எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய அதிரடிப்பாட்டு!


Posted by-Kalki Teamதமிழ் சினிமாவில் எல்.ஆர்.ஈஸ்வரிக்கென்று ஒரு தனி இடம் உண்டு. பி.சுசீலா மெலோடியான பாடல்களை பாடினால், இவரோ அதிரடியான பாடல்களாக பாடி வந்தார். அதேசமயம் காதோடுதான் நான் பேசுவேன் போன்ற மெலோடி பாடல்களையும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருக்கிறார். அதோடு, எப்படி டி.எம்.செளந்திரராஜன் முருகன் பாடல்களை ஏராளமான பாடியிருக்கிறாரோ அதேபோல் எல்.ஆர். ஈஸ்வரி அம்மன் பக்தி பாடல்கள் நிறைய பாடியிருக்கிறார்.மேலும், ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு சினிமாவில் சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில், தமன் இசையில் டி.ராஜேந்தருடன் இணைந்து கலசலா கலசலா... என்ற குத்துப்பாடலை பாடியிருந்தார். சூப்பர் ஹிட்டான அந்த பாடலுக்கு சிம்பு, மல்லிகா ஷெராவத் ஆகியோர் அதிரடி நடனமாடியிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது அஸ்வின்-ஜனனி அய்யர் நடித்துள்ள தொல்லைக்காட்சி படத்திற்காகவும் ஒரு குத்துப்பாடலை பாடியிருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி. நா.முத்துக்குமார் எழுதிய இந்த பாடலுக்கு தரண் இசையமைத்துள்ளார். முதலில் சாதாரணமான டியூனாக இருந்தபோதும் எல்.ஆர். ஈஸ்வரி அந்த பாடலை துள்ளலுடன் பாடிய பிறகு அதிரடி பாடலாக மாறி விட்டதாம். அதனால் கலசலா பாடலைப்போன்று இந்த பாடலுக்கும் ரசிகர்கள் தியேட்டர்களில் எழுந்து செம ஆட்டம் போடுவார்கள் என்கிறார்கள்.


Post Comment

Post Comment