத்திரா கதாநாயகியாக நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஜித்தன் 2

ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகமாக வருகிறது இந்த ஜித்தன் 2. இதிலும் ரமேஷ்தான் நாயகன். முதல் பாகத்தை இயக்கிய வின்சென்ட் செல்வா இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுத, ராகுல் இயக்கியுள்ளார். தயாரிப்பாளரும் ராகுல்தான்.

அவன் அவள்

விக்னேஷ் நாயகனாக நடித்துள்ள அவன் அவள் படத்தை ராம்கிரிஷ் மிரிணாளினி இயக்கியுள்ளார். உமா மகேஷ்வரி தயாரித்துள்ளார்.

டீ கடை ராஜா

ராஜா சுப்பையா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள டீ கடை ராஜாவில் நேஹா நாயகியாக நடித்துள்ளார். பன்டூன் டாக்கீஸ் தயாரித்துள்ளது.

ஆதி கோட்டை

திருச்சி மாரிமுத்து தயாரித்துள்ள ஆதி கோட்டை படத்தை சௌமியா ரஞ்சன் இயக்கியுள்ளார். இந்த வாரம் வெளியாகும் பேய்ப் படம் இது.

ஆய்வுக் கூடம்

பாண்டியராஜன், ராஜகணபதி போன்றோர் நடித்துள்ள இந்தப் படத்தை அன்பரசன் இயக்கியுள்ளார். ராஜகணபதி தயாரித்துள்ளார்.

முதல் தகவல் அறிக்கை

மரியம் தயாரிப்பில் பா ராஜகணேசன் இயக்கியுள்ள படம் முதல் தகவலறிக்கை. முஜீப் என்பவர் அறிமுகமாகிறார்.

மீண்டும் கர்ணன்

சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படத்தை இன்று மீண்டும் சில அரங்குகளில் வெளியிடுகிறார்கள். மீண்டும் கர்ணன் என்று தலைப்பிட்டுள்ளனர்.

ஜங்கிள் புக்

இவை தவிர, ஜங்கிள் புக், வல்கனோஸ் ரிட்டர்ன்ஸ் ஆகிய ஹாலிவுட் படங்களும், பவன் கல்யாண் நடித்த சர்தார் கப்பர் சிங்கும் தமிழ்ப் படங்களுக்கு இணையான செல்வாக்கோடு இன்று ரிலீஸ் ஆகின்றன.


Post Comment

Post Comment