ஹோம புகையில் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?


Posted by-Kalki Teamநாம் ஆலயங்களிலும் வீடுகளிலும் பல்வேறு வகையான ஹோமங்கள் செய்வதைக் காண்கிறோம். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றது. ஆனால் எந்த ஹோமம் செய்தாலும் அது நமது நன்மைக்காகவே செய்யப்படுகிறது.

பயன்கள்:

ஹோமத்தில் பல்வேறு மூலிகைகள் திரவியங்கள் இடப்படுகின்றன அதாவது பலாசு, கருங்காலி, அரசு, அத்தி, சந்தனக்கட்டை, எள், உழுந்து, நெற்பொறி, பயறு, நெல், வன்னி, ஆல், வில்வம், நாயுருவி, தர்ப்பை, வெள்ளெருக்கு, தேங்காய், மா, நெய், எருக்கு, அறுகு, முருக்கு இவை அனைத்தும் சேர்ந்து எரிந்து அதிலிருந்து வரும் புகையால் காற்றில் உள்ள நச்சுக் கிருமிகள் அனைத்தும் முற்றாக அழிந்துவிடுகிறது.

அத்தோடு இவற்றால் இரசாயன மாற்றம் ஏற்பட்டு அந்த வாயுவை நாம் சுவாசிப்பதால் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல்புண், தலைவலி, போன்ற நோய்கள் நீங்குகின்றது. இந்தப் புகை நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது

ஆனால் நம்மில் சிலர் இதன் உண்மை பலனை புரிந்துகொள்ளாமல் ஹோமப் புகையைப் பார்த்து அஞ்சுகின்றனர். இனியாவது ஆலயத்தில் ஹோமம் செய்தால் அருகில் சென்று ஹோமப் புகையை நன்றாக சுவாசியுங்கள் ஹோமத்தில் கலந்துகொண்டு நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறுவோம். காற்றில் கலந்து வரும் நச்சுக்களை நீக்கி நல்ல சுத்தமான காற்றை பெறுவோம்.Post Comment

Post Comment