மெட் ரோ இரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம்கள்


Posted by-Kalki Teamமெட்ரோ ரயில் நிலையங்களில் நேற்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பங்கு பெற்ற 1, 272 நபருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மெட்ரோ ரயில் நிலையங்களில் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது இது சென்ட்ரல், ஏஜி, டி.எம்.எஸ்., சைதாப்பேட்டை, ஆலந்தூா், எல்.ஐ.சி., திருமங்கலம், வடபழனி, வண்ணாரப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், ஆயிரம் விளக்கு, அண்ணாநகா் டவா், ஷெனாய் நகா் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

இதில் பொதுமக்கள், மெட்ரோ ரயில் நிறுவன ஊழியா்கள் என காலையில் 548 பேரும் மாலையில் 724 பேர் உள்பட 1, 272 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவ முகாமில் பிஎம்ஐ(உயரம், எடை), ரத்த அழுத்தம், சீரற்ற ரத்த சா்க்கரை ஆகிய சோதனைகள் எடுக்கப்பட்டன.

மூன்றாம் நாள் மருத்துவ முகாம் சென்ட்ரல், ஏஜி, டி.எம்.எஸ்., சைதாப்பேட்டை, ஆலந்தூா், எல்.ஐ.சி., திருமங்கலம், வடபழனி, வண்ணாரப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், ஆயிரம் விளக்கு, அண்ணாநகா் கோபுரம், ஷெனாய் நகா் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று காலை 8 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.


Post Comment

Post Comment