விஷால் படத்தில் வடிவேலு!


Posted by-Kalki Team



சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படத்தில் வடிவேலுவும் இணைந்துள்ளார்.

தேர்தலில் பிரசாரம் செய்ததால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வடிவேலுக்கு சில தடைகள் ஏற்பட்டன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிறகு தெனாலிராமன், எலி என இரு படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தில் வடிவேலுவும் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு கத்திச் சண்டை என்று பெயரிட வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

இதனையடுத்து வடிவேலு மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.


Post Comment

Post Comment