ரஜினி ஸ்டைலில் டைரக்டர் மகேந்திரன்!


Posted by-Kalki Teamநாம் மூவர், சபாஷ் தம்பி, தங்கபதக்கம் உள்பட சுமார் 20 படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் டைரக்டர் மகேந்திரன். அதையடுத்து, முள்ளும் மலரும் படத்தை முதன்முதலாக இயக்கினார். தொடர்ந்து உதிரிப்பூக்கள், ஜானி என பல படங்களை இயக்கிய அவர் கடைசியாக சாசனம் என்ற படத்தை இயக்கினார்.

ஆக, இதுவரை அவர் 40 படங்களில் பணியாற்றியிருக்கிறார். பின்னர் பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்து வந்தார்.இந்த நிலையில், தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் மகேந்திரன். இதற்கு முன்பு காமராஜ் என்ற படத்தில் நடித்துள்ள அவர், தற்போது தெறியில நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

அவர் தனது படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய டைரக்டர் அட்லிதான் அவரை சந்தித்து தனது படத்தின் கதையை சொல்லியிருக்கிறார். அதோடு, இதில் நீங்கள் விரும்பிய கேரக்டரில் நடிக்கலாம் என்றும் சொன்னாராம்.அதையடுத்துதான், நான் வில்லனாகவே நடிக்கிறேன் என்று சொன்னாராம் மகேந்திரன்.

அந்த வகையில், கபாலி ரஜினி ஸ்டைலில் வெள்ளை தாடி, வெள்ளை மீசை கெட்டப்பில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு படம் முழுக்க கலக்கியிருக்கிறாராம் டைரக்டர் மகேந்திரன். அவரது நடிப்பைப்பார்த்து விட்டு வில்லனாகவும் டைரக்டர் மகேந்திரன் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்கிறார்கள்.


Post Comment

Post Comment