மகள் நடிப்பில் இரு மொழி படம் இயக்கும் அர்ஜுன்


Posted by-Kalki Teamஅர்ஜுன் மகள் ஐஸ்வர்யா , பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகமானார். அதில் விஷால் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறாமல போனதால் ஐஸ்வர்யாவுக்கு அடுத்த வாய்ப்புகள் வரவில்லை. இதனால் மேற்கொண்டு நடிக்காமல் தன் தந்தை இயக்கி, நடித்த ஜெய்ஹிந்த் 2 படத்தின் இணை தயாரிப்பாளர் ஆனார்.ஆனால் மகளை எப்படியாவது ஹீரோயினாக ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அர்ஜுன். இதற்காக மகள் நடிக்க தமிழ், மற்றும் கன்னடத்தில் ஒரு படம் இயக்குகிறார். இரு மொழியிலும் ஹீரோயின் ஐஸ்வர்யா என்றாலும் ஹீரோ கன்னடத்திற்கு ஒருவர், தமிழுக்கு ஒருவர். விரைவில் இதுபற்றி முறையான அறிவிப்பு வெளிவர இருக்கிறது.

இதுகுறித்து அர்ஜுன் கூறியதாவது: ஆக்ஷன் படங்கள்தான் என் ரூட். இதுவரை நான் நடித்த படங்களில் பெரும்பாலாவை ஆக்ஷன் படங்கள்தான். இயக்கியதும் ஆக்ஷன் படங்கள்தான். ஆனால் என் மனதில் நீண்ட நாளாக ஒரு காதல் படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதற்காக நீண்ட நாளாக ஒரு கதையும் தயார் செய்து வைத்திருந்தேன். இப்போது அந்த கதையை என் மகள் நடிக்க தமிழ், கன்னடத்தில் தயாரித்து, இயக்க இருக்கிறேன். இது இதுவரை வெளிவந்த காதல் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்கிறார் அர்ஜுன்.


Post Comment

Post Comment