ஓட்டுனர் உரிமம் நேரடியாக நீங்களே பெறுவது எப்படி??


Posted by-Kalki Teamஓட்டுனர் உரிமம் நேரடியாக நீங்களே பெறுவது எப்படி??

இப்போது உள்ள வசதிகளின்படி நேரடியாக ஆன்லைன் இல்

1)பழகுனர் உரிமம்.

2)ஓட்டுனர் உரிமம்.

பெற்று கொள்ளலாம்.

கட்டணம் எவ்வளவு :

பழகுனர் உரிமம் - Rs.60(Two wheeler or car, any one only)

Rs.90(Both, Two wheeler and car)

நாம் ஓட்டுனர் பயிற்சி பள்ளி வழியாக செல்லும் போது ரூ.350 (பழகுனர் உரிமம்(LLR)) செலுத்துகிறோம். நேரடியாக செல்லும் போது வெறும் 60 ருபாய் மட்டும் தான்.

ஓட்டுனர் உரிமம் - Rs.250 (For one vehicle only)

250+250=500(Both, two wheeler and car )

ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் Rs. 4500 முதல் Rs.5500(Two wheeler+car, including training for four wheeler) வரை பெறப்படுகிறது.

பழகுனர் உரிமம் பெற Rs.260 முதல் Rs.290 வரை அதிகமாக செலுத்துகிறோம்.

ஓட்டுனர் உரிமம் பெற Rs.2500 முதல் Rs.3000 வரை அதிகமாக

செலுத்துகிறோம்.

இனி நாம் விண்ணப்பிக்கும் முறை பற்றி பார்ப்போம்:

பழகுனர் உரிமம்:

ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை:

http://tnsta.gov.in/transport/transportTamMain.do

ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது அனைத்து விபரங்களையும் கொடுத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்தில் முன்பதிவு பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த குறி்ப்பிட்ட தேதியில் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காட்ட வேண்டும். அனைத்தும் சரியாக இருந்தால் அன்றைய தினமே எல்எல்ஆர்(பழகுனர் உரிமம்) வழங்கப்பட்டு விடும்.

ஆவணங்கள்:

முதலில் எல்எல்ஆர் வாங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை பார்க்கலாம். எல்எல்ஆர் விண்ணப்பிக்க செல்லும்போது கீழ்க்கண்ட ஆவணங்களில் இருப்பிட மற்றும் வயதுச் சான்றுகளாக எடுத்துச் செல்வது அவசியம்.

இருப்பிட சான்றாக கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுக்கலாம்.

ரேஷன் கார்டு

பாஸ்போர்ட்

எல்ஐசி பாலிசி

வாக்காளர் அடையாள அட்டை

டெலிபோன் பில்

மின்கட்டண ரசீது

குடிநீர் கட்டண ரசீது

சாதிச் சான்று மற்றும் தாசில்தாரால் வழங்கப்பட்ட வருமானச் சான்று

அரசு ஊழியர்களின் வருமானச் சான்று

வயதை நிரூபிப்பதற்கான சான்றுகளாக கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்

பள்ளிச் சான்று

பிறப்பு சான்று

பான் கார்டு

சிவில் சர்ஜன் தகுதியுடைய டாக்டர்கள் வழங்கும் வயது சான்று

நீதிமன்றத்தால் வழங்கப்படும் வயது சான்று

இவற்றில் இரண்டு ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லுங்கள். அங்கு எல்எல்ஆருக்கு வழங்கப்படும் படிவம் 1 மற்றும் 2 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மேற்கண்ட ஆவணங்களை இணைத்து 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை இணைத்து துணை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

எல்எல்ஆர் செல்லுபடியாகும் காலம் :

எல்எல்ஆர் பெற்று 30 நாட்களுக்கு பிறகு நிரந்தர லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், எல்எல்ஆர் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் இதை வைத்து நிரந்தர லைசென்ஸ் பெற முடியும். இந்த எல்எல்ஆர் காலாவதியானால் நீங்கள் புதிதாக எல்எல்ஆர் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டியதுதான்.

ஓட்டுனர் உரிமம் பெறுவது எவ்வாறு?

பழகுனர் உரிமம்(எல்எல்ஆர்) பெற்ற முப்பது நாட்களில் சாலை விதிகளை நன்றாகப் புரிந்துகொண்டு, வாகனம் ஓட்டிப் பழகி, நெரிசல் மிகுந்த இடங்களிலும், வாகனத்தை ஓட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையை பெற்று விட்டீர்களா! இப்போது நீங்கள் தாரளமாக டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிக்க தகுதியானவராகிவிட்டீர்கள்.

ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்க : http://transport.tn.nic.in/transport/appointment.do?_tq=1a38059e15442b6fca9c88d4a3ad8978 என்ற முகவரியை கிளிக் செய்யவும்.

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில்,படிவம் 4, படிவம் 5 என்று தனித்தனி விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் :

1.உங்களுடைய பழகுனர் உரிமம்.

2.நீங்கள் ஓட்டிக் காட்டப்போகும் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்.

3.அந்த வாகனத்தின் இன்ஷ்யூரன்ஸ்

4.மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்.

5.வாகன உரிமையாளரிடமிருந்து, அந்த வாகனத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் கடிதம்.

6.ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப் படம்.

இதன்பின், நடைபெறும் ஓட்டுனர் தேர்வில் நீங்கள் வாகனத்தை சரியாக இயக்கத் தெரிகிறதா மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுகிறீர்களா என்பதை பார்த்து உங்களக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் டிரைவிங் லைசென்ஸ் வழங்க பரிந்துரைப்பார். இந்த தேர்வில் தோல்வி அடைந்தால் 15 நாட்களுக்கு பின்னர் மீண்டும் விண்ணப்பித்து இதேபோன்று வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும். அதில், வெற்றி பெற்றால் உங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் உடனே கிடைத்து விடும்.

http://tnsta.gov.in/transport/transportTamMain.do இந்த முகவரிக்கு சென்று உங்கள் புகார்களையும் பதிவு செய்யலாம்.

மேற்கூறியவற்றை சுருக்ககமாக:

http://tnsta.gov.in/transport/transportTamMain.do

இந்த இணைய தளத்தில் தாங்கள் விண்ணப்பதை பூர்த்தி செய்து தங்களுக்கு நேரில் சென்று சமர்பிப்பதர்கான தேதி மற்றும் நேரத்தினை தங்களின் வசதிகேற்ப முன்பதிவு செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை PRINT OUT எடுத்து வைத்து கொள்ளவும். மேலும் விண்ணபத்தில் கேட்கப்பட்ட சான்றுகளை நகல்கள் (ADDRESS PROOF, IDENTY PROOF, EDUCATIONAL PROOF) எடுத்து வைத்து கொள்ளவும்.

பிறகு, தெரிவு செய்யப்பட்ட நாளன்று வட்டார அலுவலகத்திலுள்ள CASH COUNTER-ல் L.L.R-க்கு 65.00 ரூபாய் செலுத்தி ரசீதினை பெற்று கொள்ளவும்

பிறகு, அருகிலுள்ள PHOTO COUNTER-க்கு சென்று அங்கு விண்ணபத்துடன் பணம் செலுத்தியதற்கான ரசிதை கான்பிக்கவும் அவர்கள் தங்களை போட்டோ எடுத்து பிறகு கையெழுத்து போட சொல்வார்கள்

பிறகு. தேர்வு அறைக்கு செல்லவும் அங்கு விண்ணபத்தினை சரிப்பார்ப்தற்கான அதிகாரியிடம் சென்று தங்கள் விண்ணப்பத்தினை கொடுக்கவும் அவர்கள் சரிபார்தற்காக விண்ணப்ப்த்தின் இனைக்கப்பட்ட நகல் சான்றிகான ஒரிஜினலயும் கேட்பார்கள், நீங்கள் கான்பித்த பிறகு அவர்கள் அங்கிருக்கும் ரெஜிஸ்டரில் மீண்டும் ஒரு கையெழுத்து போட சொல்வார்கள் பிறகு சிறிது நேரத்தில் தங்கள் பெயரை தேர்வெழுத அழைப்பார்கள் தேர்வு எழுதிய பிறகு சிறிது நேரம் காத்த்ருக்கவும் பிறகு, தங்கள் பெயரை அழைத்து L.L.R-னை கொடுப்பார்கள் (தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே L.L.R செல்லும்)

Driving Licencse Actual cost : Rs.350(Two wheeler only , including LLR)

Driving License Actual cost : Rs.650(Two wheeler+Four wheeler)

Driving License through Driving school : Rs.1200(Two wheeler)

Driving License through Driving school : Rs.4500 to Rs.5500(Two wheeler+Four wheeler).

அனைவரும் அறிய பகிர்வோம்...


Post Comment

Post Comment