கார்த்தி சிதம்பரம் ரூட் கிளியர் செய்யும் ப.சிதம்பரம்! - தமிழக காங். தலைவராக விரைவில் அறிவிப்பு?


Posted by-Kalki Teamதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கார்த்தி சிதம்பரத்தைக் கொண்டுவருவதற்கான வேலைகளில் ப.சிதம்பரம் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறதோ இல்லையோ, தலைவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது... அனைவருக்கும் இடையே கோஷ்டி மோதல் வேறு... பிரிக்க முடியாதது தமிழக காங்கிரஸ் கமிட்டியும் கோஷ்டி மோதலும் என்று சொல்லும் அளவுக்கு நாளுக்கு நாள் கட்சிக்குள் குடிமிபிடி சண்டை நடந்துவருகிறது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்று சொல்லப்பட்ட கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்ட பிறகு புதிதாக கோஷ்டி உருவானதுதான் மிச்சம்.தமிழகத்தில் கட்சியை வளர்க்கும் பணி நடைபெறவில்லை என்று புகார் எழுந்துள்ளது.மூத்த தலைவர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு இளம் தலைவர்களை கொண்டுவர வேண்டும் என்று பேச்சு எழுந்துள்ளது.

இதனால் தன்னுடைய மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியைப் பெற்றுத்தர ப.சிதம்பரம் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து சோனியாவிடம் பேசி சரிக்கட்டி வருவதாகவும் விரைவில் தலைவர் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறி சிதம்பரம் சிக்கலில் மாட்டினார். இதனால் தலைவர் பதவி நியமனம் தாமதமாவதாகவும் அனைத்தையும் சரி செய்து விரைவில் அறிவிப்பு வெளியாக செய்வார் என்றும் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.Post Comment

Post Comment