பிரதமரின் அறிவுரையை ஏற்ற சங்கங்கள்: வரும் ஞாயிறன்று தனியார் பால் விநியோகம் கிடையாது...ஓட்டல்கள் மற்ற


Posted by-Kalki Teamமக்களின் ஊரடங்கு என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று நாளை மறுநாள் தமிழகத்தில் ஓட்டல்கள், கடைகள் மூடப்படும் என்றும், தனியார் பால் விநியோகம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 160 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது.

இந்நிலையில், இந்நோயின் தாக்கம் குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நேற்று இரவு உரையாற்றினார். அப்போது, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டர். அந்த நேரத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், இந்த வைரசை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தனியார் பால் விநியோகம் ரத்து

இந்நிலையில் பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்று வரும் ஞாயிறன்று தனியார் பால் விநியோகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 22ம் தேதி காலை 07.00 மணி முதல் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதாலும், காலை 07.00 மணிக்கு முன்பாக அனைத்து பகுதிகளுக்கும் பால் விநியோகம் செய்ய இயலாது என்பதாலும், தமிழகத்தில் நாளை மறுநாள் (22/03/2020) மட்டும் தனியார் பால் விநியோகம் செய்யப்படமாட்டாது. மேலும் நாளை கூடுதல் நேரம் பால் விநியோகம் நடைபெறும் என்றும், தேவையான அளவு பாலை நாளையே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

ஓட்டல்கள் மூடப்படும்

அதேபோல், மார்ச் 22ம் தேதி தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 1 லட்சம் ஓட்டல்களை மூடுவதாக ஓட்டல்கள் சங்கம் அறவித்துள்ளது.

கடைகளும் மூடப்படும்..

பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்று வரும் ஞாயிறன்று கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, மார்ச் 22ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளார். 22ம் தேதி சுய ஊரடங்களை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார் என கூறிய அவர், சீல் வைக்கப்பட்ட நிறுவனங்கள் மீதான நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை மறுநாள் (22/03/2020) செயல்படாது என அனைத்து வியாபாரிகள் சங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.Post Comment

Post Comment