ஒரு படமும் இல்லை.. டிரை டே ஆன ஃபிரைடே.. மூடப்பட்ட தியேட்டர்கள்.. சோகப் பிடியில் தொழிலாளர்கள்!


Posted by-Kalki Teamவெள்ளிக்கிழமை ஆனால், காலையில் எழுந்து குளித்து முடித்து கோயிலுக்கு போவதை விட, சினிமா தியேட்டருக்கு FDFS செல்லும் இளைஞர்கள் கூட்டம் தான் இந்தியாவில் அதிகம்.

ஆனால், இந்த கொரோனா வைரஸ் வந்ததும் வந்தது, தியேட்டர்கள், மால்கள் என பொதுமக்கள் கூடுவதற்கு இடமின்றி ஒரே அடியாக வேட்டு வைத்துள்ளது.

முதல்முறையாக தியேட்டர்கள் திறக்கப்படாமல், புதுப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்படுகிறது.

நஷ்டம்

மிகப்பெரிய நஷ்டம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பல தொழில் துறைகள் முடங்கி மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு உலகளவில் உண்டாகி உள்ளது. சினிமா துறையையும் இந்த கொரோனா வைரஸ் சும்மா விடவில்லை. அதிகப்படியாக பொதுமக்கள் கூடும் இடம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் மிகப்பெரிய நஷ்டத்தை சினிமா துறை சந்தித்துள்ளது.

அப்செட்

தயாரிப்பாளர்கள் அப்செட்

கடந்த வாரம் வெளியான அசுரகுரு, வால்டர் மற்றும் தாராள பிரபு உள்ளிட்ட தமிழ் படங்களின் தயாரிப்பாளர்கள், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். பல கோடிகளை செலவு செய்து படம் எடுத்து, ரிலீஸ் ஆகி மூன்றே நாட்களுக்குள் தியேட்டர்கள் மூடப்பட்டதால், ரீ ரிலீஸ் செய்யும் யோசனையில் இருக்கின்றனர்.

இந்த வாரம்

இந்த வெள்ளிக்கிழமை

அதே போல வெள்ளிக்கிழமையான இன்றும் சில சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி இருந்தன. ஆனால், திடீரென தியேட்டர்கள் மூடப்பட்டதால், ரிலீஸ் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. காவல்துறை உங்கள் நண்பன், யோகி பாபுவின் காக்டெயில், ஞானசெருக்கு, சூடு உள்ளிட்ட சில படங்கள் இன்று ரிலீசாக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல்

ஏப்ரல் ரிலீஸாவது?

மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு இந்த மாத இறுதிக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டால் மட்டுமே, ஏப்ரல் மாதம் ரிலீசுக்கு தயாராகி வரும் மாஸ்டர் உள்ளிட்ட பெரிய படங்களின் ரிலீஸ் திட்டமிட்டபடி நடைபெறும், இல்லையென்றால் சினிமாவை நம்பி இருக்கும் கடைநிலை ஊழியர்களின் நிலை பெரிதும் பாதிக்கப்படும்.Post Comment

Post Comment