உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி குறிப்பிடுவது கட்டாயம்: இந்திய உணவு பாதுகாப்பு ம


Posted by-Kalki Teamஉதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி குறிப்பிடுவது கட்டாயம் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது, பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் இனிப்புகளில் தயாரிப்பு தேதியை குறிப்பிடுவது கட்டாயமாக உள்ளது. இந்நிலையில், பாக்கெட்டில் அடைக்காமல், உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி மற்றும் எந்த தேதிவரை சாப்பிட உகந்தது என்று குறிப்பிடுவது, வருகிற ஜூன் 1ம் தேதியில் இருந்து கட்டாயம் ஆக்கப்படுகிறது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் இதை தெரிவித்துள்ளது. கண்ணாடி பெட்டியிலோ, தட்டிலோ வைக்கப்படும் உதிரி இனிப்புகளிலும் மேற்கண்ட விவரங்களை எழுதிவைக்க வேண்டும் என்று அந்த ஆணையம் கூறியுள்ளது.

கண்ணாடி பெட்டியிலோ, தட்டிலோ வைத்து விற்கப்படும் உதிரி இனிப்புகளிலும் மேற்கண்ட விவரங்கள் எழுதி வைக்க வேண்டும் என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறதா இல்லையா என உணவு பாதுகாப்பு ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.Post Comment

Post Comment