குக்கூவைத் தொடர்ந்து ஜோக்கராக மாறிய ராஜூமுருகன்


Posted by-Kalki Teamசென்னை: குக்கூ படத்திற்குப் பின் தான் இயக்கியிருக்கும் அடுத்த படத்திற்கு ஜோக்கர் என இயக்குநர் ராஜுமுருகன் பெயர் வைத்திருக்கிறார்.

அட்டக்கத்தி தினேஷ்- மாளவிகா நாயர் நடிப்பில் கடந்த 2014 ஆண்டு வெளியான படம் குக்கூ.இப்படத்தை தொடர்ந்து அடுத்து இவர் இயக்கும் படம் குறித்து எந்த விவரமும் வெளியாகாமலே இருந்தது.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கு ஜோக்கர் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்புகளையும் முடித்து விட்டு தற்போது பெயரை அறிவித்திருக்கிறார் ராஜு முருகன்.

Here is the Firstlook of Our Movie... #RajuMurugansNext #Rajumurugan #cuckoo #DreamWarriorPictures - #JOKER #ஜோக்கர் #innaattumannarkalkathai

ஆரண்ய காண்டம் மற்றும் ஜிகர்தண்டா படங்களில் நடித்த சோமசுந்தரம் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகிகளாக காயத்ரி மற்றும் ரம்யா என 2 புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ட்ரீம் வாரியர் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவிக்கவுள்ளது.Post Comment

Post Comment