சோள காரக் குழிப் பணியாரம் :


Posted by-Kalki Teamதேவை:

வெள்ளை சோளம் - 4 கப், இட்லி அரிசி - 1 கப், உருட்டு உளுந்து - 1 கப், பெரிய வெங்காயம் - 2, கொத்துமல்லி, கறிவேப்பிலை, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய் - தாளிக்க.

செய்முறை:

வெள்ளை சோளம், இட்லி அரிசியை நன்கு களைந்து, நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். உருட்டு உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரிசி, சொளத்தை கிரைண்டரில் அரைத்துவிட்டு, உளுந்தை அரைக்கவும்.பின் இரண்டையும் ஒன்றாகக் கலந்து, உப்புப் போட்டு 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய் தாளித்து மாவில் கொட்டவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலையையும் மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு பணியாரக் குழியில் எண்ணெய்விட்டு, மாவை ஊற்றி வெந்ததும், திருப்பிப் போடவும். பொன் நிறத்தில் பளபளக்கும் காரப்பணியாரங்கள் தயார். தேங்காய், பொட்டுக்கடலை சட்னியுடன் இந்தப் பணியாரங்களைச் சாப்பிட்டால்... சுவையோ சுவைதான்.

- ச.ஜெயலட்சுமி, கொரட்டூர்.Post Comment

Post Comment