குழந்தைகளுக்கு விருப்பமான ஃபிரைடு சீஸ் கியூப்ஸ் :


Posted by-Kalki Teamஃபிரைடு சீஸ் கியூப்ஸ் மிக சுவையான ஸ்நாக்ஸ் மட்டுமல்ல, ரொம்ப சுலபமாக சமைக்கவும் முடியும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பெரிய சீஸ் கியூப்ஸ் - 6

முட்டை - 2

மைதா மாவு - கையளவு

புதினா - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மிளகு - 1/2 தேக்கரண்டி

பிரட் தூள்கள் - 1/2 கப்

ஃபிரைடு சீஸ் கியூப்ஸ்

செய்முறை

புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

மைதா மாவோடு உப்பு, புதினா, பொடித்த மிளகு எல்லாம் சேர்த்து உங்கள் கைகளால் நன்றாக கலந்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.

மற்றொரு கிண்ணத்தில் பிரெட் தூளை வைத்து கொள்ளவும்.

பெரிய சீஸ் கியூப்பை மாவில் போட்டு பிரட்டி அடுத்து முட்டையில் பிரட்டிய பின்னர் பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.

இவ்வாறு மீதமிருக்கும் சீஸ் கியூப்ஸையும் இவ்வாறே கலக்குங்கள்.

ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் சீஸ் பந்துகளை போட்டு பொரியுங்கள். தங்க பழுப்பு நிறம் வரும் வரை, மிதமான சூட்டில் பொரிக்கவும்.

சூடான ஃபிரைடு சீஸ் கியூப்ஸ் பரிமாற தயார்


Post Comment

Post Comment