முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை


Posted by-Kalki Teamஇந்தியா முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு முன்னெச்சரிக்கை பரிசோதனை செய்யப்பட்டது

முதலாவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை பரிசோதனை செய்யப்பட்டதில் முதல்வரின் உடல் வெப்பநிலை நார்மலாக இருப்பது கண்டறியப்பட்டது

இதேபோல் மற்ற அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏகளுக்கும் தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அனைவருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளனPost Comment

Post Comment